Wednesday, 5 March 2014

தேர்தலில் எந்த வேட்பாளருக்கு, எந்தச் சின்னத்தில் வாக்களித்தோம் என்பதை வாக்குச் செலுத்திய உடனேயே வெளிவரும் காகித ஸ்லிப் மூலம் வாக்காளர்கள் தெரிந்து கொள்ளும் புதிய முறை சோதனை அடிப்படையில் இந்த மக்களவைத் தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
கடந்த தேர்தல்களில் இதுபோன்ற வசதி இல்லை.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்த உடன் அதை உறுதி செய்யும் விதத்தில் காகித ஸ்லிப் ஒன்று வெளியே வரும். அதில் எந்த வேட்பாளருக்கு எந்தச் சின்னத்தில் வாக்களித்தோம் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், இந்த காகித ஸ்லிப் பின்னர் அருகில் உள்ள சீலிடப்பட்ட பெட்டிக்கு அதுவாகவே சென்றுவிடும்.
இதற்காக 20,000 காகித ஸ்லிப் வழங்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இவை குறிப்பிட்ட சில வாக்குச்சாவடிகளில் வைக்கப்படும்.


நன்றி-தினமணி.

Tuesday, 4 March 2014

பெரம்பலூர்,
பெரம்பலூர் எம்.பி. தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ஆர்.பி. மருதராஜா நேற்று கவுல்பாளையத்தில் தனது தேர்தல் பிரசாரத்தை அமைச்சர் பூனாட்சி மற்றும் ரத்தினவேல் எம்.பி. தொடங்கிவைத்தனர்.
அ.தி.மு.க. வேட்பாளர்
பெரம்பலூர் அருகே உள்ள கவுல் பாளையத்தில் உள்ள எம்ஜிஆர் உருவ சிலைக்கு பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் மருதராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கிருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கி கவுல்பாளையம் ஊராட்சி முகப்பு, ஊரின் பிரதான வீதிகள் மற்றும் கல்உடைக்கும்தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் காளியம்மன் நகர் பொதுமக்களிடம் ஓட்டுசேகரித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கதர் மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சர் பூனாட்சி, எம்.பி ரத்தினவேல், வேளாண் வணிக வாரியத்தலைவர் ரவிச்சந்திரன், முன்னாள் அமைச்சர் சிவபதி, பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிழ்செல்வன் ஆகியோர் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். பிரசாரத்தின் போது அரசின் சாதனை திட்டங்கள், நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துக்கூறி ஓட்டுசேகரித்தனர்.
நிர்வாகிகள்
ஓட்டு சேகரிப்பில் பெரம்பலூர் நகர செயலாளர் ராமச்சந்திரன், நகராட்சி தலைவர் ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் என்.கே. கர்ணன், புதுவேட்டக்குடி கிருஷ்ணசாமி, கண்ணுசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் ராஜாராம், மாவட்ட அணி நிர்வாகிகள் செல்வகுமார் (இளைஞர் பாசறை) கார்த்திகேயன்(ஜெ.பேரவை) ராஜேஸ்வரி, (மகளிரணி) மாவட்ட நிர்வாகிகள் பூவைசெழியன், ராணி, கவுரி ஜெ.பேரவை ஒன்றியத்தலைவர் எசனை பன்னீர் செல்வம், மாவட்ட பிரதிநிதி சந்திரசேகரன், காடூர் ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நன்றி-தினத்தந்தி.
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலுக்குச் சொந்தமான திருமணம் மண்டபத்தில் கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த மணமக்களுக்கு திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திருமண வீட்டாரின் உறவினர் ஒருவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட மர்மநபர் திருமண மண்டபத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகத் தெரிவித்தாராம்.
அதைத் தொடர்ந்து தகவலின் பேரில் அங்குச்சென்ற பெரம்பலூர் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சோதையில் ஈடுபட்டனர். முடிவில் அங்கு வெடிகுண்டு எதுவும் இல்லையெனத் எனத் தெரியவந்தது. தொடர்ந்து திருமணமும் நடைபெற்றது.
அதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சோனல் சந்திரா உத்திரவின்பேரில் பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் போலீசார் உறவினர் செல்போனுக்கு வந்த செல்போன் நம்பரை வைத்து யார் என்று கண்டுபிடித்தனர். அதில் மருவத்தூர் போலீஸ் பகுதி கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த முத்து என்பரது மகன் அலெக்சாண்டர் (வயது29) பெண் கேட்டு தாரததால் அதன் முன் விரோதம் காரணமாக திருமணத்தை தடுத்து நிறுத்தவே செல்போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரிவித்தார்.
அதன்பேரில் பெரம்பலூர் போலீசார் அலெக்சாண்டர் (வயது29) ஓட்டல் மாஸ்டர் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

நன்றி-மாலைமலர்.

Sunday, 2 March 2014

வேப்பந்தட்டை அருகே ஏரியில் தண்ணீர் குடிக்க வந்த போது சேற்றில் சிக்கிய மானை பொதுமக்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மான்கள் கூட்டம்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகாவில் வெண்பாவூர், கை.களத்தூர், அய்யனார்பாளையம், மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் வனத்துறைக்கு சொந்தமான ஆயிரக் கணக்கான ஏக்கர் பரப்பளவில் சமூக வனக்காடுகள் உள்ளது.
இந்த வனக்காடுகளில் நூற்றுக்கணக்கான மான்கள் கூட்டம் கூட்டமாக வசித்து வருகிறது. இந்த மான்கள் மழைகாலங்களில் வனப்பகுதியில் உள்ள குட்டை மற்றும் நீர்த்தேக்கங்களில் தேங்கியுள்ள தண்ணீரை குடித்து உயிர் வாழும்.
வனப்பகுதியை விட்டு
வெயில் காலங்களில் வனப்பகுதியில் மான்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் மான்கள் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியே வந்து விவசாய கிணற்று பாசன வாய்க்கால் மற்றும் ஏரி, குளம் போன்றவற்றில் தேங்கியுள்ள தண்ணீரை குடிக்கும்.
அவ்வாறு மான்கள் வனப்பகுதியை விட்டு வெளியே வரும் போது விவசாய பயிர்களை மான்கள் சேதப்படுத்துவதும், ஊருக்கு அருகில் மான்கள் வரும் போது அவற்றை தெரு நாய்கள் துரத்தி கடித்து குதறி உயிரைப்பறிப்பதும் இப்பகுதி யில் வாடிக்கையான ஒன்றாக உள்ளது.
சேற்றில் சிக்கிய மான்
இந்நிலையில் வேப்பந் தட்டை அருகே திருவாலந் துறை ஏரியில் 2 வயது மதிக்கத்தக்க மான் ஒன்று தண்ணீர் குடிப்பதற்காக வந்த போது சேற்றில் கால் சிக்கிக்கொண்டு வெளியே வரமுடியாமல் தடுமாறியது. இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து சேற்றிலிருந்து மானை மீட்டு வனசரகர் பாலகிருஷ்ணனுக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர் வனசரகர் உத்தர வின் பேரில் வனக்காப்பாளர் பொன்னுசாமி மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மானை மீட்டு சென்று வெண்பாவூர் வனப்பகுதியில் கொண்டு போய்விட்டனர்.

நன்றி-தினத்தந்தி.

Saturday, 1 March 2014

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி அசாம் மாநிலத்தில் கடந்த வாரம் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது குவகாத்தியில் நடைபெற்ற விழாவில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கூடியிருந்தனர்.
கூட்டத்தில் ராகுல் காந்தி நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு குறித்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது பெண் கள் முண்டியடித்தபடி நெருங்கினர். அப்போது பெண்  கவுன்சிலர் போண்டி திடீரென ராகுலை நெருங்கி தலையில் முத்தம் கொடுததார். இன்னொரு இளம்பெண் ராகுலை நெருங்கி வந்து  கன்னத்தில் முத்தமிட்டார்  காங்கிரஸ் பெண் கவுன்சிலர் போன்டி ராகுல்காந்தியை அனைவரது முன்னிலையிலும் கன்னத்தில் முத்தமிட்டார்.
இந்நிலையில் முத்தமிட்ட இந்த படம் மறுநாள் அனைத்து  செய்திதாள்களிலுமி வெளியானது. இந்த நிலையில் ராகுல் காந்தியை முத்தமிட்ட பெண் கவுன்சிலர் போன்டி தீக்காயங்களுடன் அவரது வீட்டில் இறந்து கிடந்தார்.
அந்த பெண்ணின் கணவர் 40 சதவீதம் எரிந்த நிலையில் இருந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராகுல்காந்தியை முத்த மிட்டது தொடர்பாக தான் போன்டிக்கும், அவரது கணவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே மனைவியை அவர் எரித்து கொன்றதாக கூறப்படுகிறது.
போன்டி, கணவரால் எரித்து கொல்லப்பட்டரா? அல்லது தீக்குளித்து தற்கொலை செய்தாரா? என்பது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். ,இந்நிலையில் எரித்துக் கொல்லப்பட்ட பெண் கவுன்சிலர் ராகுல் காந்தியை முத்தமிட்டவர் அல்ல என்று அசாம் போலீசார் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

நன்றி-தினமணி.
பெரம்பலூர், :  இன்று (1ம்தேதி) முதல் ஒருங்கிணைந்த வேளாண் மை அலுவலகக் கட்டிடத்தில் மண்ஆய்வுக் கூடங்கள் செயல்படும். உரிய ஆய்வுக்கட்டணத்தை செலுத்தி விவசாயிகள் பயன்பெறலாம் என வேளாண் இணைஇயக்குநர் அழகிரிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண்மை துறையின் சார்பாக மாவட்ட அளவில் ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலக கட்டிடம், கலெக்டர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தின் அருகே புதிதாகக் கட்டிமுடிக்கப்பட்டு, தமிழக முதல்வரால் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
 இந்த வளாகத்தில் வேளாண்மை மற்றும் அதனைச்சார்ந்த துறைகளான தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகத்துறை, விதைச் சான்றுத்துறை, வேளாண் பொறியியல் துறை, மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மற்றும் மண் ஆய்வுக்கூடங்கள் ஆகியவை செயல் பட உள்ளது.
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு விவசாயிகள் மண் மற்றும் பாசனநீரை உடனுக்குடன் ஆய்வு செய்து, ஆய்வு முடிவுகளை வழங்கும் வகையில் மண் ஆய்வுக்கூடம் மற்றும் நடமாடும் மண்ஆய்வுக்கூடம் ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலகக் கட்டிடத்தின் கீழ்தளத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் ம்தேதி முதல் கலெக்டர் அலுவலகத்தின் தென்புறமுள்ள ஒருங்கிணைந்த வேளாண் மை அலுவலகக் கட்டிடத்தி லுள்ள மண்ஆய்வுக்கூடம் மற்றும் நடமாடும் மண் ஆய்வுக்கூடத்தில் தங்கள் மண் மற்றும் பாசனநீரை உரிய ஆய்வுக்கட்டணம் செலுத்தி ஆய்வுமுடிவுகளை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் வேளாண்மை மற்றும் அதனைச்சார்ந்த அனைத்து துறைகளும் ஒரே வளாகத்தில் செயல் பட இருப்பதால், விவசாயிகள் விவசாயம்  தொடர் பாக தங்களுக்குத் தேவை யான அனைத்துதுறை மானியத் திட்டங்களை பெறும்வகையில் மண் ஆய்வுக் கூடம் மற்றும் நடமாடும் மண்ஆய்வுக்கூடம் இந்த ஒருங்கிணைந்த வேளாண்மைத்துறை கட்டிடத்தில் செயல்பட உள்ளது. மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் இதனைப் பயன்படுத்தி பயனடையலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி-தினகரன்.
 குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அவர்களுக்குக்கான சிறப்பு தொலைபேசி உதவி அழைப்பு எண் 1௦98. இந்த எண்ணில் இருபத்துநான்கு மணிநேரமும் குழந்தைகள் தொடர்பான புகார்கள் தெரிவிக்கலாம். இதுதொடர்பான விழிப்புணர்வு முகாம் குன்னத்தில் சமீபத்தில் நடைபெற்றது.

குன்னம், : பெரம்பலூர் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு மற்றும் சைல்டு லைன் 1098 (அனைத்து மகளிர் காவல்நிலையம்) மூலம் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி யில் குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் குழந்தைகள் என்பவர்கள் எவர்கள்? 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சந்திக்கின்ற பிரச்சனைகள், குழந்தை திருமணம், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012, இன்னும் பிற குழந்தை பாதுகாப்புச் சட்டங்கள், குழந்தைகள் உரிமை கள் மற்றும் பாதுகாப்பு, குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி அழைப்பு சைல்டு லைன் 1098 ஆகியன குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் குழந்தை திருமணம் தொடர்பான விழிப்புணர்வு குறும்படம் மாணவிகளுக்கு காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் ரஞ்சனா, மாவட்ட சமூகநல அலுவலர் பேச்சியம்மாள், பள்ளி தலைமையாசிரியை ப்ரியா, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் பாதுகாப்பு அலுவலர் விமலா, ஆற்றுப்படுத்துநர் சாந்தி, சமூகப்பணியாளர் ரேகா, புறத்தொடர்பு பணியாளர் அனுரேகா, குன்னம் கிராம சுகாதார செவிலியர் ஆர்த்தி மற்றும் பள்ளி மாணவிகள், ஆசிரியர்களும் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நன்றி-தினகரன்.

Friday, 28 February 2014

பெட்ரோல் விலை லிட்டருக்கு 77 காசும், டீசல் விலை லிட்டருக்கு 61 காசும் உயர்ந்தது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
பெட்ரோல் விலை
சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் விலையை 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கும் அதிகாரத்தை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கி இருக்கிறது. டீசல் விலையை நிர்ணயிக்க சில கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது.கடைசியாக பெட்ரோல் விலை கடந்த ஜனவரி 4–ந் தேதி லிட்டருக்கு 91 காசு உயர்த்தப்பட்டது.
77 காசு உயர்வு
இந்த நிலையில், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நேற்று உயர்த்தின. அதன்படி வரிகள் நீங்கலாக பெட்ரோல் விலையை லிட்டருக்கு 60 காசும், டீசல் விலையை லிட்டருக்கு 50 காசும் உயர்த்தப்பட்டன.இதைத்தொடர்ந்து, வரியுடன் சேர்ந்து சென்னை நகரில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 77 காசு உயர்ந்தது. இதனால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 75 ரூபாய் 71 காசில் இருந்து 76 ரூபாய் 48 காசாக அதிகரித்தது.இதேபோல் வரியுடன் சேர்த்து சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 61 காசு உயர்ந்தது. இதனால் நகரில் ஒரு லிட்டர் டீசலின் விலை 58 ரூபாய் 56 காசில் இருந்து 59 ரூபாய் 17 காசாக அதிகரித்தது.
டெல்லி
இதேபோல் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 73 காசு அதிகரித்து 73 ரூபாய் 16 காசாகவும், டீசல் விலை 57 காசு உயர்ந்து 55 ரூபாய் 48 காசாகவும், கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 76 காசு அதிகரித்து 80 ரூபாய் 96 காசாகவும், டீசல் விலை 59 காசு அதிகரித்து 60 ரூபாய் 9 காசாகவும் உயர்ந்தது.மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 76 காசு அதிகரித்து 82 ரூபாய் 7 காசாகவும், டீசல் விலை 63 காசு அதிகரித்து 63 ரூபாய் 86 காசாகவும் உயர்ந்தது.
அமலுக்கு வந்தது
இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

நன்றி-தினத்தந்தி.

நொச்சியம், நெய்க் குப்பை, திம்மூர் மற்றும் கை.களத்தூர் ஆகிய பகுதிகளில் தரம் உயர்த்தப்பட்ட கால் நடை மருந்தகங்களை பெரம்பலூர் கலெக்டர் தரேஸ் அஹமது மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன் திறந்து வைத்தனர்.
தரம் உயர்வு
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்ப்பட்ட நொச்சியம் ஊராட்சியில் நொச்சியம், நெய்க்குப்பை, திம்மூர் மற்றும் கைகளத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள கால்நடை கிளை நிலை யங்களை தரம் உயர்த்தி கால்நடை மருந்தகங்களாக கலெக்டர் தரேஸ் அஹமது மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர்இரா.தமிழ்ச்செல்வன் திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:
உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்
தமிழக முதல்–அமைச்சர் பெரம்பலூர் மாவட்டத்திற்கு புதிய பால் பண்ணை அமைக்க ஏற்கனவே உத்தர விட்டி ருக்கிறார். எனவே பெரம்பலூர் பகுதி மக்கள் பால் உற்பத்தியை அதிகப் படுத்த வேண்டும். அதற்கேற்ப கால்நடைகளை ஆரோக்கியமாக்கி பரா மரிக்க ஏதுவாக மானிய விலையில் உலர் தீவனங்களை தமிழக அரசு வழங்கி வரு கிறது
மேலும் நொச்சியம், நெய்க் குப்பை, திம்மூர் மற்றும் கைகளத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் கால்நடை கிளை நிலை யங் களை கால்நடை மருந்தகங் களாக தரம் உயர்த்தி தமிழக முதலமைச்சர் உத்தர விட்ட தன் அடிப்படையில் இன்று கால்நடை மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளது
அரசின் அறிவுரை
உங்கள் ஊரை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் கால்நடைகளையும் இந்த கால்நடை மருந்தகங் களுக்கு அழைத்து வந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள லாம். மேலும் மாடுகள் வாங்க கடன் வழங்குவதற்கு தமிழக அரசின் அறிவுரையின்படி நட வடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
தமிழக முதல்–அமைச்சரின் இத்தகைய திட்டங்களை பொதுமக்கள் முறையாக பயன்படுத்திகொள்ள வேண் டும். இவ்வாறு அவர் தெரி வித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர்கள் .மருதைராஜா, கிருஷணகுமார், வெண்ணிலாராஜா, மாவட்ட ஊராட்சித்துணைத்தலைவர் சேகர், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குனர் சந்திரசேகர், உதவி இயக்குனர் மனோகரன், ஊராட்சி மன்றத் தலைவர் சங்கர் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

நன்றி-தினத்தந்தி.
இராமநாதபுரம் மாவட்டம்  சித்தார்கோட்டையில் அமைந்துள்ள அரசு உதவி பெரும் முஸ்லீம் தனியார் பள்ளியான முகமதியா மேல் நிலைப்பள்ளியில் தாயத்து மற்றும் செந்தூரம் அணிந்து வந்த மாணவர்கள் அஜீஸ் என்ற உடற்பயிற்சி ஆசிரியரால் (PT Master) தடுத்து நிறுத்தப்பட்டனர். அந்த மாணவர்கள் கழுத்திலும் கையிலும் இருந்த ரட்சை கயிறுகள், தாயத்துக்கள் மற்றும் டாலர்கள் அறுக்கப்பட்டன. நெற்றியில் அணிந்திருந்த செந்தூரம் அழிக்கப்பட்டது. இந்தக் கொடுமையைக் கேள்விப்பட்ட பெற்றோர்கள் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெரினா லோட்டஸ் அவர்களிடம் சென்று முறையிட்டனர். தலைமை ஆசிரியையோ மாவட்ட ஆட்சித் தலைவரின் அறிவுறுத்தலின்படியே இதைச் செய்கிறோம் என்று கூறியதாக சொல்கிறார் ரமேஷ் (பெயர் மாற்றப் பட்டுள்ளது) என்ற மாணவரின் தந்தை. இதனால் கொதிப்படைந்த பெற்றோர்கள் , இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் திரு. பிராபகரன் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. நந்தகுமார் அவர்களை சந்தித்து இச் சம்பவம் குறித்து முறையிட்டனர். அதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. நந்தகுமார் அவர்கள், தனது நடவடிக்கையை நியாயப்படுத்தியதோடு, வேண்டுமென்றால் நீதிமன்றத்தில் சென்று பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் சொன்னதாக இந்து மக்கள் கட்சியின் பொறுப்பாளர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக 21/01/2014 செவ்வாய் கிழமை மாலை இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெரினா லோட்டஸ் அவர்களைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டோம். இந்த உரையாடலில் ஜெரினா லோட்டஸ் அவர்கள் மாவட்ட ஆட்சியரின் ஆணைப்படித்தான் நடந்து கொண்டேன் என்று தெரிவித்தார். மேலும், அவர் கூறுகையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தொடர்பான தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் கயிறு கட்டுவது, பொட்டு வைப்பது, மதங்களைக் குறிக்கும் வகையில் உள்ள விஷயங்கள் வேண்டாம் என்று மாணவர்களை அறிவுறுத்துங்கள் என்று மாவட்ட ஆட்சியர் சொன்னதாக சொன்னார். இதற்கு மாவட்ட ஆட்சியர் திரு. நந்தகுமார் அவர்கள் சொன்ன காரணம் என்ன தெரியுமா?

//பள்ளி வளாகங்களில் மதச்சின்னங்கள் அணிந்து கொண்டு மாணவர்கள் வருவதால் சண்டை ஏற்படுகிறது, இதனால் பல மாணவர்கள் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பட்டுள்ளனர். இந்த சண்டைக்கு காரணம் மதச்சின்னங்கள் தான் என்று மப்டியில் கண்காணிக்கும் போலீசார் தெரிவித்ததாகவும், மேலும் எந்தெந்த பள்ளியில் இத்தகைய சம்பவங்கள் நடந்துள்ளது என்றும் பட்டியலிட்டார்.// என்றார் ஜெரினா லோட்டஸ் அவர்கள்.

இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. நந்தகுமார் அவர்களுக்கு புதன்கிழமை (22/01/2014) அன்று இ-மெயில் அனுப்பப்பட்டது. இதுவரை பதில் இல்லை. ஆட்சியரின் உதவியாளர் திரு தருமன் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது நான் பிசியாக உள்ளேன் பின்னர் தொடர்பு கொள்ளுங்கள் என்று சொல்லி இணைப்பைத் துண்டித்துவிட்டார். அவரை தொடர்பு கொள்ள மீண்டும் முயற்சித்த போது அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை.

இந்த மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை சில கேள்விகளை எழுப்புகிறது.
  • மதச்சின்னங்கள் அணியும் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லையென்றால் இராமநாதபுரம் ஆப்கானிஸ்தானாக மாறிவிட்டதா?
  • மதச்சின்னங்கள் என்றால் குல்லாவும், பர்தாவும் அடங்குமே! இவைகளை நீக்க மாவட்ட ஆட்சியர் ஏன் ஆலோசனை வழங்கவில்லை?
  • மதச்சின்னங்களை அணிந்துகொள்வது அடிப்படை உரிமை. இந்த உரிமையை பறிக்கும் உரிமத்தை மாவட்ட ஆட்சியருக்கு யார் கொடுத்தார்கள்?
  • எந்தெந்தப் பள்ளிகளில் மதச்சின்னங்களை மையமாகக் கொண்டு சச்சரவுகள் ஏற்பட்டன? இதைத் தூண்டியவர்கள் யார்? சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்ட மாணவர்கள் யார்?
  • இந்தச் சூழ்நிலை நிலவும் பள்ளிகளில் அதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இதில் தொடர்புடைய ஆசிரியர்கள் எவரேனும் உள்ளனரா?
  • இவ்வளவு மோசமான நிலை இராமநாதபுரம் மாவட்டத்தில் நிலவுகிறது என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும் திரு. நந்தகுமார் அவர்கள், மத பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்கள் மற்றும்
  • தூண்டுபவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்?
  • இராமநாதபுரம் மாவட்டத்தில் இந்துக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கமுடியாது என்பதை ஒத்துக்கொள்கிறாரா?
  • கலவரங்கள் ஏற்படாமலிருக்க இந்துப் பெண்களை தாலி அறுக்க திரு. நந்தகுமார் அவர்கள் உத்திரவிடுவாரா?
  • தண்ணீர் பஞ்சம் நிலவும் இராமநாதபுரம் மாவட்டத்தில் நெற்றியில் இருக்கும் திலகங்களை அழிக்க கர்நாடகத்தில் இருந்து காவிரி நீர் கொண்டுவர சிறப்புக் கோரிக்கை விடுவாரோ!

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற அடிப்படைவாத ஆட்சி நிலவும் பகுதிகளில் தாலிபான்கள் விதிக்கும் சட்டதிட்டத்தை இராமநாதபுரத்தில் நடைமுறைப்படுத்தும் அளவிற்கு இஸ்லாமிய பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது, இந்த பயங்கரவாதத்தைத் தடுக்கும் பொறுப்பில் இருக்க வேண்டிய அரசு இந்த ஜிகாதி கோரிக்கைகளை நிறைவேற்றுகிறது.
  • அம்மன் கோவில்களில் மேளம் அடிக்கத் தடை
  • பாரம்பரிய கோவில் ஊர்வலப் பாதைகளை மாற்றுதல்
  • அழகன் குளம் என்ற கிராமத்தில் கோவில் அருகாமையில் பசு மாட்டை வெட்டிய முஸ்லீம்களின் மீது புகார் கொடுத்த இந்துக்கள் மீது வழக்கு
  • சுவாமி விவேகானந்தரின் நினைவுத்தூணை உடைத்தவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
  • புதுமடம் கிராமத்தில் செருப்புடன் தேசிய கொடியை ஏற்றியவர்கள் தண்டிக்கப்படவில்லை.
  • முஸ்லீம் அல்லாதவர்கள் ஊருக்குள் நுழைய தடை விதித்தும், பொது சாலைகளில் வாகனங்களில் பாட்டு போடுவதைக் கூட அனுமதிக்க மாட்டோம் என்று எச்சரித்து பலகை வைப்பதையும்
  • தடுப்பதில்லை.
  • பெரியபட்டணத்தில் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்ட உள்ளூர் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த அடிப்படைவாத முஸ்லீம்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த சம்பவங்களின் பின்ணனியில் அரசின் உதவி பெற்று இயங்கி வரும் சித்தார்கோட்டை முகமதியா மேல்நிலைப் பள்ளியில் பயிலும் இந்து மாணவர்கள் அணிந்த தாயத்து/ இரட்சை கயிறு மற்றும் சாமி டாலர்களை அறுத்தல், செந்தூரங்களை அழித்தல் போன்றவை இராமநாதபுரம் ஒரு குட்டி காஷ்மீராக மாறிக் கொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது. இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் பிரிவினைவாதத்தை தடுக்க வேண்டிய மாவட்ட ஆட்சியர் பிரிவினைவாத சக்திகளுக்குத் துணைபோவதே!

இராமநாதபுரத்தை பிரிவினைவாத, பயங்கரவாத நாசகார சக்திகளிடமிருந்து காப்பாற்ற மத்திய மாநில அரசுகள் விழித்துக்கொண்டு முனைப்புடன் செயல்படவேண்டும். உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் இராமநாதபுரத்தில் இந்துக்களுக்கு நடக்கும் அநீதிக்கு எதிராக குரல் எழுப்பவேண்டும். 

நன்றி-http://www.vsrc.in/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/item/173-hindu-sinnagalukku-thadai-ramanathapuram-collectorin-thalipanisam/itemid-224

Thursday, 27 February 2014

மொபைல் தொழில் நுட்ப சேவைகளை வழங்கி வரும் பிரபல நிறுவனமான வாட்ஸ் அப்பை கடந்த வாரம் பேஸ்புக் நிறுவனம் வாங்கியது.  இந்நிலையில் பல்வேறு புதிய சேவைகளை வழங்க அநநிறுவனம் பேஸ்புக் முடிவு செய்துள்ளது,
தற்போது வாட்ஸ் ஆப் மூலம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பலாம் ஆனால்பேசிக்கொள்ள முடியாது. இந்நிலையில் பேசும் வசதியையும் வாட்ஸ் அப் பேஸ்புக் நிறுவனம் அளிக்கவுள்ளது.
ஜூன் மாதம் தொடங்கப்படவுள்ள இந்த சேவை முதற்கட்டமாக ஆப்பிள், ஆண்ட்ராய்ட், ஜஓஎஸ் மொபைல்களிலும், பின்னர் மற்ற மொபைல்களிலும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

நன்றி-தினமணி.
வெளிநாடுகளைப்போல விண்ணப்பித்த நாளிலேயே பாஸ்போர்ட் வழங்கும் புதிய திட்டம் நமது நாட்டிலும் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது. அதற்கான ஆய்வு, பயிற்சி உள்ளிட்ட தொடர்புடைய பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. வேலை வாய்ப்பு, கல்வி, சுற்றலா, மருத்துவம் உள்ளிட்ட இன்னும் பிற காரணங்களுக்காக ஆயிரக்கணக்கானோர் தினசரி வெளிநாடு செல்வது தவிர்க்க முடியாததாகி விட்டது. வெளிநாடு செல்வோருக்கு பாஸ்போர்ட் முக்கிய ஆவணமாகும். அதனைக்கொண்டுதான் விசா, விமான டிக்கெட்டுகள் உள்ளிட்ட பிற பயண ஆவணங்கள் பெற முடியும்.
இந்தியா முழுவதும் மொத்தம் 37 மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களும், அவற்றின் கட்டுப்பாட்டில் 77 பாஸ்போர்ட் சேவை மையங்களும் பாஸ்போர்ட் மற்றும் தொடர்புடைய ஆவணங்கள் சிலவற்றை வழங்கி வருகின்றன. தமிழகத்தில் மட்டும் சென்னை, திருச்சி, மதுரை,கோவை ஆகிய 4 இடங்களில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களும், அவற்றின் கட்டுப்பாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை மாவட்டங்களில் என 8 பாஸ்போர்ட் சேவை மையங்களும் (பி.எஸ்.கே) உள்ளன.
ஒவ்வொரு பாஸ்போர்ட் சேவை மையத்திலும் குறிப்பிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து பெற முடியும். அவ்வாறு விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள், மண்டல பாஸ்போர்ட் அலுவகத்தின் கண்காணிப்பில் பரிசீலிக்கப்பட்டு மண்டல பாஸ்போர்ட் அலுவலரின் ஒப்புதலின் பேரில் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில், விண்ணப்பித்த ஒரு மாதத்தில் சாதாரண முறையிலும், ஒரு வாரத்தில் தட்கல் முறையிலும் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படுகின்றன. எனினும் சில பாஸ்போர்ட் அலுவலகங்களில் 2 மாதங்களாகியும் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படுவதில்லை என்ற புகார்கள் இருந்து வருகின்றன. இதற்கு, போலீஸ் விசாரணை அறிக்கை வருவதில் ஏற்படும் தாமதமே முக்கியக் காரணம் என பாஸ்போர்ட் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தாலும், அதனை காவல்துறையினர் மறுத்து வருகின்றனர்.
இந்த தாமதத்தை போக்கவே மத்திய அரடு புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்ய முடிவெடுத்துள்ளது. அதன்படி விண்ணப்பித்த அன்றே, விண்ணப்பத்தை பரிசீலித்து, போலீஸ் விசாரணை அறிக்கையையும் ஆன்லைன் மூலம் முடித்து பாஸ்போர்ட் வழங்க வழிவகையுள்ளது. தற்போது இத்திட்டம் சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகள் சிலவற்றில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அங்கு பாஸ்போர்ட் வேண்டி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு அடுத்த 3 நிமிடங்களில் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படுகின்றன.
சிங்கப்பூரில் நிர்வாகப்பணிகள் அனைத்துமே கணினி மயமாக்கப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள அனைத்துப் போலீஸ் நிலையங்களும் ஆன் லைன் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் நாட்டு மக்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டு, அதன் எண்ணை கணினியில் தட்டினாலே குறிப்பிட்ட நபருடைய விபரங்கள் அனைத்தும் தெரியும் வகையில் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காவல் நிலையத்திலும் அதன் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் நபர்கள் குறித்த அனைத்து விபரங்களும் கணினியில் அவ்வப்போது பதிவு செய்யப்படும். அதாவது நடந்த குற்றச் செயல்கள் குறித்தும், அவற்றில் தொடர்புடையவர்கள் குறித்தும் இடம்பெற்றிருக்கும். அதனைக்கொண்டு யார் யாருக்கெல்லாம் பாஸ்போர்ட் வழங்கத் தடைவிதிக்கலாம் என உடன் முடிவெடுக்க முடியும்.
எனவே பாஸ்போர்ட் விண்ணப்பத்தின் பரிசீலனை, மற்றும் போலீஸ் விசாரணை ஆகியவை விண்ணப்பித்த அடுத்த சில நிமிடங்களிலேயே முடிந்துவிடும். அடுத்த கட்டமாக ஏ.டி.எம். இயந்திரம்போல பாஸ்போர்ட் பிரிண்ட் செய்வதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நவீன இயந்திரத்தின் உதவியுடன், பாஸ்போர்ட் அச்சிடப்பட்டு லேமினேஷன் செய்து  வழங்கப்படுகின்றது. இந்த நடைமுறைகள் அனைத்தும் அடுத்தடுத்து சில நிமிட இடைவெளியில் முடிந்து விடுகின்றன.
எனவேதான் இத்திட்டத்தை இந்தியாவில் நடைமுறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. ஆனால் அதற்கு நாடு முழுவதுமுள்ள அனைத்து காவல் நிலையங்களும் ஆன்லைன் மூலம் இணைக்கப்படுவது அவசியம். எனவே மாநில அரசுகளின் துணையோடு அதற்கான பணியில் இறங்கியுள்ளது மத்திய அரசு. இதற்காக என்.ஐ.எஸ்.ஜி ( நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்மார்ட் கவர்ன்மென்ட் )என்ற மத்திய அரசு நிறுவனம் முழு வீச்சில் இயங்கி வருகின்றது. இந்த அமைப்பின் முக்கியப் பணி யாதெனில் அரசுத்துறைகளையும் தனியார் துறைகளைப்போல் சிறப்பாக இயங்க வைப்பதேயாகும்.
இத்திட்டம் வெற்றி பெறுவது மாநில அரசுகளின் கைகளிலும், குறிப்பாக காவல்துறையினர் வசமும்தான் உள்ளது என்கின்றனர். காரணம் அனைத்து காவல் நிலையங்களையும் ஆன் லைனில் இணைக்க மாநில அரசுகள் உத்தரவிட்டு, அதனை காவல் துறை அதிகாரிகள்  நடைமுறைப்படுத்த வேண்டும். ஏற்கெனவே கடந்த 10 ஆண்டுகளில் நாடுமுழுவதும் நடந்த குற்றச் சம்பவங்களையும், அதன் தொடர்புடையோரையும் அந்தந்த பகுதி காவல் நிலைய கணினியில் பதிவு செய்து, ஆன்லைனில் இணைக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கு சி.சி.டி.என்.எஸ் ( கிரைம் மற்றும் கிரிமினல் ட்ராக்கிங் நியூ ஒர்க் சிஸ்டம் )என பெயரியப்பட்டு அதற்காக ரூ.40 ஆயிரம் கோடி நிதியும் ஒதுக்கியும் உள்ளது.
அதனையொட்டி மாநிலங்களில் உள்ள சில காவல் நிலையங்களில் குற்ற விபரங்கள் பதிவு செய்யப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த நவீன திட்டம் குறித்து ஆய்வு மற்றும் பயிற்சிகளுக்காக நாடு முழுவதிலிமிருந்து முக்கிய அலுவலர்கள் 23 பேர் கொண்ட குழுவை அரசு அமைத்தது. அதில் பாஸ்போர்ட் அலுவலர்கள், போலீஸ் அதிகாரிகள், நிர்வாகம், தகவல் தொழில் நுட்பத்துறையைச் சேர்ந்த அலுவலர்கள், கணினி துறை வல்லுனர்கள் இடம் பெற்றிருந்தனர். தமிழகத்திலிருந்து திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர் க. பாலமுருகன், திருவள்ளூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்த ரூபேஸ்குமார்மீனா (தற்போது வேறு மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார்)ஆகிய இருவரும் இக்குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
இந்த சிறப்புக் குழுவினர் கடந்தாண்டு இறுதியிலிருந்து சிங்கப்பூர் சென்று, அங்கு 3 நிமிடத்தில் பாஷ்போர்ட் வழங்கும் முறையை ஆய்வு மேற்கொண்டு அவை குறித்து தெரிந்து கொள்ள ஒருவாரம் பயிற்சியும் பெற்று திரும்பியுள்ளனர். இந்தியாவில் பெங்களூர், புது தில்லி, மும்பை ஆகிய இடங்களுக்கும் சென்று நாடு முழுவதும் இப்புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது குறித்தும், செயல்படுத்தும் விதம் குறித்தும் ஆலோசித்து வருகின்றனர்.என்.ஐ.எஸ்.ஜி அமைப்பானது மாநிலங்கள் தோறும் சென்று, காவல் துறையினர் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளை சந்தித்து விளக்கி அதற்கான பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.
இது குறித்து திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர் க. பாலமுருகன் கூறுகையில்,
இத்திட்டம் மிகவும் அற்புதமானது. நாளுக்கு நாள் பாஸ்போர்ட் தேவை அதிகரித்து வருகின்றது. அவசர தேவைகளுக்காக தட்கல் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டு வந்தாலும்  இடைத்தரகர்கள் அப்பாவிகளை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களிóன் தேவையை கருத்தில் கொண்டு அரசு புதிய திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. இதன் மூலம் தகுதியுடையவர்களுக்கு விரைந்து பாஸ்போர்ட் வழங்க முடியும் என்றார்.
காவல்துறை கண்காணிப்பாளர் ரூபேஸ்குமார்மீனா கூறுகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் காவல் நிலையங்கள் பெருமளவில் இணைக்கப்பட்டுள்ளன. எனவேதான் தமிழகம் சார்பில் என்னை அழைத்திருந்தனர். விரைவில் சி.சி.டி.என்.எஸ். திட்டம் வெற்றி பெற்றால் விரைவில் பாஸ்போர்ட் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என்றார்.

நன்றி-தினமணி
vkalathur வ.களத்தூரில் வன்னிய சங்க கிளையின் சார்பாக வன்னியர் சங்க கொடி ஏற்றும் விழா நடைபெற்றது. இந்தநிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Wednesday, 26 February 2014

சிவன் சந்நிதியில் அமர்ந்து பக்தியுடன் இந்த ஸ்தோத்திரத்தை படித்தால் எல்லா நலங்களும் உண்டாகும்.

* தேவர்கள் போற்றும் மகாதேவனே! பரமசிவனே! கவுரி மணாளனே! பஞ்சமுகம் கொண்டவனே! நெற்றிக்கண் உடையவனே! கங்கையைத் தலையில் தாங்கியவனே! எப்போதும் என்னைக் காத்தருளவேண்டும்.

* பிறைநிலவைச் சூடிய பெருமானே! மன்மதனை எரித்தவனே! திரிபுரங்களைச் சம்ஹாரம் செய்தவனே! நாகாபரணம் அணிந்தவனே! நீலகண்டனே! என் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பாயாக.

* கைலாய நாதனே! பஞ்ச பூதங்களைப் படைத்தவனே! அண்ணா மலையானே! தென்னாடுடைய சிவனே! எந்நாட்டவர்க்கும் இறைவனே! சங்கரனே! சதா சிவனே! நோயற்ற வாழ்வைத் தந்தருளவேண்டும்.

* காலனை உதைத்தவனே! சம்சாரக் கடலில் இருந்து காப்பவனே! நள்ளிருளில் சுடலையில் ஆடுபவனே!. கங்காதரனே! ஜடாபாரம் கொண்டவனே! திரிசூலம் தாங்கியவனே! வாழ்வில் எல்லா நன்மையும் பெருகட்டும்.

* மங்கல மூர்த்தியே! காளை வாகனனே! புலித்தோலை ஆடையாக உடுத்தவனே! பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றுபவனே! நமசிவாயனே! அபிஷேகப் பிரியனே! ஆதியந்தம் இல்லாதவனே! உன்னருளால் உலகில் எல்லா வளமும் செழிந்தோங்கட்டும்.
கூம்புவடிவ ஒலிபெருக்கி தடைசெய்யப்பட்ட ஒன்றாகும். ஆனால் மசூதிகளில் இதுதான் பயன்படுத்தப்படுகிறது.
இரவு பத்துமணிக்கு மேல் ஒலிபெருகிகளை உபயோகபடுத்தக் கூடாது என்பது உச்சநீதிமன்ற உத்தரவு. தூங்குவது மனிதனின் அடிப்படை உரிமை, ஆனால் ரமலான் மாதங்களில்வ.களத்தூரில் விடிய, விடிய  இறைவழிபாடு என்ற பெயரில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்துகின்றனர். கூம்புவடிவ ஒலிபெருக்கி தடைசெய்யப்பட்ட ஒன்றாகும். ஆனால் இந்துக்களின் விழாக்களுக்கு மட்டும் இந்த கட்டுப்பாடுகள் பொருந்தும். இஸ்லாமியர்களின் விழாக்களுக்கு இதுபோருந்தாது என்பது எழுதப்படாத விதியாக காவல்துறையும் , பெரம்பலூர் மாவட்ட நிர்வாகமும் இரவு பத்துமணிக்குமேல் ஒளிபருகிகளை உபயோக படுத்துவதை கண்டுகொள்ளாமல் உள்ளனர். இச்செயல் நீதிமன்ற அவமதிப்பு என நன்கு அறிந்திருந்தும் கண்டுகொள்ள மறுக்கின்றனர்.

சமீபத்திய உயர்நீதிமன்ற உத்தரவு :

மதுரை: மனிதன், இரவில் தூங்குவது என்பது, அடிப்படை உரிமை. ஆடல், பாடல் என்ற பெயரில், இரவில் தூங்கும் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதற்கு, அனுமதிக்க முடியாது' என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. அறந்தாங்கி அருகே, அய்யன்குடி குழந்தைவேல் தாக்கல் செய்த மனுவில், "அய்யன்குடி, அங்காள பரமேஸ்வரி கோவில், மாசித் திருவிழாவை ஒட்டி, பிப்., 28ம் தேதி, இரவு 10:00 மணி முதல், காலை 2:00 மணி வரை, ஆடல், பாடல் நடத்த, போலீசில் அனுமதி கோரினோம். மனுவை பரிசீலிக்க, உத்தரவிட வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தார்.

நீதிபதிகள், ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி கொண்ட, "பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: "மக்களுக்கு, பேச்சு, கருத்து சுதந்திரம் என்பது, அடிப்படை உரிமை. அதுபோல், தூங்குவதும் அடிப்படை உரிமை தான்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. ஆடல், பாடல் என்ற பெயரில், இரவில் தூங்கும் மக்களுக்கு, இடையூறு ஏற்படுத்துவதற்கு அனுமதிக்க முடியாது. ஆடல், பாடலுக்கு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. மனுதாரர் மீண்டும், அறந்தாங்கி போலீசில் மனு அளிக்க, உரிமை வழங்கப்படுகிறது.
இவ்வாறு, அவர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.

நன்றி-தினமலர்
 திருமாந்துறை சுங்கச் சாவடியில் ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் திடீர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். இதனால் 4 சக்கர வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சுங்கச்சாவடி
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள திருமாந்துறை கிராமத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் நிறுவனம் நடத்தி வரும் சுங்கச்சாவடி உள்ளது.
இந்த நிறுவனத்தில் சுங்க வரி வசூல் செய்யும் பணியில் 36 பேரும் காவலர் பணியில் 35 பேரும் ஹெல்ப்லைன் பணியில் 35 பேரும் ஹைவே பெட்ரோல் வாகனத்தில் 35 பேரும் எலக்ட்ரீசியன் பணியில் 15 பேரும் துப்புரவு பணி யாளர்கள் பணியில் 35 பேரும் என 175க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர்.
பணி மாற்றம்
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் தனியார் நிறுவனம் ஒப்பந்தப் பணியாளர்களை வேறு ஒரு நிறுவனத்திற்கு மறு ஒப்பந்தம் செய்து பணியில் ஈடுபடுத்தி வருகிறது. இதனிடையே கடந்த டிசம்பர் மாதம் முடிய ஒப்படைவு தொகையை சுங்கவரி கட்டணம் வசூலிப்ப வர்களுக்கு மட்டும் 45 ஆயிரம் வரை வழங்கி உள்ளது.
திடீர் வேலை நிறுத்தம்
சுங்கவரி கட்டணம வசூலிப்பவர்களுக்கு வழங்கி யதை போல பாரபட்சம் காட்டாமல் தங்களுக்கும் ஒப்படைவு தொகையை வழங்க வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி காவலர், உதவியாளர் நெடுஞ்சாலை கண்காணிப் பாளர் வாகன ஓட்டுநர் மேற் பார்வையாளர் எலக்ட்ரீசியன் மற்றும் துப்புரவு பணி யாளர்கள் என 150க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடு ட்டனர்.
வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்து சுங்க வரி கட்டணம் வசூல் மையத்திற்கு வந்த ஒப்பந்த தொழிலாளர்கள் வாகனங்கள் வந்து செல்லும் பாதையில் திரண்டனர். அவ்வழியில் உள்ள தானியங்கி தடுப்பு பலகையை சுங்கவரி நிறுவன அதிகாரிகள் அகற்றி அனைத்து வாகனங்களையும் இலவசமாக செல்ல அனுமதித்தனர்.
இலவசமாக சென்றன
இதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் சுங்கவரி கட்டணம் செலுத்தாமல் மகிழ்ச்சியுடன் சென்றனர். மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை அவ்வழியே வந்த அனைத்து வாகனங்களும் இலவசமாக செல்ல அனுமதிக்கப்பட்டன.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மங்களமேடு சரக உதவி கண்காணிப்பாளர் கோவிந்தராசு இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் விரைந்து சென்று தனியார் சுங்க வரிச்சாவடி நிறுவன அலுவலர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஓப்பந்த தொழிலாளர்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த போராட்டம் தொடர்ந்து 3 வது முறையாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி-தினத்தந்தி.
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே ரஞ்சன்குடி என்ற பகுதியில் சாலையோரத்தில் வேனை நிறுத்திவிட்டு இறங்கிய கும்பல் அங்கு மேய்ந்து கொண்டிருந்த 2 ஆடுகளை வேனில் தூக்கிபோட்டனர். பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
இதை கண்ட சிலர் நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ், மற்றும் போலீசார் வாகனத்தில் விரைந்து சென்று திருமாந்துறை அருகே டோல்கேட்டில் வைத்து வேனை மடக்கி பிடித்தனர். வேனில் இருந்த ஆடுகளை மீட்ட போலீசார் கும்பல் 4 பேரை பிடித்து மங்களமேடு போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த பாபு (வயது 20) ராமநாதபுரம் மாவட்டச் சேர்ந்த தினேஷ், தஞ்சை, வல்லத்தை சேர்ந்த கார்த்தி (28) மணிகண்டன் (23) என்று தெரியவந்தது.
அவர்களை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் மது போதையில் ஆடுகளை கடத்தி சென்றது தெரிய வந்தது.

நன்றி-மாலைமலர்.
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே உள்ள ஆலந்தூர் ஊராட்சி, செட்டி குளத்தை சேர்ந்தவர் முருகவேல். இவரது மகன் மிதின் குமார் (வயது 13). அப்பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வருகிறான்.
சம்பவத்தன்று மிதின் குமார் தனது நண்பர்களுடன் பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவன் திடீரென மயங்கி விழுந்துள்ளான்.
அப்போது அங்கு வந்த தமிழ் ஆசிரியர் வெங்கடேசன் (37), மாணவரை பார்த்து மயங்கியது போல் நடிக்கிறாயா எனக்கேட்டு கன்னத்தில் அடித்து காலால் மிதித்துள்ளார். இதனால் அழுத படி வீட்டுக்கு வந்த மிதின் குமார் இது குறித்து பெற்றோர்களிடம் கூறியுள்ளான்.
இதையடுத்து பள்ளிக்கு சென்று ஆசிரியர் வெங்கடேசனிடம் மாணவன் தாக்கப்பட்டது குறித்து அவனது பெற்றோர்கள் விசாரித்தனர். அவர்களையும் ஆசிரியர் தகாத வார்த்தைகளால் திட்டினாராம்.
இதுகுறித்து மிதின்குமாரின் பெற்றோர் பாடாலூர் போலீசில் புகார் செய்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார், ஆசிரியர் வெங்கடேசனை கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆசிரியர் வெங்கடேசனை சிறையில் அடைக்க நீதிபதி உத்தர விட்டார். இதையடுத்து அவர் பெரம்பலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

நன்றி-மாலைமலர்.
பெரம்பலூர்,: பெரம்பலூரில் மார்ச் 2, 3 ஆகிய தேதிகளில் போலீஸ் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் நல்லுறவு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளதாக எஸ்பி சோனல் சந்திரா தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
பெரம்பலூர் அடுத்த எளம்பலூர் தண்ணீர் பந் தல் பகுதியில் உள்ள ஆயுதப் படை வளாகத்தில் இப்போட்டிகள் மார்ச் 2ம் தேதி துவங்கி 2 நாட்கள் நடை பெறும்.
இதில் ஆண்களுக்கான வாலிபால், கபடிப் போட் டிகள் மற்றும் 400 மீட்டர்,  1500 மீட்டர் ஓட் டம் உள்ளி ட்ட போட்டிகள் நடை பெறும். இதே போல், இருபாலருக்கும் நீளம் தாண் டுதல், குண்டு எறிதல் உள் ளிட்ட பல்வேறு போட் டிகள் நடத்தப்படும்.பங் கேற்க விரும்புவோர் தங் கள் பெயர் மற்றும் விவ ரத்தை 04328-291013 என்ற தொலைபேசி எண் ணிலோ அல்லது  94878-97706, 95975-56678 ஆகிய செல்போன் எண்களிலோ தொடர்புகொண்டு பதிவு செய்யலாம். இப் போட்டிகளில் வெற்றிபெறும் முதல் 3 போட்டியாளர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
எனவே, காவல் துறை மற்றும் பொது மக்களி டையே நல்லுறவு ஏற்படுத்தி டும் விதமாக நடை பெறும் இந்த விளையாட் டுப் போட்டிகளில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர் ந்த பொதுமக் கள் அனை வரும் தவறாமல் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என்றார்.

நன்றி-தினகரன்.

Tuesday, 25 February 2014

தமிழக ஆளுநர் முனைவர்.கே.ரோசையா இன்று பெரம்பலூர் தனலட்சுமி ஸ்ரீநிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 14 வது பட்டமளிப்புவிழாவில் கலந்துகொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் Dr  .தரேஷ் அஹேமத் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.