சென்னை : ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, அந்தந்த மாவட்ட போலீசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உத்தரவிடப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ்., நிறுவன தினத்தை ஒட்டி, சென்னை, கோவை, தூத்துக்குடி, திருவாரூர், கரூர், தென்காசி,
தக்கலை ஆகிய நகரங்களில், வரும், 9ம் தேதி, ஊர்வலம், நிகழ்ச்சி நடத்த, முடிவு
செய்யப்பட்டது. இந்த ஊர்வலத்துக்கு, அந்தந்த மாவட்டங்களில், போலீசார் அனுமதி
அளிக்கவில்லை. இதையடுத்து, சென்னையைச் சேர்ந்த, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி, துரைசங்கர், கோவை மாவட்ட ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி பாலகிருஷ்ணன் மற்றும் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள், ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்துக்கு, அனுமதியளிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தனர்.
அமைதியாக : மனுக்களில், 'ஆர்.எஸ்.எஸ்., அமைப்பானது, தேசிய, தேசப்பக்தி, பண்பாடு கொண்ட அமைப்பு. ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில், ஊர்வலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, தமிழகத்தில், அனுமதி மறுக்கப்படுகிறது. அமைதியாக நடக்க உள்ள, ஊர்வலத்துக்கு அனுமதியளிக்க, உத்தரவிட வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. இம்மனுக்கள், நீதிபதி ராமசுப்ரமணியன் முன், விசாரணைக்கு
வந்தன. மனுக்களுக்கு பதிலளிக்கும்படி, மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, வரும், 6ம் தேதிக்கு, நீதிபதி ராமசுப்ரமணியன் தள்ளிவைத்தார்.
-தினமலர்.
0 comments:
Post a Comment