Friday, 7 November 2014


பெரம்பலூர் மாவட்டத்தில் பொது விநியோக திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும் சிறப்பு பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம் நாளை (சனிக்கிழமை) அனைத்து வட்டங்களிலும் நடைபெற உள்ளது. 

இதில் பெரம்பலூர் வட்டம் களரம்பட்டி கிராமத்தில் தனித்துணை கலெக்டர் பன்னீர்செல்வம்  தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டம், தொண்டபாடி கிராமத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலும், குன்னம் வட்டம் முருக்கன் குடி கிராமத்தில் துணைப்பதிவாளர் (பொது வினியோக திட்டம்) ராஜா
சுவாமிநாதன் தலைமையிலும், ஆலத்தூர் வட்டம் நக்க சேலம் கிராமத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முனு.துரைசாமி தலைமையிலும் நாளை காலை 10 மணி அளவில் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பொது மக்கள் கலந்து கொண்டு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயனடையலாம்.

-தினமணி.

0 comments:

Post a Comment