Friday, 7 November 2014



ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வரும் 9-ம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்.எஸ்.எஸ். ஆண்டு விழா பேரணி நடத்த அந்த அமைப்பு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சில இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டது.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை, கோவை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட காவல் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், பொது அமைதியை நிலைநாட்டவும் பேரணிக்குத் தடை விதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

ஆர்எஸ்எஸ் சார்பில் வாதாடிய வழக்க்கறிஞர்கள் நாட்டின் எந்த ஒரு மாநிலத்திலும் தடை விதிக்காத பட்சத்தில் தமிழகத்தில் மட்டும் தடை விதிப்பது உள்நோக்கம் கொண்டது , மேலும் இந்திய - சீனப்போரில் சிறப்பாக ராணுவத்துக்கு உதவியாக செயல்பட்ட காரணத்தால் 1963 ல் நடைபெற்ற சுதந்திர தின அணிவகுப்பில் கலந்துகொள்ள நேரு அழைப்பு விடுத்த காரணத்தால் முழு சீருடையோடு கலந்துகொண்டனர். இந்த கவுரவம் வேறு எந்த அமைப்புக்கும் வழங்கப்படாதது என்பதை நீதிமன்றத்தில் எடுத்துரைத்தனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், பேரணிக்கு  அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

பத்திரிக்கைச்செய்திகள்

0 comments:

Post a Comment