Wednesday, 5 November 2014

இப்பொழுதும், இந்த தேசத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் அப்பாவி இந்துக்களை கொலை செய்ய திட்டமிட்டு அதற்காக மசூதிக்கு சொந்தமான இடங்களில் குண்டுகளை தயாரித்து கொண்டிருந்த போது   நடந்த  குண்டு வெடிப்பில் 3 இஸ்லாமிய அடிப்படை வாதிகள் கொல்லப்பட்டார்கள் . அதன்  பிறகும் இஸ்லாமிய பகுதிக்குள் செல்ல காவல் துறை, தேசிய பாதுகாப்பு படையால் முடியவில்லை. இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றுவதற்காக உறுதியேற்றுக்கொண்டு பதவி ஏற்றுக்கொண்டிருக்கும் மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜிக்கு மனமில்லை. மதச்சார்பின்மையின் பெயரால் அவர்களை மறைத்து வைத்து ஓட்டு பொறுக்க ஆன வேலைகளை பார்த்துக்கொண்டிருக்கிறார்.
burdwan-terrorsim-mamata-2
Add caption
பர்துவான் : முன்னால் அவிழ்ந்த முடிச்சு
பர்துவானில் அக்டோபர் 2ம் தேதியன்று குண்டு தயாரித்து கொண்டிருந்த போது அதிர்ஷ்டவசமாக குண்டு வெடித்து இறந்த பங்களாதேசத்து தீவிரவாத இஸ்லாமிய இளைஞர்கள் ஹகீல் அகமது, சுபான்,  அப்துல் ஹக்கீம்,. அவர்களோடு குடிசை தொழிலாக வெடிகுண்டு தயாரித்து கொண்டிருந்த அவர்களின் பயிற்சி பெற்ற பீவிக்கள் ரஷியா மற்றும் அலீமாக்கள். வெடிக்க தயார் நிலையில் கைப்பற்றப்பட்ட 1050 டெட்டனேட்டர்கள்,  55 பிளாஸ்டிக் வெடிகுண்டுகள்,  59 கையெறி குண்டுகள், ரிமோட் கண்ட்ரோல் ஐஇடிக்கள் மற்றும் ஆர்டிஎக்ஸ் வெடிபொருட்கள். இந்த குண்டு வெடிப்பு நடந்த சிறிது நேரத்தில் வந்த தீவிரவாத ஆதரவு காவல்துறையினர் அவசரம் அவசரமாக கைப்பற்றிய வெடிப்பொருட்களை மதியத்திற்குள் ஒரு ஏரியில் வைத்து வெடிக்க செய்து தடயத்தை அவசரமாக அழித்தனர். இந்த கேவலத்தை மதச்சார்பின்மையின் பெயரால் மம்தா ஆணையிட்டிருந்தார்.
பர்துவான் கொல்கத்தாவிலிருந்து சுமார் 100கிமீ வடமேற்கில் உள்ள மாவட்ட தலைநகரம். பங்களாதேஷிலிருந்து 150 கிமீக்குள் இருப்பதால் இது ஒரு தீவிரவாதிகளின் சொர்க்கம். தொடர்ச்சியாக மேற்கு வங்கத்தில் நீடித்த கம்யூனிஸ மதச்சார்பின்மை அரசாலும், தன்னை அரசியலில் நிலை நிறுத்தி கொள்வதற்காக தீவிரவாதிகளை பேணி வளர்க்கும் மம்தா போன்ற சந்தர்ப்ப வாதிகளாலும், இது உபி, கேரளா, தமிழகம் போல தீவிரவாதிகளின் சிறந்த புகலிடமாக இருந்து வருகிறது. மேலும் வங்கமக்கள் கொஞ்சம் மொழி ரீதியான பிரியம் உடையவர்கள் ஆனதால் வங்கமொழி பேசுபவர்களை, அவர்கள் தீவிரவாதிகள் ஆனாலும் ஆதரிப்பார்கள். இத்தனை காரணங்களால் இவ்வளவு நாளாக பெரிதாக வெளியில் தெரியாமல் இருந்த பயங்கரவாத நச்சு இணைப்புகள், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர ஆரம்பித்து இருக்கிறது.
இதற்கு முன்பே மேற்கு வங்கத்தில் புருலீயா ஆயுத குவியல் போடப்பட்ட வழக்கு, அஸ்ஸாம் வடகிழக்கு மாநிலங்களில் இஸ்லாமிய அகதிகளையும் தீவிரவாதிகளையும் அரசியலுக்காக குடியமர்த்தி அங்குள்ள பூர்வ குடிகளை கொலைசெய்ய, வன்புணர்வு செய்ய ஊக்குவித்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் திரிணாமுல் காங்கிரஸின் அரசியலால் நிலைமை மிகவும் சீரழிந்து இருந்தது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களின் போலி மதச்சார்பின்மை நிலைப்பாட்டால் இதன் மீது எந்த நடவடிக்கையும் இல்லாமல் ஆனது. ஆனாலும் இவை அனைத்தும் தேசத்தின் மீடியாக்களில் ஊடுருவி இருந்த பிரிவினைவாத ஆதரவு,பயங்கரவாத மத ஆதரவாளர்களாலும் செய்திகள் முக்கியத்துவம் இன்றி பிரசுரிக்கப்படும். வரலாற்று துறைகளிலும், ஊடகங்களிலும் கம்யூனிஸ எச்சங்களை இப்போதும் பார்ப்பது எவ்வளவு தேச பாதுகாப்ப்பிற்கு குந்தகமானது என்று இன்னும் உணர்ந்ததாக தெரியவில்லை.
burdwan-terrorsim-mamata-1
இந்த நிலையில் நாடு முழுக்க தீபாவளி நேரத்தில் 150 இடங்களில் குண்டு வைத்து குறைந்தது ஒரு லட்சம் இந்துக்களையாவது கொலை செய்து மறுமையில் 72 கன்னிகளை கற்பழித்து விட வேண்டும் என்ற கனவோடு திட்டமிட்டிருந்தது வங்கத்தின் ஜமா அத் உல் முஜாகிதீன் பங்களாதேஷ்( jmb) எனும் அமைதி மார்க்க கொலைகார இயக்கம்.  அதற்குரிய பணிகளை தங்களுக்கு நம்பகமான பங்களாதேசத்து அடிப்படைவாதிகளை முதலில் ஊடுருவ செய்து செயல்படுத்த முனைந்தனர். ஊடுருவிய பங்களாதேசிகள் அங்குள்ள மதரசாக்கள் உதவியோடு பயிற்சி பெற்ற இந்திய இஸ்லாமிய பெண் தீவிரவாதிகளை மணந்துகொள்கின்றனர். அவர்கள் மூலமும் லவ் ஜிகாத் மூலமும் ஆள்களை தேர்வு செய்கிறார்கள்.
அவர்கள் மூலம் உள்ளூரில் இருக்கும் இஸ்லாமிய இளைஞர்களை குண்டு வைக்க ஆளெடுக்கிறார்கள். இதற்கு உள்ளூரில் இருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும், இந்தியாவின் அல்கொய்தா, ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்களின் கிளைகளும் உதவுகின்றன. இவர்கள் தங்கள் ஆதரவாளர்களை கொண்டு ஒவ்வொரு அரசியல் கட்சியிலும் பலரை விலைக்கு வாங்கி இருக்கிறார்கள். ஏனெனில் பாஜக தவிர அங்கு வலுவாக இருக்கும் அனைத்து கட்சிகளும் இஸ்லாமிய தீவிரவாதத்தின் மீது மிகுந்த வாஞ்சையோடும், குண்டு வைப்பதும் கொலை செய்வதும் , கற்பழிப்பதும் அவர்களின் அடிப்படை உரிமை அதை நாம் அவர்களுக்கு கிடைக்க உதவ வேண்டும் என்ற மன நிலையில் அரசியல் பிழைத்துக்கொண்டிருப்பவர்கள்.
பங்களாதேஷ் பிரிவினைக்கு பிறகு எர்ஷாத் ஆட்சியில் அமர்ந்த பிறகு வங்கம் தீவிர இஸ்லாமிய அடிப்படைவாத நாடாக தன்னை அறிவித்துக்கொண்டு இயங்கத்தொடங்கிய பிறகு அங்கு பல இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள் களமிறங்கி இந்தியாவையும் இந்துக்களையும் சிதைப்பதையும், வதைப்பதையும் குலத்தொழிலாக செய்து வருகின்றது. இதற்கு பாகிஸ்தான் மற்றும் சீனாவின் ஆசி எப்போதும் உண்டு. அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளும் இதற்கு மறைமுகமாக உதவி வருகின்றன. பங்களாதேஷ்  இஸ்லாமிய அரசும் இஸ்லாமிய சமூகமும் எப்படி இந்துக்களை வதைத்து குரூரமாக அழித்து வருகிறது என்பதை இஸ்லாமிய எழுத்தாளர் போற்றுதலுக்குரிய தஸ்லீமா நஸ்ரீன் அவர்கள் தன் லஜ்ஜா நூலில் எழுதியுள்ளார். பங்களாதேசத்திலும், பாகிஸ்தானிலும் இந்துக்களை கொலை செய்து ருசி கொண்ட இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் உலகளவில் தீவிரவாதம் புரிய தங்களை முழு திறனுடன் வைத்துக்கொள்ளவும், கொலைகளை பழகவும் இந்தியாவை களமாக்கிக்கொண்டன.
இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள மதச்சார்பின்மை எனும் அறுவெறுப்பான அரசியல் வார்த்தையின் பின்னாலும் சிறுபான்மை வாக்கு வங்கி அரசியலின் நிழலிலும் ஒளிந்து கொண்டு இந்துக்களை கொலை செய்து தங்கள் தீவிரவாத திறமைகளையும் குண்டு வைப்பது கற்பழிப்பது மாதிரியான கொலைபாதக செயல்களை செய்து விட்டு தப்பிப்பதன் மூலம் நிறைய ஊக்கமும் உற்சாகமும் பெற்றார்கள். இதற்கு பிரிவினைவாதிகள், தேச விரோத சக்திகளின் முழு ஆதரவும் கிடைத்தது. அதன் பின் விளைவாகவே இந்த குண்டு வெடிப்பின் மீது எந்த நடவடிக்கையும் கூடாது என்று மம்தா கொக்கரிக்கிறார். மம்தா எனும் காங்கிரஸ் விஷவேரில் ஊறி வளர்ந்து வந்துள்ள சந்தர்ப்பவாத அரசியல் ரெளடி குண்டு வைத்து கொலை செய்யத்தானே இத்தனை மக்கள் இருக்கிறார்கள். கற்பழித்து கொலை செய்யப்படுவது இந்து பெண்களுக்கு ஒரு வரம் என நினைக்கிறார் போல.
burdwan-terrorsim-mamata-3
மம்தா மற்றும் திரிணாமுல் ரவுடிக்கும்பல்கள் குண்டு வைப்பதும் வன்புணர்வு, கொலை எல்லாம் இஸ்லாமியர்களின் பிறப்புரிமை அல்லவா, சிறுபான்மையின சிறப்புரிமையை இப்படி இந்துக்கள் கேள்வி கேட்பது என்ன நியாயம் என்கிறார்கள். இந்த தேசத்தின் 85 கோடி இந்துக்களை குண்டு வைத்து கொல்ல கூடாது. இங்குள்ள இந்து பெண்களை வன்புணர்வு செய்யக் கூடாது என்றெல்லாம் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை தடுத்தால் அவர்கள் இதை எல்லாம் எங்கே போய் அனுபவிப்பார்கள் பாவம் என்று  கவலைப்படுகிறார். இங்கே குண்டு வைத்து ட்ரெயினிங் எடுத்தால் தானே அடுத்த நாடுகளில் போய் குண்டு வைத்து கொலை செய்து அவர்கள் மறுமையில் 72 கன்னிகளை கற்பழித்து, மதுரசங்களை பருகி மார்க்க கடமை ஆற்ற முடியும் அதற்கு உதவாமல் வேறு எதற்கு உதவுவது என்று கவலையோடு தான் இதை கண்டு கொள்ளாமல் விட சொல்கிறார் மக்கள் செல்வி மம்தா பானர்ஜி.
டெய்லி டெலிகிராப் பத்திரிக்கைமுதல் டைம்ஸ் நவ், நியுஸ் எக்ஸ் சேனல் வரை அனைத்து நாளிதழ்களிலும் வந்துள்ள செய்திப்படி பர்துவானில் குண்டு தயாரித்து கொண்டிருந்த போது 3 இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் வெடிவிபத்தில் உயிரிழக்கிறார்கள். சம்பவம் நடந்த முதல் மாடிக்கு அண்டை வீட்டார் வந்த பொழுது இரும்பு கொலாப்சபில் கதவை இழுத்து மூடிக்கொண்டு சில கடிதங்களையும், வெடிகுண்டு தயாரிக்கும் செய்முறை பேப்பர்களையும் பீவிக்கள் எரித்து கொண்டு பேசி இருக்கிறார்கள். தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிந்து அவர்கள் வந்த போது அமைதி மார்க்கத்து பீவிக்கள் துப்பாக்கியை தூக்கி திரும்பி போய்விடுமாறு சொன்னதாக புகார் அளித்திருக்கிறார்கள், பத்திரிக்கையாளர்களிடத்தும் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் காவல் துறை அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. அவர்கள் வெறும் கையெறி குண்டுகளைத்தான் வைத்து மிரட்டினார்கள். அவர்கள் அப்பாவிகள் என்றார்கள். கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளை அவசரம் அவசரமாக வெடிக்க செய்து அழித்தார்கள்.
தீவிரவாதிகளுக்கு மசூதியில் பேசி இடம் ஏற்பாடு செய்து கொடுத்த திரிணாமூல் காங்கிரஸ் பிரமுகர் நஸ்ருல்லாவை காவல் துறை விசாரிக்க மறுக்கிறது..தேசிய பாதுகாப்பு படை இவ்வளவு பெரிய ஆயுதங்களும், வெடி மருந்துகளும் கண்டறியப்பட்டதாகவும், கைப்பற்றப்பட்டதாகவும் வந்த தகவலை அடுத்து பர்துவானுக்கு வருகிறது. ஆனால் தீதீ கும்பலும் அவரின் காவல் துறையும் அவர்களை அனுமதிக்க மறுத்து திருப்பி அனுப்புகிறது. அதன் பிறகு மித்னாப்பூரிலும்,பர்துவான் புறனகர் பகுதியிலும் பெரிய அளவு வெடி மருந்து குவியலை கண்டறிகிறது. இந்த முறை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு. அஜித் தோவலே நேரில் வருகிறார். முதலில் அவரையும் அனுமதிக்க மறுத்த மம்தா அரசு கடும் எச்சரிக்கைக்கு பின் அவரை அனுமதிக்கிறது. அவர் குண்டு வெடித்த இடத்தையும் அதன் முறை சேதம் இவற்றை பார்வையிட்டதுமே அது பெரிய திட்டத்தின் கண்ணி என உணர்ந்து விசாரணையை தீவிரபடுத்துகிறார். ஆனால் மம்தா தலைமையிலான அரசு நிர்வாகம் இது மதச்சார்பின்மைக்கு ஏற்பட்ட இழுக்கு. குண்டு வைக்கும், கொலை செய்யும் , கற்பழிக்கும் இஸ்லாமியர்களை இது போன்ற நடவடிக்கைகள் பதட்டமடையச்செய்யும். பாவம் இந்த தேசத்தில் சுதந்திரமாக குண்டு வைக்க கூட உரிமையில்லையா? என்ன அநியாயம் என கொதித்து எழுகிறார். வங்க தேசத்து ஊடுருவல்காரர்கள் தான் தன் அரசியல் வெற்றிக்கும் தன் நிழல் உலக வேலைகளுக்கும் ஆதாரமாக இருப்பவர்கள். அவர்களை விட்டுக்கொடுக்க முடியாது. என்று அடம் பிடிக்கிறார். அதன் பின்பு மிக கடுமையாக உள்துறை அமைச்சகத்தாலும், உளவுத்துறையாலும் எச்சரிக்கை விடப்பட்ட பிறகே கால் மனதோடு சம்மதிக்கிறார்.
அஜித்தோவல் மற்றும் தேசிய பாதுகாப்பு புலனாய்வுக்குழுவினரின் கருத்து படி அந்நிய பிரிவினைவாத சக்திகள் மதச்சாயம் பூசிக்கொண்டு இந்தியாமுழுவதும் நாச வேலைகள் செய்ய திட்டமிட்டிருந்த சதியின் ஒரு சிறு துளியை நாம் இப்போது கண்டிருக்கிறோம். இவர்கள் திட்டமிட்ட படி 150 இடங்களில் குண்டு வெடித்திருந்தால் சுமார் ஒரு லட்சம் ;பேர் இறந்திருப்பார்கள்.
mamata-bangladeshi-infiltrator-jihad
மேற்கு வங்கத்தில் மட்டுமல்ல அஸ்ஸாமிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் சட்ட விரோதமாக ஊடுருவி இருக்கும் பங்களாதேசத்து இஸ்லாமிய அடிப்படைவாதிகளாலும் அவர்களை ஆதரிக்கும் உள்ளூர் தீவிரவாத ஆதரவு அமைப்புகளாலும் பெரும் நாசம் ஏற்பட இருக்கிறது. என்று மதச்சார்பின்மை பேசி ஓட்டு பொறுக்கும் காங்கிரஸின் அஸ்ஸாம் முதலமைச்சர் தருண் கோகோய் பயந்து அலறுகிறார். ஆனால் இதை பற்றி எல்லாம் விவாதம் செய்ய எந்த ஊடகங்களுக்கும் திராணி இல்லை. இதன் உண்மை நிலையை அரசியல் இயக்கங்களாகட்டும் ஊடகங்களாகட்டும் மக்களிடையே கொண்டு சென்று சேர்த்த மாதிரியே தெரியவில்லை.
மேற்கு வங்க மாநிலத்தில் இயங்கும் மதராஸாக்கள் அனைத்தையும் விசாரணை வளையத்தில் கொண்டு வந்து சோதனையிட வேண்டுமென்று சொல்வதை மம்தா மதச்சார்பின்மையை காரணம் காட்டி மறுக்கிறார். மேலும் மம்தாவின் அரசால் அப்பாவி மக்களின் வரிப்பணத்திலிருந்து இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு வேறு வேறு பெயர்களில் பணம் கொடுக்கப்படுகிறது. அரபிக்கல்லூரி என்று சொல்லிக்கொண்டு குண்டு வைக்க கற்று கொடுப்பவர்களுக்கு மாதம் 2500-முதல் 5000 ரூபாய் வரை அரசு ஊதியமாக வழங்குகிறது.இமாம்களுக்கு மாதம் 2500 ரூபாய் ஊக்கத்தொகையும் அவர்களின் உதவியாளர்களுக்கு மாதம் 1000 ரூபாயும் அரசு சார்பில் இனாமாக மக்கள் வரிப்பணத்தில் இருந்து வழங்கி தீவிரவாதத்தை வளர்த்து வருகிறார் மம்தா.இலவச வீடு, இலவச மருத்துவ வசதி என்று குண்டு வைக்க கற்று கொடுப்பவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து வைத்து நாசம் செய்ய அழைக்கிறார் மம்தா.
தீவிரவாதத்தையும் மத அடிப்படைவாதத்தையும் வேரோடும், வேரடி மண்ணோடும் களைந்து எரிய வேண்டியது நம் அனைவரின் கடமை. அதற்கு தடையாக இருக்கும் மதச்சார்பினமையின் பெயரால் இந்து மதத்தினர் சந்திக்கும் பேரழிவிலிருந்தும் இவர்களை மீட்க வேண்டும்.மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்து மத வெறுப்பை விதைத்து அறுவடை செய்யும் சிறுபான்மை இன அடிப்படை வாதத்தை துடைத்தழிக்க வேண்டும்.
மனித நேய வியாபாரத்தில் கொடி கட்டி பறக்கும் கம்யூனிஸ இயக்கங்கள் இதை பற்றி எந்த அறிக்கையும் இல்லாமல் கள்ள மெளனம் சாதித்து கொண்டிருக்கிறது. மேற்கு வங்கத்தில் நிகழும் நிகழ்வுகள் தேசத்தையே அசைத்து பார்க்கும் அசாதாரணமான தன்மை கொண்டவை. அப்பாவி மக்களின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மதச்சார்பின்மையை காரணம் காட்டிக்கொண்டு வாயில் எதையோ வைத்து கொண்டிருப்பது போல இருப்பது தேச துரோகமாகும். வங்கம் முழுக்க தீவிரவாதிகளின் புகலிடமாகவும், குண்டு தயாரிப்பதை குடிசை தொழிலாக செய்து உலகம் முழுக்க ஏற்று மதி செய்து கொண்டிருந்தாலும் அதை பற்றி கொஞ்சமும் சொரணையின்றி அரசியல் செய்து வருகிறார். இந்த தேசத்தின் சாபக்கேடான மம்தா பனர்ஜி, மத்திய அரசாங்கம் உடனடியாக தேச விரோத மம்தா பானர்ஜி தலைமையிலான அரசை கலைத்து விட்டு சுதந்திரமான நீதி விசாரணைக்கு ஆணையிட்டு இந்த தேச மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
இந்த பாரத புண்ணிய பூமியில் மிக மிக கேடு கெட்டு ஒலிக்கும் மதச்சார்பின்மையின் குரலால் தேசமே திகைத்து நிற்கிறது. இந்த தேசம் எத்தனையோ அந்நிய ஆதிக்கங்களையும், மனிதாபிமானமற்ற மிருக ஆக்ரமிப்பாளர்களை சந்தித்து மீண்டு வந்திருக்கிறது. ஆனால் கடந்த நூற்றாண்டு முதல் ஒலித்து வரும் மதச்சார்பின்மை எனும் விஷமும், தீவிரவாத மறைப்பு கேடயமும் உள்ள அருவெறுப்பான சொல்லால் இந்த தேசம் அடைந்துள்ள இழப்புகள் சொல்ல முடியாதவை. மதச்சார்பின்மையின் பெயரால் பிரிவினைவாதியும் , கொலைகாரனுமான முகம்மது அலி ஜின்னா துவங்கி யாசின் மாலிக்குகள், பதகல்கள், தாவூத்கள் வரை இந்த தேசத்தை துண்டாட அனுமதி கொடுத்தும், இந்த தேச சொத்துக்களை கொள்ளை அடிக்கவும், கொலை செய்யவும், கற்பழிக்கவும் அதன் பின்னர் தண்டனை இல்லாமல் தப்பிக்கவும் வழி செய்கிறது,
இனியும் மதச்சார்பின்மையை காரணம் காட்டி இஸ்லாமிய பயங்கரவாதத்தை சகித்து கொண்டிருந்தால் வரலாறு நம்மை மன்னிக்காது.

-தமிழ் ஹிந்து.


''எனக்காக யாரும் வருத்தப்பட வேண்டாம்!''

ஈரானின் மனச்சாட்சியை தட்டி எழுப்பும் ரெய்ஹானே

''அந்த நேரத்தில் ஓர் அசாதாரண சூழ்நிலையை உணர்ந்தேன். என்னைக் கற்பழிக்கத் துடித்த மிருகத்திடம் இருந்து தப்பிக்க, அதன் முதுகில் கத்தியால் குத்தினேன். பிறகு, அங்கிருந்து தப்பினேன். என்னைக் காத்துக்கொள்ளவே அந்தக் காரியத்தைச் செய்தேன்'' என்றார் ரெய்ஹானே. ஆனால் நீதிபதிகளோ, அவரது வாதத்தை ஏற்கத் தயாராக இல்லை. ''இது திட்டமிட்ட கொலை. சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் ரெய்ஹானே கத்தியை வாங்கியுள்ளார்'' என்று கூறி, அந்தப் பெண்மணிக்குத் தூக்குத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தனர். தீர்ப்பு வழங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 25-ம் தேதி ரெய்ஹானே தூக்கிலிடப்பட்டார். சர்வதேச அமைப்புகளின் கடுமையான எதிர்ப்புகளை மீறி, அந்தச் செயலை ஈரான் நாட்டின் அரசு நிகழ்த்தியுள்ளது!

ஈரானைச் சேர்ந்த ரெய்ஹானே ஜபாரி ஒரு இன்டீரியர் டிசைனர். அறுவை சிகிச்சை நிபுணரான மோர்டெஸா அப்தோலாலி சர்பந்தி என்பவர், தனது அலுவலகத்தைச் சீரமைத்துத் தரும்படி ரெய்ஹானேவிடம் தொலைபேசியில் கேட்டுக்கொண்டார். மருத்துவரின் அலுவலகத்துக்கு ரெய்ஹானே சென்றார். ரெய்ஹானேவிடம் மதுக் கோப்பையைக் கொடுத்து, குடிக்குமாறு கட்டாயப்படுத்தி இருக்கிறார் அந்த மருத்துவர். அந்த இளம்பெண்ணை அனுபவிக்க வேண்டும் என்பது அந்த மருத்துவரின் நோக்கமாக இருந்தது. நிலைமை விபரீதமாகி இருக்கிறது. அந்த இளம்பெண் கத்தி எடுத்து மோர்டெஸாவின் முதுகில் குத்தினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த மோர்டெஸா இறந்துவிட்டார். கைது செய்யப்பட்ட ரெய்ஹானே இரண்டு மாதங்கள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

2009-ல் ரெய்ஹானேவுக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. ரெய்ஹானேவின் வழக்கறிஞர் முகமது அலி ஜெடாரி, ''வழக்கு விசாரணை நடைபெற்ற காலகட்டத்தில் ஆறு மாதங்களில், வெறும் இரண்டு முறைதான் என்னை ரெய்ஹானேவைப் பார்க்க அனுமதித்திருந்தனர். நேர்மையான வழியில் இந்த விசாரணை நடைபெறவில்லை. ரெய்ஹானேவின் நியாயமான கோரிக்கைகள் ஒன்றைக்கூட நீதிமன்றம் நிறைவேற்றவில்லை'' என்று கருத்துத் தெரிவித்திருந்தார். சமூக வலைதளங்கள் மூலம் இந்தத் தீர்ப்புக்கு உலகம் முழுதும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. சர்வதேச மனித உரிமை அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஈரானுக்கு கடுமையான அழுத்தத்தைக் கொடுத்தன. ஆனாலும், ரெய்ஹானேவைத் தூக்கிலிட்டுவிட்டது ஈரான் அரசு.

ரெய்ஹானேவின் தாய் ஷோலே பக்ரவன், தன் மகளைச் சந்தித்துவிட்டு திரும்பிய மறுநாள் காலையில், ஈரான் அரசு அந்த தண்டனையை நிறைவேற்றியது. ''என் மகளைப் பார்க்க சிறைக்குச் சென்றபோது, தனது முடிவை அவள் அறிந்திருந்தாள். 'எனக்காக யாரும் வருத்தப்பட வேண்டாம்’ என்றாள். சிறை அதிகாரிகள் அவளை மிரட்டி வாக்குமூலம் பெற்றுள்ளனர். என் மகளைத் தூக்கிலிடப் போகிறார்கள் என்பதைக்கூட எனக்கு முன்னரே தெரிவிக்கவில்லை. சிறையிலிருந்து வெளிவந்துவிடுவார் என்று நினைத்தேன். ஆனால், என் மகளைக் கொன்றுவிட்டார்கள். என் மகளின் இறந்த உடலைக்கூட தொட மறுத்ததுடன், இறுதிக்காரியங்களையும் செய்யவிடவில்லை. மனித உரிமை அத்துமீறல் மற்றும் ஈரானில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகப் போராட, என் மகள் குற்றமற்றவர் என்று உலகுக்கு நான் தெரியப்படுத்த ரெய்ஹானேவின் ஆதரவாளர்களே எனக்குக் கை கொடுங்கள். ஈரானில் உள்ள ஊடகங்கள் என் மகளை குற்றவாளியாக சித்திரிக்கின்றன. இறப்புக்குப் பின்னர் உள்ள வாழ்வில் அதீத நம்பிக்கை கொண்டவள் ரெய்ஹானே. அங்குதான் நிரபராதி என்பதை நிரூபிப்பாள். இந்தப் பிறவியில் தன்னைத் துன்புறுத்திய அனைவரையும் மன்னித்து விட்டாள். அவர்களைக் கடவுள் பார்த்துக்கொள்வார்'' என்று தன் மகளின் இழப்பு குறித்து பதிவு செய்துள்ளார் ரெய்ஹானேவின் தாய் ஷோலே பக்ரவன்.
ஐக்கிய நாடுகள் சபை, ''மனித உரிமைகளை நிலைநாட்டுவேன் என்று தேர்தல் காலத்தில் ஹசான் ருஹானி கொடுத்த வாக்குறுதிகளை முற்றிலுமாக மறந்துவிட்டார். கடந்த ஓராண்டுகளில் மட்டுமே 852 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கற்பழிப்பு நடந்து விட்டால், இஸ்லாமியர்கள், உடனே, சவுதியை பார், ஈரானைப் பார், இஸ்லாமிய நாட்டை பார், உடனே தூக்கு தண்டனை கொடுத்து தண்டிப்பார்கள் என்று வரிந்து கட்டிக்கொண்டு கருத்து தெரிவிப்பார்கள். ஆனால், இங்க ரெய்ஹானே செருப்படி கொடுத்து இஸ்லாமியர்களுக்கு திருந்த அறிவுரை கூறியுள்ளார்,

அறுவை சிகிச்சை நிபுணரான மோர்டெஸா மதுவை கொடுத்தது இஸ்லாம் மார்கத்திற்கு எதிரானது . அவருக்கு என்ன தண்டனை?
பணம் படைத்தவுக்கு இஸ்லாத்தில் ஒரு நிலை
ஏழைகளுக்கு இஸ்லாத்தில் ஒரு நிலை..?

ஈரான் அரசு தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு மனித உரிமையை நிலை நாட்ட வேண்டும்'' என்று ஈரானை எச்சரித்துள்ளது.
ரெய்ஹானே ஜபாரியின் மரணம், மாற்றத்துக்கான விதையாக அமையட்டும்!
 
 

ஈரானில் ஆண்கள் பங்கேற்ற வாலிபால் போட்டியை பார்த்ததற்காக ஓராண்டு சிறைத் தண்டனை பெற்ற பெண் நேற்று முதல் சிறையில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
கான்ச்சே கவாமி (25) என்ற அந்த பெண் ஈரான் வம்சாவளியை சேர்ந்த பிரிட்டன் பிரஜை ஆவார்.
கான்ச்சே கவாமி கடந்த ஜூன் மாதம் ஈரான் - இத்தாலி இடையே நடந்த வாலிபால் விளையாட்டு போட்டியை பார்க்க சென்ற குற்றத்துக்காக விளையாட்டு மைதானத்திலேயே கைது செய்யப்பட்டார். அவருடன் பெண் நிருபர்கள் சிலரும் கைது செய்யப்பட்டனர். அடுத்த 2 நாட்களில் கவாமி விடுவிக்கப்பட்ட நிலையில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
பெண்கள் கலந்து கொள்ள கூடாது
இது குறித்து ஈரான் போலீஸ் அதிகாரி கூறும்போது, "ஈரானில் ஆண்கள் விளையாட்டு போட்டி களில் பெண்கள் கலந்து கொள்ள தடை உள்ளது.
பெண்கள் மீது ஆண்கள் முறையற்ற வகையில் அத்துமீறி நடப்பதை தவிர்க்கும் விதத்திலேயே இது போன்ற விதிகள் இங்கு உள்ளன. அதனை மதித்து நடக்க வேண்டியது பெண்களின் கடமை" என்று கூறினார்.
ஈரானில் இஸ்லாமிய நடைமுறைகளை முன்வைத்து அரசு நிர்வாகம் நடக்கிறது. இதனால் அங்கு இது போன்று பல விதிகள் நடைமுறையில் உள்ளன. இதனால் விதிகளை மீறி நடந்ததாக கான்ச்சே மீது மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
வழக்கு விசாரணை முடிந்து கான்ச்சேவுக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கான்ச்சே சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
கான்ச்சே கவாமியின் கைதை எதிர்த்து ஈரானில் பிரிட்டன்வாசிகள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் கான்ச்சே கவாமிக்கு ஆதரவாக இணையதளத்தின் மூலம் சுமார் 5 லட்சம் ஆதரவாளர்களை திரட்டி அவரை விடுதலை செய்ய போராடி வருகின்றனர்.
இதற்கு சர்வதேச அளவில் ஆதரவு குவிந்து வருகிறது. 

-தி இந்து.

Friday, 31 October 2014


தற்போது வ.களத்தூர் பகுதி மட்டுமல்லாது தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவி வரும் கண் நோய் மெட்ராஸ் ஐ எனத்தவறாக ஊடகங்களிலும் , சமூக வலைதளங்களிலும் பரப்பப்பட்டு வருகிறது....

மெட்ராஸ் ஐ எனப்படும் கண் நோய் பாக்டீரியா வினால் பரவுகிறது.. ஆனால் தற்போது பரவி வரும் கண் நோய் வைரஸ் சினால் பரவும் 'பிங்க் ஐ (Pink  Eye) ' எனப்படும் நோய் என கூறப்படுகிறது...

மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் நாமே மருந்து கடைகளில் விற்கப்படும் மருந்துகளை வாங்கி உபயோகம் செய்தால் பார்வை இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக கண்ணின் வலியை குறைக்க உதவும் Dexamethazone,  Bedamethazone எனப்படும்  "ஸ்டீராய்ட்" கொண்ட கண் சொட்டு மருந்துகளை உபயோகம் செய்தால் கண் நோய்  குணமாவது தாமதம் ஆவது மட்டுமல்லாது பார்வை இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கைகளை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு கழுவதினாலும் , நோயாளிகள்பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்தாமல் இருப்பதனாலும் கட்டுப்படுத்தலாம். நோயாளியின் கண்களை காண்பதால் நோய் தோற்றும் என்பது தவறான கருத்தாகும்.

இந்த நோய் பாதிக்கப்பட்ட சமயங்களில் அதிக கண் கூச்சம் இருந்தால் உடனே கண் மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம். தாமதித்தால் பெரும் இழப்பை சந்திக்க வேண்டி இருக்கும்.

மேலும் அறிய- http://www.thehindu.com/…/beware-of-pink…/article6539811.ece

Wednesday, 29 October 2014

வ.களத்தூர் கல்லாற்றில் புதுவெள்ளம் புரண்டோடுகிறது. கடந்த வாரம் தொடர்ந்து மழை பெய்து வந்தாலும் கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதிகளான பூலாம்பாடி, அரும்பாவூர் மற்றும் மலையாலப்பட்டி பகுதிகளில் அதிக மழை பெய்யாத காரணத்தால் நம் கல்லாற்றில் வெள்ளம் வரவில்லை. கடந்த சில நாட்கள் வரை இதுதான் நிலைமை.


ஆனால் இரண்டு நாட்களுக்கு முன் பெய்த மழை காரணமாக நுரை வெள்ளமாக காட்டுத்தண்ணீர் வந்தது.
நேற்று இரவு கல்லாற்றில் நீர்பிடிப்பு பகுதியான பூலாம்பாடி பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக செந்தண்ணீர் வருகிறது. இரு கரைகளையும் தொட்டுக்கொண்டோடும் கல்லாற்றுநீரை காண கண்கோடி வேண்டும்.



பட உதவி- சுரேஷ்.A, கண்ணன்.R.

Friday, 24 October 2014

    கோவில்களையும் அவற்றின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களையும் பாதுகாப்பதாகச் சொல்லித்தான் அரசு அவற்றின் நிர்வாகத்தைக் கையகப்படுத்திக் கொண்டது. ஆனால் கடந்த 47 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் ஆலய நிர்வாகம் என்கிற பெயரில் கோவில்களின் சீரழிவையும், கோவில் சொத்துக்களின் பேரழிவையும்தான் பார்க்கிறோம். நிலங்கள், தோப்புகள், மனைகள், கட்டிடங்கள், வெள்ளி, தங்கம், நகைகள், வாகனங்கள், பசுக்கள் உள்ளிட்ட கால்நடைகள் என ஒவ்வொரு கோவிலுக்கும் ஏரளமான சொத்துக்கள் உண்டு.
Kovil Nilangalum Aranilaiyathuraiyin Alatchiyamum
அறநிலையத்துறை நுழைவுக்கட்டணம், சிறப்புக்கட்டணம், அர்ச்சனைக்கட்டணம், அன்னதானம், தங்கரதம் செய்வது, கும்பாபிஷேகம் நடத்துவது என்று சகல விஷயங்களுக்கும் பக்தர்களிடமிருந்து பணம் பெறுவதில் காட்டும் திறமையில், பத்தில் ஒரு பங்குகூட, கோவில் சொத்துக்களைப்பாதுகாப்பதிலோ அவற்றிலிருந்து வருமானம் பெறுவதிலோ காட்டுவதில்லை. அனைத்துச் சொத்துக்களைப் பற்றியும் விவரமாகப் பார்த்தால் ஒரு பெரிய நூலே எழுதவேண்டியிருக்கும். ஆகவே, கோவில் நிலங்களைப் பற்றி மட்டும், சில குறிப்பிட்ட விவரங்களைப் பற்றி மட்டும் பார்ப்போம்.
திராவிட மாயையில் காணாமல் போன நிலங்கள்
தமிழகத்தில் உள்ள ஆலயங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரலாறு கொண்டவை. சேர, சோழ, பாண்டிய, பல்லவர்கள் போன்று பழங்காலத்தில் தமிழகத்தை ஆண்ட மாமன்னர்களால் கட்டப்பட்டவை. அவ்வாறு தாங்கள் கட்டிய மாபெரும் கோவில்களுக்கு அம்மன்னர்கள் நிலங்கள் முதலான சொத்துக்கள் ஏராளமாகக் கொடுத்தனர். மன்னர்கள் மட்டுமல்லாமல், பின்வந்த நாட்களில் நிலச்சுவான்தாரர்களும், செல்வந்தர்களும் கூட கோவில்களுக்குப் பலவிதமான சொத்துக்களைத் தானமாகத் தந்துள்ளனர். அந்தச் சொத்துக்கள் மூலமாகக் கிடைக்கும் வருமானத்தில் கோவில் நிர்வாகம் மட்டுமல்லாமல், பல்வேறு திருவிழாக்களும், உற்சவங்களும் கொண்டாடுவதும், பசுமடங்கள் கட்டிப் பசுக்களை பராமரிக்கவும் வேண்டும் என்பதே தானமளித்தவர்களின் நோக்கமாகும். மேலும் கோவில் சம்பந்தப்பட்ட, ஹிந்து சமூகம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு சொத்துக்களின் மூலம் கிடைக்கும் வருமானம் பயன்படவேண்டும் என்பதே அவர்கள் எண்ணமாகும்.
ஆனால், கடந்த பல ஆண்டுகளில், கோவில் சொத்துக்கள் குறைந்தும் அழிந்தும் வருவதோடு மட்டுமல்லாமல், இருக்கின்ற சொத்துக்களிலிருந்து கிடைக்கவேண்டிய வருமானமும் நின்றுபோயுள்ளதைக் காண்கிறோம். ஊழலும் சீர்கேடும் நிறைந்த நிர்வாகத்தினால்தான் இந்த நிலை என்பது தெளிவு. உதாரணத்திற்கு, தமிழகத்தில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களுக்குச் சொந்தமான நிலங்களின் கணக்கை எடுத்துக்கொள்வோம். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 36,488 கோவில்கள், 56 திருமடங்கள், 58 பிரம்மாண்ட கோவில்கள், 17 சமண கோவில்கள் ஆகியவை உள்ளன. இவற்றுக்குச் சொந்தமாக 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் இருப்பதாகக் கடந்த ஆண்டு அரசு வெளியிட்ட அறநிலையத்துறைக்கான கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் 1986ம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அறநிலையத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் மேற்கண்ட கோவில்களுக்கு மொத்தமாக 5.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் இருந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. அதாவது 28 ஆண்டுகளில் 47,000 ஏக்கர் நிலங்கள் காணாமல் போய்விட்டன! (தினமலர் - 5 ஆகஸ்டு 2014).

Dinamalar Report on 47000 acres Temple Lands

திராவிட மாயையில் கோவில் நிலங்கள் காணாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதற்கு ஒரு உதாரணமாக, சென்னையில் உள்ள திருவண்னாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் சொத்துக்களைக் கூறலாம். அண்ணாமலையார் கோவிலுக்குச் சொந்தமாக சென்னையில், அடையாறு ஊருர் கிராமத்தில் 30 ஏக்கர் 18 செண்டில் வீட்டு மனைகள், சென்னை மீர்சாகிப் பேட்டை பகுதியில் 7 ஏக்கர் வீட்டு மனைகள், சென்னை தண்டையார்பேட்டை தனபால் நகரில் 23 கிரவுண்டுகள் வீட்டு மனைகள் இருப்பதாகச் சொல்லியிருந்தது கோவில் நிர்வாகம். ஆனால் தற்போது தண்டையார்பேட்டை தனபால் நகரில் இருந்த 23 கிரவுண்டுகள் வீட்டு மனைகள் போன இடம் தெரியவில்லை!
வாடகை பாக்கியும் பதாகைக் காட்சிகளும்
அறநிலையத்துறை கோவில்களுக்குச் சொந்தமான கட்டிடங்களின், மனைகளின் வாடகைதாரர்களிடமிருந்து முறையாக வாடகை வசூலிப்பதில்லை. பல வாடகைதாரர்கள் பல வருடங்களாக வாடகை தராமல் இருக்கின்றனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி பல கோவில்கள் சம்பந்தப்பட்ட விவரங்களைக் கேட்ட பின்புதான், அறநிலையத்துறை வாடகை வசூலிக்க நடவடிக்கைகள் எடுப்பதுபோல ஒரு தோற்றத்தை உருவாக்கியுள்ளது.
அதாவது, ஒவ்வொரு கோவிலின் வாசலிலும் வாடகை தராமல் இழுத்தடிக்கும் நபர்களின் பெயர்களையும், அவர்கள் தரவேண்டிய வாடகை பாக்கியையும், இதர குறிப்புகளையும் தாங்கிய பதாகைகளை வைத்திருக்கிறது அறநிலையத்துறை. ஆனால் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளைப் பற்றிய விவரங்களைத் தெரிவிக்கவில்லை. நடவடிக்கை எடுக்கப்பட்டதா, வாடகை பாக்கி வசூலிக்கப்பட்டதா, என்பதெல்லாம் தெரியவேண்டுமானால் மீண்டும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம்தான் கேட்டுப் பெறவேண்டும்.
உதாரணத்திற்கு எழும்பூர் ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோவிலை எடுத்துக்கொள்வோம். இந்தக் கோவிலுக்குச் சொந்தமான ஒரு கட்டிடத்தின் வாடகைதாரர் ”கோடி கிளினிக்கல்” என்கிற நிறுவனம். இந்நிறுவனம் வைத்திருக்கும் வாடகை பாக்கி எவ்வளவு தெரியுமா? ரூ.2,06,17,500/-! இக்கோவிலுக்குச் சொந்தமான மூன்று மனைகளின் வாடகைதாரர்களான எல்.எஸ்.குணசேகரன், எம்.குமர் மற்றும் பி.கே.அப்புகுட்டன் ஆகியோர் முறையே ரூ.6,03,578/-, ரூ.10,79,058/- மற்றும் ரூ.4,31,524/- வாடகை பாக்கி வைத்துள்ளனர்.

hrce rent remittenance announcement

இத்தனை ஆண்டுகளாக ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை? இவ்வளவு தாமதமாக அறநிலையத்துறை விழித்துக்கொள்வதற்கான காரணம் என்ன? கட்டிடங்களுக்கும் மனைகளுக்கும் சந்தை நிலவரப்படியல்லாமல் “நியாய வாடகை” என்கிற பெயரில் குறைந்த அளவே வாடகை நிர்ணயம் செய்திருக்கும்போது, அந்தக் குறைந்த வாடகையே பல லட்சங்களும் கோடிகளுமாக சேரும் வரை பல ஆண்டுகளாக எந்த நடவடிக்கயும் எடுக்காமல் இருந்ததற்கான காரணங்கள் என்ன? வாடகைதாரர்களுக்கும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் இடையே ஏதாவது புரிதல் உள்ளதா? இவ்வாறான கேள்விகள் பக்தர்கள் மனதில் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. இக்கேள்விகளுக்கு விடைகளும் இல்லை!
மாற்று மதத்தவர்கள் அனுபவிக்கும் கோவில் சொத்துக்கள்
தமிழக அரசின் அரசு ஆணை (G.O. Ms. No. 689, Home dated 18th February 1958) படி, கோவில் சொத்துக்களை ஹிந்து அல்லாதவர்களுக்கு வாடகைக்கு விடக்கூடாது என்று உள்ளது. ஆனால், பல கோவில்களுக்குச் சொந்தமான கட்டிடங்களும், மனைகளும் மாற்று மதத்தவருக்கு வாடகைக்கு விடப்பட்டு அவர்களும் அனுபவித்து வருகின்றனர். அவ்வாறு அனுபவித்து வரும் பலர் தாங்கள் கொடுக்க வேண்டிய “நியாய வாடகை”யைக்கூட ஒழுங்காகக் கொடுப்பது கிடையாது. அதை வசூலிக்க அறநிலையத்துறையும் முறையான நடவடிக்கைகள் எடுப்பதில்லை.
உதாரணத்திற்கு சென்னை புரசைவாக்கம் கங்காதரேஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான ஒரு மனையை “தி சால்வேஷன் ஆர்மி” என்கிற கிறிஸ்தவ நிறுவனம் அனுபவித்து வருகிறது. இந்நிறுவனம் 5.30 லட்சம் ரூபாய் வாடகையும் பாக்கி வைத்துள்ளது. (தினமலர்- 3 செப்டம்பர் 2014)
Dinamalar---Gangadareswarar-Temple-Report-1
இந்நிறுவனம் கடுமையான மதமாற்றத்தில் ஈடுபடும் நிறுவனமாகும். ஹிந்துக்களை கிறிஸ்தவராக மதமாற்றம் செய்யும் ஒரு தேச விரோத நிறுவனம், ஹிந்துக்கோவிலின் சொத்தையே அனுபவித்துக்கொண்டு, அதற்கு லட்சக்கணக்கான ரூபாய்கள் வாடகையும் தராமல் இருக்கும் நிலை திராவிட ஆட்சியில்தான் நிகழும்.
இம்மாதிரியாகப் பலகோவில்களுக்குச் சொந்தமான கட்டிடங்களையும் மனைகளையும் அனுபவித்து வரும் மாற்று மதத்தினர் அவற்றுக்குப் பல வருடங்களாக வாடகையும் தராமல் இருக்கின்றனர். தன்னுடைய அரசின் ஆணையைத் தானே மீறியதோடு மட்டுமல்லாமல் அதைப் பற்றிக் கவலையும் படாமல் இருக்கிறது அறநிலையத்துறை.
ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாப்பதாகக்கூறி நடத்தப்படும் குத்தகை கூத்து
பல ஊர்களில் கோவில்களின் நிலங்கள் தனியாரின் ஆக்கிரமிப்புகளில் சிக்கியிருக்கின்றன. அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி அந்நிலங்களை மீட்பதிலும் தமிழக அரசு அலட்சியம் காட்டி வருகிறது; ஆமை வேகத்தில் செயல்பட்டு வருகிறது. திடீரென்று சமீபத்தில் கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்றவும் அவை மூலம் வருமானத்தை பெருக்கவும் வேண்டும் என்கிற ஞானோதயம் தமிழக அரசுக்கு வந்தது. உடனே முதல்வர் தலைமையில் அறநிலையத்துறையின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் இவ்வருடம் ஜூன் மாதம் 25ம் தேதி நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோவில்நிலங்களில் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்துடன் “காப்பகத் தோட்டம்” (Captive Plantation) திட்டத்தின் கீழ் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டு, மொத்த வருவாய் பகிர்வு அடிப்படையில், வருவாயில் 70 சதவிகிதம் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்திற்கும் 30 சதவிகிதம் சம்பந்தப்பட்ட கோவில்களுக்கும் என்ற வகையில் மரங்களை வளர்த்திட நீண்டகால குத்தகைக்கு நிலங்களை வழங்குவதாக முடிவு எடுக்கப்பட்டது.
செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்திற்கு மரக்கூழ் அதிக அளவில் தேவைப்படுவதால், அந்நிறுவனமே மரங்களை வளர்க்கும் நோக்கத்துடன் அரசுக்குச் சொந்தமான நிலங்களைப் பெற்று வருகிறது. அதுவும் அரசு நிறுவனம் என்பதால் அரசும்பல்வேரு துறைகளுக்குச் சொந்தமான நிலங்களைக் கொடுத்து உதவுகிறது. அதைப்போலவே, அறநிலையத்துறையின் உயர்மட்ட குழுவும் கோவில் நிலங்களை அந்நிறுவனத்திற்குக் குத்தகை கொடுக்க முடிவு செய்தது.
அம்முடிவின்படி முதல் கட்டமாக, திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்குச் சொந்தமான 776 ஏக்கர் நிலமும், திருவள்ளூர் மாவட்டம், தொட்டிக்கலை பகுதியில் உள்ள கேசவ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, கிளாம்பாக்கம் கிராமத்தில் உள்ள, 75.67 ஏக்கர் நிலமும், திருப்போரூர் கந்தசாமி கோவிலுக்கு சொந்தமாக, எடையான் குப்பம், தண்டலம் கிராமங்களில் உள்ள, 71.64 ஏக்கர் நிலமும், திருப்போரூர் அருகே திருவிடந்தையில் உள்ள நித்யகல்யாண பெருமாள் கோவிலுக்கு சொந்தமாக, அதே கிராமத்தில் உள்ள, 349.46 ஏக்கர் நிலமும், மாமல்லபுரம் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான, 55.15 ஏக்கர் நிலமுமாக மொத்தம் 1328 ஏக்கர் நிலங்களை குத்தகைக்கு விட முடிவு செய்துள்ளதாகவும், ஆட்சேபணையுள்ளவர்கள் அக்டோபர் 10ம் தேதி சென்னையிலுள்ள அறநிலையத்துறை தலைமை அலுவலகத்தில் ஆணையரைச் சந்தித்துத் தங்கள் ஆட்சேபணைகளைத் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. (தினமலர் – 7 செப்டம்பர் 2014)
Nellaiyappar-Temple-Land-Lease-to-TNPL
அரசின் இம்முடிவைப் பொறுத்தவரை பின்வரும் விஷயங்கள் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியவை:
  • தமிழக அரசின் அறநிலையத்துறைக்கான ஆலோசனைக்குழுவானது இந்து அறநிலையத்துறை சட்டத்தின் 7வது பிரிவின்படி அமைக்கப்பட்டதாகும். அந்தச் சட்டப்பிரிவின்படி, கோவிலையோ கோவில் சம்பந்தப்பட்ட விஷயங்களையோ மேற்பார்வை பார்பதற்கோ நிர்வாகம் செய்வதற்கோ அந்த ஆலோசனைக்குழுவிற்கு அதிகாரம் இல்லை. அது ஆலோசனைகள் செய்து அதற்கேற்றவாறு பரிந்துரைகள் மட்டுமே செய்ய முடியும். அவ்வாறு செய்யப்பட்ட பரிந்துரைகள் சரியான ஆய்வின்றி கோவிலுடைய நலத்தைக் கணக்கில் கொள்ளாமல் இருந்தால், அவற்றை நிராகரிக்க கோவிலின் அறங்காவலர் குழுவுக்கு அதிகாரம் உள்ளது. ஏனென்றால் அறங்காவலர்கள் மட்டுமே கோவிலை நிர்வாகம் செய்யும் அதிகாரம் உள்ளவர்கள்.
  • ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழக அரசு எந்தக் கோவிலுக்கும் அறங்காவலர்களை நியமனம் செய்யவில்லை. வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருகிறது. இந்து அறநிலையத்துறை சட்டத்தின் 47வதுபிரிவின்படி கோவில்களுக்கு அறங்காவலர்கள் அமைப்பது தமிழக அரசின் தலையாய கடமையாகும். இந்தக் கடமையை செய்யத்தவறிய தமிழக அரசும் அறநிலையத்துறையும், அவர்கள் இஷ்டத்திற்கு அறங்காவலர்களுக்குப் பதிலாக அவர்கள் இடத்தில் “பொருந்தும் நபர்கள்” (Fit Persons) என்கிற பெயரில் அறநிலையத்துறை அலுவலர்கள் சிலரையே நியமிக்கின்றன. ஆனால் இந்து அறநிலையத்துறை சட்டத்தில் அரசு அலுவலர்களை கோவில் அறங்காவலர்களாக நியமிக்க இடமோ அதிகாரமோ கொடுக்கப்படவில்லை.
  • அறங்காவலர்கள் என்று யாரும் இல்லாதபோது, கோவில் சொத்துக்களை நிர்வாகம் செய்வதற்கும், விற்பதற்கும், வாடகைக்கோ குத்தகைக்கோ விடுவதற்கும் செயல் அலுவலருக்கோ, உதவி/துணை/இணை ஆணையருக்கோ, பொருந்தும் நபருக்கோ சட்டப்படி அதிகாரம் இல்லை. இந்து அறநிலையத்துறை சட்டத்தின் 23வது பிரிவு ஆணையருக்கு மட்டும் குறைந்த பட்சமாக மேற்பார்வை செய்யும் அதிகாரம் மட்டுமே கொடுத்துள்ளது. அவரும் கூட, குறிப்பிட்ட சொத்து எதற்காகக் கோவிலுக்குக் கொடுக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு தேவையான வருமானம் வருகிற அளவில்தான் அந்தச் சொத்தைக் கையாள வேண்டும்.
  • மேலும், இவ்வருடம் ஜனவரி மாதம் 6ம் தேதி, டாக்டர் சுப்பிரமணியன் ஸ்வாமி தமிழக அரசுக்கு எதிராகத் தொடர்ந்த சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கில், வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், இந்து அறநிலையத்துறை சட்டம் 45வது பிரிவின்படி ஆணையர் செயல் அலுவலரை நியமித்தது செல்லாது என்று தெளிவாகக் கூறியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்கள் அனைத்திலும் இருக்கும் செயல் அலுவலர்களின் நியமனமும் செல்லாததாகிவிடுகிறது. எனவே, அந்தச் செயல் அலுவலர்கள் கோவில் சொத்துக்களைக் குத்தகைக்கு விடவோ குத்தகைதாரர்களுடன் ஒப்பந்தம் செய்யவோ அதிகாரம் அற்றவர்கள் ஆவார்கள்.
  • மேற்கண்ட கோவில்களின் நிலங்களைக் குத்தகைக்கு விட முடிவு செய்த அரசு, தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் “காப்பகத் தோட்டம்” திட்டத்தின்படி ஒப்பந்தம் போட முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தின்படி, “நிகர லாபத்தில் 30% பங்கு அல்லது ஒரு ஏக்கருக்கு ஒரு வருடத்திற்கு ரூ.1000/-” என்கிற மிகக் குறைந்த வருமானமே கிடைக்கும். இந்தத் திட்டம் கோவில் நலனிற்குச் சற்றும் உகந்ததாக இல்லை. சாதாரணமாக, கோவில் நிலங்களையோ மடங்களின் நிலங்களையோ குத்தகைக்கு விடும்போது “பாதிவாரம்” என்கிற திட்டம்தான் பின்பற்றப்படுவது வழக்கம். இந்தப் பாதிவாரம் திட்டத்தின்படி, நிலச் சொந்தக்காரரும் குத்தகைதாரரும் நிகர லாபத்தில் சரிசமமாக (50%) பங்கு பிரித்துக்கொள்வர். ஆனால், காப்பகத் தோட்டம் திட்டத்தின்படி 30% லாபம், அதுவும் ஐந்து வருடங்களின் முடிவில்தான் பேசப்படுகிறது. அந்த நிகர லாபம் எப்படி பெறப்படும் என்பதும் தெளிவாகச் சொல்லப்படவில்லை. மேலும் நிலங்களுக்கு குத்தகைத் தொகை நியமிப்பதற்கும், ஏலம் விடுவதற்கும் தெளிவான வழிகாட்டுதல் இருக்க, அவை பின்பற்றப்பட்டதாகத் தெரியவில்லை.
  • மேற்குறிப்பிட்ட கோவில்களின் நிலங்களின் தற்போதைய சந்தை நிலவரத் தொகையைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், அறநிலையத்துறை தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்திற்கு மிகவும் குறைந்த தொகைக்கு குத்தகைவிட முயல்வது புரியும். இச்செயல் கோவிலின் நலனுக்கோ அல்லது பக்தர்களின் நலனுக்கோ சற்றும் உகந்ததில்லை. இது பக்தர்களின் மதச்சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 25வது க்ஷரத்துக்கு எதிரானதாகும்.
  • இந்து அறநிலையத்துறை சட்டத்தின் 78, 79 மற்றும் 79-C பிரிவுகள் கோவில் நிலங்களின் ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்கும், அக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுவதற்கும், வாடகை மற்றும் குத்தகைத் தொகைகளை வசூல் செய்வதற்கும் அற்நிலையத்துறை அதிகாரிகளுக்கு தேவையான அதிகாரமும் உரிமையும் அளிக்கின்றன. அந்த அதிகாரங்களைக் கொண்டும் தேவையான அலுவலர்களைக் கொண்டும் கோவில் நிலங்களை சரிவர நிர்வாகம் செய்யாமல் இருப்பது, அறநிலையத்துறை தன்னுடைய ஊழல் நிறைந்த திறமையற்ற நிர்வாகத்தை ஒத்துக்கொள்வதாகும். எனவே, கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்றுவதற்காக இந்த மாதிரி குத்தகை ஏற்பாடுகள் செய்வதாகச் சொல்வது வெறும் கேலிக்கூத்து அன்றி வேறில்லை.
அறமற்ற ஏமாற்றுவேலை
நாம் ஏற்கனவே இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ள எழும்பூர் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலுக்குச் சொந்தமாக உள்ள புரசைவாக்கம் கிராமம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நகர சர்வே எண்:28க்கு உட்பட்ட 7 கிரவுண்டு (1,575 ச.மீ) நிலத்தை மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டதாகக் கூறி, அந்த நிலத்தை அந்நிறுவனத்திற்கு விற்பதற்கு ஆட்சேபம் தெரிவிக்க விரும்புபவர்கள் ஏப்ரல் 16-ம் தேதி நடக்கும் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் தெரிவிக்கலாம் என்று மார்ச்சு மாதம் 4ம் தேதி அறநிலையத்துறை அறிவித்தது. அதன்படி, ஆலய வழிபடுவோர் சங்கத்தினர் தங்கள் ஆட்சேபத்தையும் கருத்துக்களையும் எழுத்து வடிவில் ஆணையரிடம் அளித்தனர். அதற்கு அறநிலையத்துறையிடமிருந்து இன்றுவரை எந்த பதிலும் வரவில்லை.
இதனிடையே, இந்த விஷயம் குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகத்திடமிருந்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவரங்கள் கேட்டபோது, குறிப்பிட்ட 7 கிரவுண்ட் நிலம் மே மாதம் 2011ம் வருடமே கையகப்படுத்தப்பட்டதென்றும், அதற்கான கிரையத் தொகையான 41.96 கோடி ரூபாய் கோவில் காசோலையாக கோவில் செயல் அலுவலரிடம் அப்போதே ஒப்படைக்கப்பட்டதென்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் பதிலளித்தது. (தினமலர் – 22 ஜூலை 2014)
HR--CE-Temple-land-sold-to-Metro-Rail
அதாவது 2011-ம் ஆண்டு விற்பனை செய்யப்பட்ட நிலத்திற்கு, விற்பனை செய்ய ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்கச்சொல்லி 2014-ல் அறிவித்து, பொது மக்களை தெரிந்தே ஏமாற்றியுள்ளது அறநிலையத்துறை. இது அறநிலையத்துறை சட்டத்தின் 34வது பிரிவில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளுக்கு விரோதமானது. அதன்படி, இவ்விற்பனை சட்டத்திற்குப் புறம்பானதாகவும் செல்லாததாகவும் ஆகிறது.
கடவுளையும் ஏமாற்றும் “அறம்”
சமீபத்தில் சென்னை புரசைவாக்கம் கங்காதரேஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான சொத்துக்களைப் பற்றிய விவரங்களை, தகவலறியும் உரிமை சட்டத்தின் மூலமாகக் கெட்டபோது, “கங்காதரேஸ்வரர் கோவில் மூலவர்; சட்டப்படி தனிநபர்; எனவே அவருக்குச் சொந்தமான சொத்துக்கள் குறித்து தகவல் அறியும் உரிமைசட்ட்த்தில் பதிலளிக்க இயலாது” என்று அக்கோவிலின் நிர்வாகச் செயலர் பதிலளித்துள்ளார். (தினமலர் – 29 ஆகஸ்டு 2014)
HR--CE-Gangadareswarar-Temple-Report
அதே போலவே சென்னை ஏகாம்பரேஸ்வர்ர் கோவில் செயல் அலுவலரும் பதிலளித்துள்ளார். இருப்பினும் இந்தச் செயல் அலுவலர்களின் நிலைப்பாட்டை அவர்களுடைய மூத்த அதிகாரிகளான துணை ஆணையரோ, ஆணையரோ விளக்கவில்லை; அந்த நிலைப்பாடுதான் தங்களின் நிலைப்பாடா என்பதையும் அவர்கள் தெளிவாக்கவில்லை.
இந்நிலையில், மூலவர் தனிநபர் என்றும் அவர் சொத்துக்களைப் பற்றிய தகவல்களைத் தரமுடியாது என்றும் சொல்கிறவர்கள், அந்தத் தனிநபரின் சொத்துக்களை குத்தகைக்கு மட்டும் எப்படி ஒப்பந்தம் போட முடியும்? அவரிடம் அனுமதி பெற்றுள்ளனரா? இல்லை அந்த மூலவரையும் ஏமாற்றுக்கிறார்களா?
சமீபத்தில் சென்னையில் உள்ள திருவண்ணாமலை கோவிலின் சொத்துக்களை அனுபவித்து வருகிறவர்களிடமிருந்து வாடகைத்தொகையை வசூலிப்பதற்காக நாளிதழில் விளம்பரம் செய்த அறநிலையத்துறை, “வாடகை தராதவர்கள் ‘அக்னி சொரூபமான அண்ணாமலையாரை’ ஏமாற்றி வருகிறார்கள்” என்று சொல்லி, அந்த விளம்பரத்திற்கு “சிவன் சொத்து குல நாசம்” என்று தலைப்பும் கொடுத்திருந்தது.
அந்தச் சொற்றொடரும் தலைப்பும் அறநிலையத்துறைக்கும் பொருந்தும் என்பது பக்தர்களின் கருத்தாக இருக்கிறது.
(தகவல்கள் உதவி: - ஆலய வழிபடுவோர் சங்கம்)

Thursday, 23 October 2014


நண்பகல் 12 மணி. உச்சி வெயில். பூசாரி பூமலைக்குக் கண்கள் சிவந்து உக்கிரம் ஏறிவிட்டிருந்தது. கோயிலுக்கு வெளியே ஒரே களேபரம். சிவனாண்டியைச் சுற்றி குடும்பமே கதறிக்கொண்டிருந்தது.
“இவ்வளவு தூரம் வந்துட்டு மனசு மாறிட்டியே தாத்தா.” இளம் பெண் ஒருவர் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தார். முதிர்ந்த பெண் ஒருத்தி அவர் காலில் விழுந்து கதறிக்கொண்டிருந்தார். எட்டி உதை விட்டார் சிவனாண்டி. உதிர்ந்த சருகுபோல இருந்த அந்தப் பெண், விழுந்த வேகத்தில் மயக்கமானார். “அப்பத்தா” என்று பதறி ஓடியது சின்னப் பெண். “மாமா, நீங்களே இப்படிப் பண்ணலாமா?” இளைஞர் ஒருவர் சமாதானப்படுத்தினார். சிவனாண்டி எதையும் கேட்கும் நிலையில் இல்லை. “ஏமாத்திக் கூட்டிட்டு வந்தா நான் கோயிலுக்குள்ள வந்துடுவனா?” இடுப்பில் சொருகியிருந்த குவார்ட்டர் பாட்டிலை எடுத்து வாயில் கவிழ்த்துக்கொண்டார். லுங்கி அவிழ்ந்து தரையில் விழுந்தது. தீர்ந்துபோன பாட்டிலை வெறிகொண்டு வீச, சில்லுசில்லாகச் சிதறியது.
ஊற்றிக் கொடுக்கும் அம்மா
இவ்வளவு நடந்தும் அக்கம்பக்கம் யாரும் கண்டு கொள்ளவில்லை. பக்கத்து டீக்கடையில் அமைதியாக டீ குடித்துக்கொண்டிருந்தார்கள். “ஒரு பிளாஸ்டிக் டம்ளரும் ஊறுகாய் பாக்கெட்டும் கொடுப்பா”- நடுத்தர வயதுப் பெண்மணி ஒருவர் வாங்கிக்கொண்டு ஒதுக்குப் புறமான மரத்தடிக்குச் சென்றார். அங்கு ஒரு பெரிய குடும்பமே சுற்றுலாவுக்கு வந்த தினுசில் வட்டமாக அமர்ந்துகொண்டிருந்தது. நடுத்தர வயதுப் பெண்மணி, குவார்ட்டர் பாட்டிலைத் திறந்து, டம்ளரில் மதுவையும் தண்ணீரையும் ஊற்றி மதுவைக் குடிக்கக் கொடுத்தார். அந்தப் பையனுக்கு வயது 16 இருக்கும். அம்மாவின் கையில் இருந்த மது பாட்டிலைப் பிடுங்கி அப்படியே வாயில் கவிழ்த்துக்கொண்டான். அடித்தொண்டையை பலமாகச் செருமியவன், எச்சிலை அம்மாவின் முகத்தில் காறித் துப்பினான். கூடவே, ஒரு கேவலமான வார்த்தையையும் உதிர்த்தான். சகஜம் என்பதுபோல அந்தக் குடும்பம் சலன மில்லாமல் பார்த்துக்கொண்டிருந்தது.
ஆட்டோ ஒன்று வந்து நிற்கிறது. சுடிதார் அணிந்து, கல்லூரிப் பெண் போன்ற தோற்றம் கொண்ட பெண்ணுடன் தம்பதி இறங்கினர். கவுரமான தோற்றம். அவசர நடையில் ஒதுக்குப்புறமான இன்னொரு இடத்துக்குச் சென்றார்கள். அப்பா தனது கைப்பையைத் திறந்து ஸ்பிரைட் பாட்டிலை எடுத்து, மகளிடம் கொடுத்தார். மடக் மடக் என்று சரித்துக்கொண்டது அந்த சின்னப் பெண். பார்க்கச் சகிக்காமல் எதிர்ப் பக்கமாகத் திரும்பி முந்தானையால் வாயைப் பொத்திக்கொண்டு அழுதார் அம்மா. லேசான தள்ளாட்டத்துடன் இருந்த அந்தப் பெண்ணைக் கோயிலுக்குள் அழைத்துச் சென்றார்கள்.
தெனந்தெனம் செத்துக்கிட்டிருக்கோம்
அந்தப் பக்கம் சிவனாண்டியின் ஆட்டம் அதிகரித் திருந்தது. காரின் இரண்டு கண்ணாடிகள் உடைந்திருந்தன. கோயிலுக்குள்ளே இருந்த பூசாரி வேகமாக வந்தார். ஓங்கி ஓர் அறைவிட்டார். பெட்டிப் பாம்பாய் அடங்கினார் சிவனாண்டி. அவர் வாயில் எலுமிச்சையைத் திணித்து, மாப்பிள்ளையிடம் ஒரு கயிற்றைக் கொடுத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் சென்றுவிட்டார். மாப்பிள்ளை கயிற்றைக் கையில் கட்டிவிட, அப்படியே சாந்தமாகி என்னைப் பார்த்துச் சிரித்தார் சிவனாண்டி.
“என்ன தம்பி, அசலூரா?”
“ஆமாங்க ஐயா, சென்னை.”
“இங்க எதுக்காக வந்திருக்கீங்க?”
“குடிப் பழக்கத்தைப் பத்தி எழுத வந்திருக்கேன்...”
அந்தக் குடும்பமே கொல்லென்று சிரித்தது. சற்று நேரத்தில் சூழல் இலகுவாகி என்னிடம் பேசத் தொடங்கினார்கள்.
“குடியில எங்க தாத்தாவைவிட நீங்க பெரிய ஆராய்ச்சி யாளரோ?”- கிண்டலாகக் கேட்டது அந்தச் சின்னப் பெண்.
“ஏய் புள்ள பேசாம இரு... வாய்த்துடுக்கு அதிகம்” - பெரியவர்தான் அடக்கினார்.
“இந்தா தம்பி குங்குமம்.”
கொஞ்ச நேரத்துக்கு முன்பு தாண்டவமாடிய சிவனாண்டியா இவர்? “பத்து வருஷத்துக்கு முன்னாடி பழக்கத்துக்காகத் தொட்டது. ஏழு ரிக் வண்டியை வித்துட்டேன். பஞ்சப்பள்ளி டேம்கிட்ட இருந்த 60 ஏக்கர் மல்லிப்பூ தோட்டமும் போச்சு. மூத்த பொண்ணைக் கைநீட்டி அடிச்சிட்டேன்னு தூக்கு மாட்டிக்கிட்டு செத்துட்டா. மாப்பிள்ளைதான் ஏதோ தலையெடுத்து தாங்குறாரு. அவமானமா இருக்கு தம்பி. இத்துனூண்டு இருக்கிற எங்க கிராமத்துக்கு மூணு டாஸ்மாக் கடை தேவையா? முதல்ல இழுத்து மூடச் சொல்லுய்யா அதை... தெனந்தெனம் செத்துக்கிட்டிருக்கோம்” - உணர்ச்சிவசப்பட்டுத் தலையில் அடித்துக்கொண்டு அழுகிறார். அப்படியே அவரைக் கைத் தாங்கலாக அணைத்துக்கொண்டு புறப்படுகிறது குடும்பம்.
தன்னோட மனசாட்சியா…
சங்ககிரி பக்கத்தில் இருக்கிறது பூமுனீஸ்வரர் கோயில். சன்னதியில் பூசாரி முன்பாகக் குடும்பத்துடன் அமர்ந் திருக்கிறார்கள். பூசாரி சொல்வதை அப்படியே திரும்பச் சொல்கிறார்கள்.
“தன்னோட மனசாட்சியா…”
“அம்மா, அப்பா சாட்சியா…”
“மக்கள் சாட்சியா…”
“சந்திரன், சூரியன் சாட்சியா...”
“அனைத்துத் தெய்வங்கள் சாட்சியா…”
“முப்பத்து முக்கோடி தேவர் அறிய...”
“நாப்பத்திரெண்டாயிரம் ரிஷிமார்கள் அறிய...”
“போதைக்குச் சம்பந்தப்பட்ட கள்ளு, கஞ்சா, சாராயம், பீரு, பிராந்தி, விஸ்கி, ரம், ஓட்கா, சீமைச் சாராயம், இருமலு டானிக், இன்ன பிற போதைப் பொருள் எதையும்...”
“ஜய வருடம், புரட்டாசி மாசம், 15-ம் தேதி நல்ல நேரமான ரெண்டு மணி முப்பதோரு நிமிஷத்துல பூமுனியப் பன் முன்னிலையில் போதை எண்ணத்தை மறக்கடிச்சுக் கொடுக்கோணும்.”
எதிரில் இருந்த அந்த இளைஞர் வரிசையாகச் சொல்லி முடித்தபின், தனக்கு முன்னே பற்றவைக்கப்பட்ட கற்பூரத்தில் படார் என்று அடித்துச் சத்தியம் செய்தார். அவர் கையில் கயிற்றைக் கட்டி, வாயில் எலுமிச்சையைச் சொருகி அனுப்பி வைத்தார் பூசாரி.
மாலை 6 மணி வரை கூட்டம் வருகிறது. வயது வித்தியாசம் இல்லாமல், ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் குடிநோயாளிகள் வருகிறார்கள். நாள் முழுக்க அங்கு இருந்ததில் பரிச்சயமாகியிருந்தார் பூசாரி.
“எங்க முப்பாட்டன் காலத்துல இருந்தே இந்தக் கோயிலு இருக்கு. அந்தக் காலத்துல தொழில் விருட்சமாகணும், குழந்தை வரம் வேணும்னுதான் கயிறு கட்டிக்கிட்டுப் போவாங்க. இந்தப் பத்து வருஷத்துலதான் இது குடி நோயாளிகளுக்கான கோயில் ஆயிடுச்சு. தினமும் நூத்துக் கணக்குல வர்றாங்க. நிறையப் பேருக்கு பைத்தியம் முத்தி வர்றாங்கய்யா... பன்னிரண்டு வயசுப் பையனுக்கும் பதினஞ்சு வயசுப் பொண்ணுக்கும் கயிறு கட்டிவிட்டிருக்கேன். குடிநோயாளி ஆகுற வயசாய்யா அது? மொதல்ல கடை எல்லாத்தையும் மூடச் சொல்லுய்யா...”
(தெளிவோம்)
டி.எல். சஞ்சீவிகுமார், தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in

கடுமையான போராட்டங்களைக் கடந்து, திரைக்கு வந்துள்ள நடிகர் விஜய் - இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவான 'கத்தி' பேசுவது 'போராட்டங்கள்' பற்றிதான் என்பதில் தொடங்குகிறது ஆச்சரியங்கள்.
'கிராமத்தில் விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால்தான், நகரத்தில் மக்கள் சோற்றில் கை வைக்க முடியும்' என்ற செய்தியை அழுத்தமாகப் பதிவு செய்ய 'மாஸ்' முயற்சியில் ஈடுபட்டிருப்பதால், இணையத்தில் கலாய்ப்பதற்காக விஜய் படம் பார்ப்பவர்களை முதலில் குத்தியிருக்கிறது இந்தக் கத்தி.
இரட்டை வேடம், ஆள்மாறாட்டம், ஊறுகாய்க் காதல், உறுதுணை நட்பு என்ற ஃபார்முலா மூலம், தான் சொல்ல வரும் கதையை 2 மணி 46 நிமிடங்களுக்கு நீட்டிச் சொல்லியிருப்பது, விஜய் ரசிகர்கள் அல்லாதவர்களை சோதிக்க ஏ.ஆர்.முருகதாஸ் வைத்த கத்தி.
விருதுகளுக்காகவும், சர்வதேசப் பட விழாக்களுக்காகவும் மட்டுமே விவசாயிகளின் அவலத்தையும், பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டல்களையும் பதிவு செய்ய முற்படும் நிலையில், இந்த விவகாரங்களை வணிக நோக்கம் கொண்ட சினிமாவில், மாஸ் நாயகனை வைத்துச் சொல்ல முற்பட்டிருப்பது, கத்தி... உயிர் காக்கும் மருத்துவ அறுவை சிகிச்சைக்கும் உரியதுதான் என்பதை உணர்த்துகிறது.
வழக்கமானா பழி வாங்குதல், ரவுடியிசம் சார்ந்த கதைகளில் 'நடித்து' வந்தவர், மாஸுக்குள் க்ளாஸ் புகுத்தும் முயற்சியில் ஈடுபட்டு, துணிச்சல் மிக்க வசனங்களை உத்வேகத்துடன் உதிர்த்து, தனது 'தம்பி'களையும் தாண்டிய ரசிகர்களைக் கவர்ந்திழுக்க முயற்சித்திருப்பது, தனது கேரியரை கத்தி மூலம் கூர்தீட்டிக் கொண்டுள்ளது சிறப்பு.
விஜய் ரசிகர்கள் திரையரங்குகளில் எங்கெல்லாம் ஆரவாரம் செய்வர் என்பதைக் கணித்து, அதற்கேற்றவாறு பின்னணி இசையை வழங்கியிருக்கும் அனிருத்தின் பங்களிப்பு, கத்திக்கு கெத்து சேர்க்கிறது. ஆனால், 'செல்ஃபி புள்ள' உள்ளிட்ட பாடல்களைக் காட்சிப்படுத்தி இருக்கும் விதம், விஜய் ரசிகர்களை ஏமாற்றும் 'மொக்கைக் கத்தி'த்தன்மையில் முன்னிலை வகிக்கிறது.
முதல் 40 நிமிடக் காட்சிகளால் ரசிகர்களுக்கு இது மொக்கைக் கத்திதான் என்று சலிப்பை ஏற்படுத்திவிட்டு, இடைவேளைக்கு முன்பு வரும் சண்டைக்காட்சியின் மூலம் ஏ.ஆர்.முருகதாஸ் தனது 'டச்' உடன் கெத்தான 'கத்தி'தான் என்று நிரூபித்தது கவனிக்கத்தக்கது.
கதைக்கு ஒட்டாத சமந்தாவின் கதாப்பாத்திரம், ஊறுகாயாகத் தொட்டுக்கொள்ளப்படும் காதல், சிரிக்கவைக்க ஸ்கோப் இல்லாத நண்பர் வேடத்தில் சதிஷ், தோற்றத்திலும் ஸ்டைலிலும் மட்டுமே 'பந்தா' காட்டும் கார்ப்பரேட் வில்லன் நீல் நிதின் முகேஷ்... இப்படி கத்தியில் நீண்டிருக்கின்றன 'அட்டகத்தி'களின் பட்டியல்.
கார்ப்பரேட் நிறுவனங்கங்களின் முதலாளித்துவ அணுகுமுறைகளைச் சொல்ல முற்பட்டதில் வல்லமையுடன் செயல்பட்டுள்ள கத்தி, அதைக் காட்சிப்படுத்துவதில் பல இடங்களில் குழந்தைத்தனமாக செயல்பட்டு, உறையில் உறங்கும் கத்தியாகிவிட்டது.
பொதுவுடமையின் மகத்துவத்தையும், விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் "நம் பசி தீர்ந்த பிறகு, நாம் சாப்பிடுகிற ஒவ்வொரு இட்லியும் இன்னொருவருடையது. இதுதான் கம்யூனிசம்" உள்ளிட்ட வசனங்கள் மூலம் சொல்ல முற்பட்டுள்ள கத்தியில், விஜய் ரசிகர்கள் கைதட்டலை அள்ளுவதற்காக வசனங்கள் வைக்கப்பட்டதாகவே தோன்றுகிறது. கைதட்டலை மீறி, ரசிகர்களைச் சென்றடையும் செய்தி, சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு வெறும் 'வசனம்' மட்டுமே போதாது என்று புத்தியும் சொல்லித் தருகிறது கத்தி.
கெட்டப்களில் வித்தியாசம் காட்டாமலும், தனது ரசிகர்களைத் திருப்திப்படுத்தினால் மட்டுமே போதும் என்ற எண்ணம் இல்லாமலும் விஜய் கத்தியில் காட்டியிருக்கும் சிரத்தை, மாஸ் ஹீரோக்கள் எனக் கருதப்படுவோருக்கு புதிய பாதையைக் காட்டுவதற்கு கோடு கிழிக்கப் பயன்பட்டுள்ளது.
மீடியாக்களின் நிஜ முகத்தைச் சித்தரித்த விதம், கார்ப்பரேட் நிறுவனங்களின் உண்மைத் தன்மையை தோலுரிக்கும் காட்சிகளில் உள்ள மேம்போக்கான தன்மைகள், விவரம் அறியாதவர்களின் காதுகளைக் குத்துவதற்குப் பயன்பட்ட கத்தி என்றே சொல்லலாம். ஆனால், பன்னாட்டு நிறுவனங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளின் அவல நிலையையும், விவசாயிகளின் போராட்டங்களை அலட்சியப்படுத்தும் நகரவாசிகளை விமர்சனப் பார்வையோடு சுட்டிக்காட்டிய விதத்திலும், மாஸ் படத்தில் நல்ல மெசேஜ் சொல்ல முனைப்பு காட்டிய விதத்திலும் ஏ.ஆர்.முருகதாஸ் கொடுத்திருப்பது, பார்க்க வேண்டிய பயனுள்ள 'கூர்தீட்டிய கத்தி'யே! 

-t
       அதர்மம் அழிந்து தர்மம் வெற்றி பெற்றதை கொண்டாடும் தீப ஒளித் திருநாள் வ.களத்தூரில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தாலும் தீபாவளியன்று வானம் தெளிவாக காணப்பட்டதால் மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாட முடிந்தது.

பட உதவி-சத்தியராஜ், விக்னேஷ்.






நேற்று கனடா நாட்டு பாராளுமன்றம் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. இதில் ஈடுபட்டவர்களில் கொலையுண்டவர் அந்நாட்டைச் சேர்ந்தவர் என்பதும், அவர் சமீபத்தில் மதமாறியவர் என்பது தெரியவந்துள்ளது.

மதமாற்றம் என்பது ஒரு வழிபாட்டிலிருந்து வேறொரு வழிபாட்டை ஏற்றுக்கொள்வது என்பதில்லை. தனது தேசியத்தின் அடையாளத்தை நீக்கிக்கொள்வதும், தான் பிறந்து, வளர்ந்த தேசத்தை அழித்தொழிக்கும் அளவிற்கு மூளை சலவை செய்யப்படுகிறது என்பதையும் இந்தத் தாக்குதலில் உலகம் உணர்ந்திருக்கும். இதனைத் தான் செமிட்டிக் மதங்களான கிறிஸ்தவமும், இஸ்லாமும் செய்து வருகின்றன.
இதற்கு பல சம்பவங்கள் உலகம் பார்த்துள்ளது, அனுபவித்துள்ளது.

மனித நேயம், மனித உரிமை பேசுபவர்கள், நடுநிலையாளர்கள் இதுகுறித்து உலக அளவில் விவாதம் நடத்தி தீர்வு காண வேண்டும். மற்ற மதங்களை வெறுக்கும், அழித்தொழித்து தனது மதமே உலகில் இருக்க வேண்டும் எனும் கருத்தை போதிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மதவாத சக்திகளுக்கு வரும் நிதியை தடுக்க வேண்டும். மதவாத சக்திகளின் செயல்பாட்டை கண்காணிக்க வேண்டும். மனித இனத்திற்கு அச்சுறுத்தலான மதமாற்றத்தைத் தடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

உயிர்களை நேசிக்கும், பரந்த மனப்பான்மை கொண்டதுமான இந்து மதம், கடந்த பத்தாயிரம் ஆண்டு உலக சரித்திரத்தில் எவரையும் கட்டாயப்படுத்தி மதமாற்றியதில்லை, எந்த ஒரு நாட்டின் மீதும் ஆக்கிரமிப்பு செய்ததில்லை.

உலகிலேயே வேற்று மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களைக் கட்டிக்கொடுத்தது இந்துக்கள், உலகில் வெறுத்து ஒதுக்கப்பட்ட பார்சிகளையும், யூதர்களையும் அரவணைத்தது இந்துக்கள் என்பது சரித்திர உண்மை. ஆனால், இந்துக்களை அழித்தொழிக்க, இந்து சமயத்தை, நூல்களை அழிக்க முற்பட்டவர்கள்தான் முகலாயர்களும், மேற்கத்திய கிறிஸ்தவ நாடுகளின் ஆக்கிரமிப்பாளர்களும் என்பதை நினைவு படுத்துகிறோம்.

உயிர்களை நேசிக்க கற்றுக்கொடுத்தால் இந்த மதவாத சக்திகள் இருந்த இடம் தெரியாமல் அழிந்துபோகும். இதுவே உலகின் அமைதிக்கு நிரந்தரமான வழி என்பதை எடுத்துச் சொல்லவேண்டும் என்று நடுநிலையாளர்களை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)

Tuesday, 21 October 2014


குஜராத் மாநிலத்தின் சூரத் நகரத்தில் உள்ள வைர நகை வியாபாரி ஒருவர் தன்னிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கு கார், வீடு மற்றும் நகை ஆகியவற்றை தீபாவளி போனஸாக அள்ளிக் கொடுத்திருக்கிறார்.
சூரத் நகரத்தில் வசிப்பவர் சவ்ஜி தோலாக்கியா. குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் 70களில் வேலைதேடி சூரத்துக்கு வந்தார். அங்கு தன் உறவினர் ஒருவரிடம் சென்று வியா பாரம் தொடங்குவதற்குக் கடன் பெற்றார். அதை வைத்துக்கொண்டு அவர் சிறிய அளவில் வைர வியாபாரத்தைத் தொடங்கினார். 1992ம் ஆண்டு ஹரிகிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் எனும் வைர வியாபார நிறுவனத்தைத் தொடங் கினார்.
கடந்த 20 ஆண்டுகளில் ஓராண்டுக்கு ரூ.6,000 கோடி லாபம் ஈட்டும் நிறுவனமாக அதை மேம்படுத்தினார். தற்போது சூரத், மும்பை மற்றும் வெளிநாடுகளில் இந்நிறுவனத்தின் கிளைகள் உள்ளன. இந்நிறுவனத்தில் 9,000க்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
இன்னும் சில தினங்களில் தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட இருப்பதால், தன்னிடம் பணியாற்றும் சுமார் 1,200 பணியாளர்களுக்கு தீபாவளி போனஸாக கார், வீடு மற்றும் நகை ஆகியவற்றை வழங்கியுள்ளார்.
ஊழியர்கள் இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து கொள்ளலாம். சுமார் 500 ஊழியர் களுக்கு புதிய பியட் புன்டோ ரக கார்களையும், 207 பேருக்கு புதிய வீடுகளையும் மற்றும் 570 பேருக்கு நகைகளையும் சவ்ஜி வழங்கியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர் களிடம் சவ்ஜி தோலாக்கியா கூறும்போது, "என்னுடைய கனவுகள் எல்லாம் என்னிடம் பணியாற்றும் ஊழியர்களால்தான் நிறைவேறியுள்ளன. இங்கு பணியாற்றும் நகைக் கலைஞர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த இலக்கை அவர்கள் அடைந்து விட்டார்கள்.
இது ஹரிகிருஷ்ணா நிறுவனத் துக்கு மிகச் சிறப்பான நாள். அதனால் அனைவருக்கும் தீபாவளி பரிசுகள் வழங்கப்பட் டுள்ளன" என்றார்.
இந்த தீபாவளி பரிசுகளுக்காக ஓர் ஊழியருக்கு ரூ.3.60 லட்சம் செலவாகியிருப்பதாகவும், உலகிலேயே ஊழியர்களின் பணித் திறனைப் பாராட்டி இவ்வளவு பரிசுகள் வழங்கியிருக்கும் முதல் நிறுவனம் என்ற பெயரையும் தன்னுடைய நிறுவனம் பெற்றிருப் பதாக அவர் கூறினார்.
இங்கு பணியாற்றும் ஒரு நகைக் கலைஞரின் சராசரி மாதச் சம்பளம் ரூ. 1 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

-தி இந்து.

Monday, 20 October 2014


வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை தொடர்ந்து நீடிப்பதால், தமிழகத்தில் மேலும் சில நாள்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்து. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் கடந்த இரண்டு நாள்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வங்கக் கடலில் இலங்கை- தமிழக கடற்கரையில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிக்கிறது.
இதன் காரணமாக நமது வ.களத்தூரிலும் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முழுவதும் வாணம் மேகமூட்டத்துடன் தூறலாக இருந்தது. இரவு முதல் சிறிது கூடுதலாக மழைபெய்து வருகிறது. 


Saturday, 18 October 2014


பெரம்பலூரில்
ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் நடக்க உள்ளதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோ சனை கூட்டம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில் கலெக் டர் தரேஷ்அஹமது தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது: வரும் நவ. 19ம் தேதி முதல் 26ம் தேதி வரை இந்திய ராணுவத்துக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்யும் முகாம் பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறுவது இம்மாவட்ட இளைஞர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாகும். இந்த ஆள்சேர்ப்பு முகாமில் கலந்துகொள்ள உள்ளவர்களை தேர்வு செய்ய அனைத்து பணிகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்படும்.
நகராட்சி மற்றும் உள்ளா ட்சி நிர்வாகங்களின் மூலமாக வருகை தரும் அனைத்து இளைஞர்களுக்கும் சுத்தமான குடிநீர், கழிப்பிட வசதி, விளை யாட்டு மைதானம் மற்றும் சுற்றியுள்ள இடங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட உள் ளது. மாவட்ட விளையாட்டு அரங்கத்தை சுற்றிலும் உள்ள இடங்கள் சுத்தம் செய்யப்பட்டு ஆள்சேர்ப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளில் போலீஸ் துறை யி னர், ஊர்க்காவல் படை யினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
முகாமில் சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதி, ஓட்டப்பந்தயம், மருத்துவ தகுதிகள் குறித்த தேர்வுகள் நடக்க உள்ளன. அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் காரைக்கால் உள்ளி ட்ட 15 மாவட்டங்களை சேர்ந்த தகுதியான ஆட்கள் ராணுவத்திற்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பல்வேறு மாவட்ட இளைஞர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணிகளுக்காக அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த வருவாய்த்துறை மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
திறமையும், ஆர்வமுள்ள இளைஞர்கள் முகாமில் பங்கேற்று, தேர்வு பெற்று இந்திய ராணுவத்தை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித் தார். இதில் டிஆர்ஓ., ராஜன் துரை, சப்.கலெக்டர் மதுசூதன்ரெட்டி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் துரைமுனுசாமி, ராணுவ அதிகாரி அனுதீப் சிங் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 -தினகரன்.

விசுவக்குடி நீர்த்தேக்கத் திட்டத்துக்கான மறு மதிப்பீட்டின் படி கூடுதலாக ரூ. 14.7 கோடி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கல்லாறு ஒடையின் குறுக்கே ரூ. 19 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் விசுவக்குடி நீர்த்தேக்கத் திட்ட பணிகளை வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அவர் மேலும் கூறியது:

கல்லாறு ஒடையின் குறுக்கே பொதுப்பணித் துறை நீர்வள ஆதார துறையின் மூலமாக செம்மலை - பச்சைமலையின் இடையே விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு பயன்படுத்தும் வகையில் ரூ. 19 கோடியில் 665 மீட்டர் நீளமுள்ள கரையுடன் நீர்த்தேக்கம் கட்டப்பட்டு வருகிறது.

இதன்மூலம் 30.67 மில்லியன் கன அடி நீர் 10 மீட்டர் ஆழத்திற்கு சேமிக்க இயலும். இங்கு நீர்ப்போக்கி அமைக்க 11 மீட்டர் உயரத்துக்கு கான்கீரிட்டினால் ஆன கட்டுமான அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர் போக்கியின் இருபுறமும் மலையுடன் இணைக்கும் வகையில் 12 மீட்டர் உயரத்துக்கு கரைகள் அமைக்கப்பட்டு, மண் அரிப்பு ஏற்படாத வகையில் கருங்கல் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தப் பணிக்காக கூடுதலாக மறு மதிப்பீட்டின்படி ரூ. 14.7 கோடி நிதி கேட்டு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் நேரடியாக 859 ஏக்கர் புன்செய் நிலம் பாசன வசதி பெறும். மதகு மூலமாக வெங்கலம் ஏரிக்கு கீழ் உள்ள சுமார் 421.41 ஏக்கர் ஆயக்கட்டிற்கு உறுதி செய்யப்பட்ட நீரும், நிலத்தடி நீர் செறிவூட்டப்படுவதால் கிணற்றுப் பாசனம் மூலம் கூடுதலாக 169 ஏக்கர் புன்செய் நிலங்களும் பாசன வசதி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதோடு, மறைமுகமாக 2 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

மேலும், அன்னமங்கலம் வழியாக அரசலூர் மற்றும் விசுவக்குடி வரை 1.20 கிலோ மீட்டர் நீளத்துக்கு சாலை அமைக்கப்பட உள்ளது. இங்கு தேக்கப்பட உள்ள 30.67 மில்லியன் கன அடி நீருடன், உள் பகுதி ஆழப்படுத்துவதன் மூலம் கூடுதலாக 10 மில்லியன் கன அடி நீரை சேமிக்கும் வகையில் மாநில திட்டக் குழுவுக்கு மாவட்ட நிர்வாகத்தால் பரிந்துரை செய்யப்பட்டுள்

ளது. பெரம்பலூர் மாவட்டத்தின் பிரதான சுற்றுலா தலமாக உருவாக்கும் வகையில், அணைக்கட்டின் கீழ் பகுதியில் பூங்காவும், கரைப்பகுதியில் ஆய்வு மாளிகை அமைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் ஆட்சியர் தரேஸ் அஹமது.

ஆய்வின்போது, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் வை. வேல்முருகன், உதவி பொறியாளர் கார்த்திக், பொதுப்பணித்துறை தரக் கட்டுப்பாட்டுக் கோட்ட செயற்பொறியாளர் சிசில், உதவி செயற்பொறியாளர் கீதா, உதவி பொறியாளர் லதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


-தினகரன்.
இராமநாதபுரம் SP பட்டிணத்தில் 14.10.2014ம் தேதியன்று விசாரணைக்காக கைது செய்யப்பட்ட செய்யது முகமது என்ற ரவுடி காவல்துறை விசாரணையின் போது காவல்துறை உதவி ஆய்வாளர் திரு. காளிதாஸை கத்தியால் குத்தி கொல்ல முயன்றார். தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள காவல்துறை உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்ட போது செய்யது முகமது இறந்து விட்டார்.
இதைத் தொடர்ந்து SP பட்டிணத்தில் இஸ்லாமியர்கள் பேருந்துகளில் இருந்த முஸ்லீம்களை மட்டும் பத்திரமாக இறங்கி போகச்செய்து விட்டு இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்திரவு இருக்கும்பொழுது முன் அனுமதி பெறாமல் வேன்களில் கொடி கட்டி ஊர்வலமாக சென்று அரசு மருத்துவமனையின் முன் ஆர்பாட்டமும் அராஜகமும் செய்துள்ளனர். இவை அனைத்தையும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காவல்துறை வேடிக்கைப் பார்த்துக்கொண்டுள்ளது.
muslims protest ramnad

muslims protest ramnad1

muslims protest ramnad3
காவல்நிலையத்திலேயே ரவுடித்தனம் செய்து உதவி ஆய்வாளரையே குத்தி கொல்ல முயன்ற ரவுடியை தற்காப்பிற்காக சுட்ட காவல்துறை ஆய்வாளர் திரு. காளிதாஸ் அவர்கள் மீது சட்டப்படி விசாரணை நடந்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், நீதி விசாரணை முழுவதுமாக முடியாத நிலையில் காவல்நிலையத்தில் ரவுடித்தனம் செய்த செய்யது முகமதுவிற்கு அரசு ரூ.5,00,000/- ம் கொடுக்கப்பட்டதை கண்டித்தும், அந்த பணத்தை திரும்ப பெற கோரியும், இச் சம்பவத்தை காரணம் காட்டி அராஜகம் செய்து வரும் இஸ்லாமிய அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் இராமநாதபுரம் இந்து முன்னணியின் சார்பில் திரு. கே. இராமமூர்த்தி, மாவட்ட செயலாளர் அவர்கள் இன்று (17.10.2014) மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர் திரு. மயில்வாகனனிடம் மனு கொடுத்துள்ளார்.
ramanathapuram sppatinam issue1

ramanathapuram sppatinam issue
இந்த கோரிக்கைகளை ஏற்று இஸ்லாமிய அராஜகத்தை ஒடுக்கி சட்டத்தின் ஆட்சியை இராமநாதபுரத்தில் தமிழக அரசு நிலை நிறுத்த வேண்டும். வழக்கம் போல் இஸ்லாமியர்களின் வன்முறையின் முன் மண்டியிட்டு முஸ்லீம்களுக்கு சலுகைகளை வழங்கினால் அது பயங்கரவாதத்தை ஊக்கப்படுத்தும். இராமநாதபுரம் மேலும் சீரழிந்து காஷ்மீராக மாறிவிடும்.

Wednesday, 15 October 2014

நாயன்மார் ஆழ்வாரின் மண் நயவஞ்சகத்தால் ஈவேராவின் மண் அண்ணாவின் மண் என்று மாறும் சூழ்நிலையில் விடி வெள்ளியாக முளைத்து தமிழ் மண்ணின் மான்பை காத்து நாயன்மார்களையும் ஆழ்வார்களையுமே தமிழகம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கர்ஜித்த வீரத்துறவி ஐயா இராமகோபாலன் அவர்களின் பிறந்த நாள் இன்று(15.10.2014). பாரத நாட்டின் பண்பாட்டிற்கும் பாரம்பரியத்திற்கும் அச்சுறுத்தலாக இருக்கும் கிறிஸ்தவ இஸ்லாமிய கம்யூனியச அரக்கர்களை இந்து ஒற்றுமை என்ற கோதண்டத்தினால் தகர்க்க பாஞ்சஜன்யத்தை ஊதிய நம் கலியுக ராமகோபலானின் 88வது பிறந்த நாள் விழா இன்று 15.10.2014 அசோக்நகர் ஆஞ்சநேயர் கோவிலில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
gopaliji bdayfunction

அவரது பிறந்தநாளையொட்டி கோவிலில் காலை முதல் கணபதி ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், மிருத்ஞ்ஜய ஹோமம் மற்றும் சுதர்சன ஹோமம் ஆகியவை வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்றது. விஜய் டிவி புகழ் திருமதி. சிந்துஜா சந்திரமெளலி பக்தி பாடல்கள் மற்றும் தேசப்பக்தி பாடல்களை பாடினார்.
sinduja gopalji

இந் நிகழ்ச்சியில் குமுதம் ஜோதிடம் ஆசிரியர். தேச பக்தர் திரு. A.M. இராஜகோபால் அவர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தார். இந்து முன்னணி பொறுப்பாளர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதில், வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டு வீரத்துறவி ஐயா இராமகோபாலன் அவர்களின் பொற்பாதங்கள் பணிந்து ஆசிப்பெற்றனர்.
vsrc members thatha



இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் வீரத்துறவி ஐயா இராமகோபாலன் அவர்களை போலவே தாங்களும் இந்து சமுதாயப் பணியில் தொடர்ச்சியாக மனந்தளராமல் ஈடுபட அவரிடம் ஆசி வேண்டினர். 
 
நன்றி- VSRC

வ.களத்தூரில் நாளை சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது. நேற்று தமிழக தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட புதிய வரைவுவாக்காளர் பட்டியல் தொடர்பான கூட்டத்தில் நம் பெயர் வாக்காளர்பட்டியலில் உள்ளதா எனவும் அறியலாம்.

வ.களத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் நாளை  17- 10-2014 வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது.



1.வ.களத்தூர் (வ.கி) மற்றும் வ.களத்தூர் (ஊ) 
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (பெண்கள்) வண்ணாரம்பூண்டி வடக்குபகுதி வடக்கு மெத்தை கட்டிடம் வ.களத்தூர்.

1-நடுத்தெரு வார்டு 1
2-தெற்கு தெரு வார்டு 1
99-அயல்நாடு வாழ் வாக்காளர்கள்

http://elections.tn.gov.in/PDF/dt17/ac147/ac147096.pdf 

2.வ.களத்தூர் (வ.கி) மற்றும் வ.களத்தூர் (ஊ)
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (பெண்கள்) வண்ணாரம்பூண்டி வடக்குபகுதி வடக்கு மெத்தை கட்டிடம் வ.களத்தூர்

1-வி.களத்தூர் வடக்கு தெரு வார்டு 1
2-மில்லத் நகர் வார்டு 4
3-போஸ்டாபிஸ் தெரு வார்டு 2
4-அக்கரகாரத்தெரு வார்டு 3
99-அயல்நாடு வாழ் வாக்காளர்கள்

http://elections.tn.gov.in/PDF/dt17/ac147/ac147097.pdf
 

3.வ.களத்தூர் (வ.கி) மற்றும் வ.களத்தூர் (ஊ)
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வண்ணாரபூண்டி வடக்கு பார்த்த மேற்கு ஓட்டுக்கட்டிடம் வண்ணாரம்பூண்டி வி.களத்தூர்

1-அக்கரகாரத்தெரு வார்டு 3 
2-மேற்குத் தெரு .99-அயல்நாடு வாழ் வாக்காளர்கள்

 http://elections.tn.gov.in/PDF/dt17/ac147/ac147098.pdf

4.வ.களத்தூர் (வ.கி) மற்றும் வ.களத்தூர் (ஊ)


ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பெண்கள் தென்வடல் மெத்தைக்கட்டிடம் மேற்கு பார்த்தது வண்ணாரம்பூண்டி வி.களத்தூர்

1-மேலத் தெரு வார்டு 4
2-தெற்கு தெரு வார்டு 4
3-மேட்டுச் சேரி வார்டு 5
4-போஸ்டாபிஸ் தெரு வார்டு 2
99-அயல்நாடு வாழ் வாக்காளர்கள்

 http://elections.tn.gov.in/PDF/dt17/ac147/ac147099.pdf

5.வ.களத்தூர் (வ.கி) மற்றும் வ.களத்தூர் (ஊ)
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (பெண்கள்) வண்ணாரபூண்டி கிழக்கு ஆஸ்பெஸ்டாஸ் கட்டிடம் வடக்குபகுதி தெற்கு பார்த்தது வ.களத்தூர்

1-காமராஜர் நகர் வார்டு 4
2-மில்லத்நகர்வார்டு 4
3-தெற்கு தெரு வார்டு 4
99-அயல்நாடு வாழ் வாக்காளர்கள்

http://elections.tn.gov.in/PDF/dt17/ac147/ac147100.pdf   


6.  வ.களத்தூர் (வ.கி) மற்றும் வ.களத்தூர் (ஊ)
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி பகுதி 5 வடக்கு பார்த்த கிழக்கு ஆஸ்பெஸ்டாஸ் கட்டிடம் தெற்குபகுதி வண்ணாரம்பூண்டி வ.களத்தூர்

1-வ.களத்தூர் பள்ளிவாசல் வீதி வார்டு 1,2
99-அயல்நாடு வாழ் வாக்காளர்கள்

 http://elections.tn.gov.in/PDF/dt17/ac147/ac147101.pdf

7.வ.களத்தூர் (வ.கி) மற்றும் வ.களத்தூர் (ஊ)
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பெண்கள் வடக்கு பார்த்த கற்போம் கற்பிப்போம் மெத்தை கட்டிடம் வண்ணாரம்பூண்டி வ.களத்தூர்

1-வண்ணாரம்பூண்டி ரேசன்தெரு வார்டு 4
2-மில்லத் நகர் வார்டு 4
3-வண்ணாரம்பூண்டி காலனிதெரு வார்டு 5
99-அயல்நாடு வாழ் வாக்காளர்கள்

 http://elections.tn.gov.in/PDF/dt17/ac147/ac147102.pdf

8.வ.களத்தூர் (வ.கி) மற்றும் வ.களத்தூர் (ஊ)
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வண்ணாரபூண்டி கிழக்குபார்த்த ஒட்டு கட்டிடம் வ.களத்தூர்


1-ராயப்ப நகர் வார்டு 6
2-வள்ளியூர் வார்டு 6
3-இந்திரா நகர் வார்டு 6
99-அயல்நாடு வாழ் வாக்காளர்கள்

http://elections.tn.gov.in/PDF/dt17/ac147/ac147103.pdf



நன்றி-தமிழ்நாடு தேர்தல் ஆணையம்.