ஆசிய விளையாட்டு ஆக்கி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி 1998-ம் ஆண்டுக்கு பின்னர் தங்கம் வென்றுள்ள இந்தியா ஆடவர் அணி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
ஆசிய விளையாட்டில் ஆண்களுக்கான ஆக்கி போட்டியில் இன்று ‘கிளைமாக்ஸ்’ அரங்கேறியது. தங்கப் பதக்கத்திற்கான இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், நடப்பு சாம்பியன் பாகிஸ்தானும் பலப்பரீட்சையில் இறங்கின. இரு பரமஎதிரிகள் மோதுவதால் ரசிகர்கள் மத்தியில் இந்த ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆட்டம் விறுவிறுப்பாக நடந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்திய அணி நிறைவேற்றியது. போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை இந்தியா வென்றது. ஏற்கனவே லீக்கில் 1–2 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்த சர்தார்சிங் தலைமையிலான இந்திய அணி அதற்கு வட்டியும் முதலுமா பதிலடி கொடுத்துள்ளது.
ஆசிய விளையாட்டில் 1958–ம் ஆண்டு அறிமுகம் ஆன ஆக்கியில் இந்திய அணி 1966 மற்றும் 1998–ம் ஆண்டுகளில் தங்கம் வென்றுள்ளது. 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தங்கம் வெல்வதற்கு கிடைத்த அருமையான சந்தர்ப்பத்தை இந்தியா பயன்படுத்திக் கொண்டது. 8 முறை சாம்பியனான பாகிஸ்தான் 9–வது பட்டத்திற்கு குறி வைத்தது. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. இதில் வாகை சூடிய இந்திய அணி நேரடியாக 2016–ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது.
0 comments:
Post a Comment