இவர்களை எப்படி கையாலளாம் என்று அமெரிக்கா யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில், ஈராக் மற்றும் சிரியா பாலைவனங்களில் பொதுமக்களின் தலை அறுபட்டுக்கொண்டிருக்கிறது.
எதிரிகளை நிர்வாணமாக்கி கொத்து கொத்தாக கொல்வது; பிடிபட்ட கைதிகளை கதறக் கதற கழுத்தை அறுத்து கொல்வது; பெண்களை சிறைபிடித்து கற்பழிப்பது, அடிமைகளாக்குவது போன்ற இவர்கள் செய்யும் நல்ல காரியங்களால் உலகமே இவர்களை வாய்பிளந்து பார்க்கிறது. இவர்கள், தாங்கள் செய்யும் கொடூர செயல்களுக்கு ஆண், பெண் என்ற பேதம் பார்ப்பதில்லை, வயது வித்தியாசம் பார்ப்பதில்லை. வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள், தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், பத்திரிக்கையாளர்கள் என பலரது தலைகளை அறுத்து, அதை படம்பிடித்து இணையத்தில் வெளியிடுவதின் மூலம் உலக மக்களிடையே இவர்கள் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளார்கள். அமெரிக்காவை அச்சத்தில் ஆழ்த்திய அல் கொய்தாவே, இவர்களை மிகவும் மோசமானவர்கள், அதீத வன்முறையில் ஈடுபடுகிறார்கள் எனக் கூறி இவர்களிடமிருந்து விலகி இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். ஐ.நா சபையும், அமெனஸ்டி சர்வதேச அமைப்பும், இவர்கள் அதிக ப்படியான மனித உரிமை மீறல்கள் புரிந்திருப்பதாக/புரிந்துகொண்டு இருப்பதாக கண்டனம் தெரிவித்திருக்கின்றன . ஆனால் அகில உலகமும் இவர்களை ஒன்றுமே செய்யாமல்/செய்யமுடியாமல் வெறும் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறது.
யார் இவர்கள்?
2003 ஆம் ஆண்டில் ஈராக் நாட்டின் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அதில் சதாம் ஹுசைன் தோற்றுப்போனார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்குப் பிறகு தூக்கிலிடப்பட்டார். சதாமின் வீழ்ச்சிக்குப் பிறகு, ஈராக் நாட்டில் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராக அபு முசாப் அல் சர்காவி (Abu Musab Al Zarqawi) என்பவன் தாக்குதல்கள் பல நடத்தினான். சர்காவி தன் போராட்டித்திற்காக டான்ஸிம் கொய்தத் அல் ஜிஹாத் பிலாத் அல் ரபிதாயின் (Tanzim Qaidat al-Jihad fi Bilad al-Rafidayn) என்ற வாயில் நுழையாத பெயர் கொண்ட ஒரு போராட்டக் குழுவை உருவாக்கினான். 2006 ஆம் ஆண்டு, சர்காவி அமெரிக்க விமானப்படையின் தாக்குதலில் மாண்டு போனான்.
பின்னார் சர்காவி தோற்றுவித்த போராட்டக் குழு, முஜாஹிதின் ஷுரா சபை (Mujaheedin Surah Council) என்ற தீவிரவாதக் குழுவுடன் இணைந்து ஐ.எஸ்.ஐ (ISI – Islamic State of Iran) என்று பெயர் மாற்றம் பெற்றது. 2011 ஆம் ஆண்டு, ஈராக் நாட்டை விட்டு அமெரிக்க இராணுவம் தன் படைகளை திரும்பப் பெற்ற பிறகு ஐ.எஸ்.ஐ பலம் பெற்றது. ஈராக் நாட்டில் உள்ள பிரபல அபு காரிப் சிறைச்சாலையை தாக்கி அங்கிருந்து 500க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை ஐ.எஸ்.ஐ கூட்டிச் சென்றது.
ஐ.எஸ்.ஐ ஈராக் நாட்டின் வட மேற்குப் பகுதிகளை தன் வசமாக்கிக் கொண்டது. இதற் கிடையில், 2010 - 2011 ஆம் ஆண்டுகளில் பல மத்திய கிழக்கு ஆசிய நாடுகளிலுள்ள மக்கள் அவர்களது அதிபர்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி ஆட்சியை கவிழ்த்தனர். இந்த கிளர்ச்சிக்கு ’அரேபிய எழுச்சி’ என்று பெயர். அரேபிய எழுச்சியில் பாதிக்கப்பட்ட நாடுகளில் சிரியாவும் ஒன்று.சிரியா நாட்டில் பல குழுக்கள் அந்நாட்டின் அதிபருக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு குழுவும் தங்கள் கைவசம் சில பகுதிகளைப் பிடித்து வைத்திருக்கிறார்கள். சிரியா, ஈராக் நாட்டின் அருகாமையில் அதன் மேற்கு பகுதியில் உள்ளது. 2013 ஆம் ஆண்டு, ஐ.எஸ்.ஐ சிரியாவின் கிழக்குப் பகுதிகளில் நுழைந்து அவற்றை தன் வசமாக்கிக் கொண்டது.
ஐ.எஸ்.ஐ தன் ஆக்கிரமிப்புக்குள்ளான ஈராக் நாட்டின் வட பகுதிகளையும், சிரியா நாட்டின் கிழக்குப் பகுதிகளையும் சேர்த்து ஒரு தேசத்தை உருவாக்கியது. அந்த தேசத்திற்கு சூட்டப்பட்ட பெயர்தான் ISIS – (Islamic State of Iraq and Syria). ISIS-ஐ உலக நாடுகள் எதுவும் அங்கீகரிக்கவில்லை. ஐகுஐகு நாட்டின் தீவிரவாதிகள், மன்னிக்கவும் ஆட்சியாளர்கள் அந்த நாட்டின் பெயரிலேயே அடையாளம் காணப்படுகிறார்கள், அழைக்கப்படுகிறார்கள்.
ISIS இயக்கத்தவர்கள் வஹாபிஸத்தை (இஸ்லாமிய பழமைவாதம்) கடைபிடிப்பவர்கள். இஸ்லாம் மார்க்கத்தில் எந்த புதுமையையும் உட்புகுத்தக்கூடாது என்ற நம்பிக்கை உடையவர்கள். முஸ்லீம் மதத்தின் சுன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள். இஸ்லாமில் இருக்கும் ஷியா மற்றும் இன்ன பிற பிரிவுகளை இவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. சுன்னியைத் தவிர ஏனையப்பிரிவுகள் இஸ்லாமிற்கு எதிரானது என்று கருதுபவர்கள். இஸ்லாம் மதத்தை அதன் பழைய உன்னத நிலைக்கு கொண்டு செல்லவேண்டும் என்பது இவர்களது நோக்கம். உலகில் உள்ள அனைத்து இஸ்லாமிய நாடுகளையும் ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்யவேண்டும் என்பது இவர்களது கொள்கை.
ISIS -ன் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி. இவர் தன்னை காலிஃப் என்று சமீபத்தில் பிரகடனப்படுத்தியுள்ளார். அதாவது இஸ்லாமிய நாடுகளின் அரசியல் தலைவர் மற்றும் மத குருமார். முதல் உலக யுத்தத்திற்கு முன்பு, ஒட்டமான் துருக்கி சாம்ராஜ்ஜியத்தின் அரசர்தான் காலிஃபாக இருந்தார். முதல் உலக யுத்ததில் துருக்கி நாடு அடைந்த தோல்வியையடுத்து, காலிஃப் பதவி காலியாகிவிட்டது. அந்த காலிஃ பதவியை மீண்டும் கொண்டுவரவேண்டும் என்பதற்காக காந்தியின் தலைமையில் கிலாஃப்த் இயக்கம் 1920-ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெற்று ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர் என்பது பலருக்குத் தெரியாது. துருக்கி நாட்டில் காலியாகிப் போன காலிஃப் பதவிக்கு இந்தியாவில் போர்க்கொடி தூக்கி பல்லாயிரக்கணக்கான உயிர் பலிகளுக்கு காரணமாக இருந்த உத்தமர் காந்தியை என்னவென்று சொல்வது?
ISIS -க்கு ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் மொத்தமாக 80,000 போராளிகள்/போர் வீரர்கள் இருப்பதாக அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ தெரிவித்திருக்கிறது. இதில் வெளிநாட்டு இஸ்லாமியப் போராளிகளும் அடக்கம். செச்சன்னியா, பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்க நாடுகளை சேர்ந்தவர்களும் ஐகுஐகு -ல் திருப்பணி செய்கிறார்கள். இந்தியாவிலிருந்தும், ஏன் தமிழகத்திலிருந்தும் கூட ISIS சேவையில் தங்களை இணைத்துக்கொள்ள பல இஸ்லாமிய இளைஞர்கள் ஆர்வம் காட்டிய/முயற்சி செய்த செய்திகள் ஊடகங்களிலும், இணையத்திலும் வெளிவந்திருக்கிறது.
காலிஃப் அபு பக்கர் அல் பக்தாதி தலைமையில் ஒரு அமைச்சரவை செயல்படுகிறது. அவருக்கு ஆலோசனை சொல்ல 12 கேபினட் அமைச்சர்கள் இருக்கிறார்களென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். நிதித்துறை , நீதித்துறை, காவல் துறை, இராணுவம் என பல துறைகள் ISIS -ல் செயல்படுகின்றன. ஷரியத் படிதான் நீதிபரிபாலனம் செய்யப்படுகிறது. ஈராக் நாட்டின் வட பகுதிகளில் இருக்கும் எண்ணெய் கிணறுகள் ISIS -ன் வசம். அதன் மூலமாக ஐகுஐகு -க்கு கொள்ளைப் பணம் கிடைக்கிறது. இதை தவிர ISIS -ஐ சேர்ந்த போராளிகள் அவ்வப்பொழுது ஈடுபடும் கொள்ளை, கடத்தல் இவைகளின் மூலமகாவும் ISIS -ன் கஜானா நிரம்பி வழிகிறது. இதன் காரணமாக இன்று உலகிலேயே அதிக வருவாய் கொண்ட ஜிஹாத் இயக்கம் என்ற பெருமையை ISIS பெற்றிருக்கிறது.
ISIS ஆட்சிப் பகுதிகளில் பெண்கள் கண்டிப்பாக பர்தா அணியவேண்டும், வெளியில் செல்லக்கூடாது; இசை, நாட்டியம் அனைத்திற்கும் தடா; வீட்டில் புகைப்படம் வைத்திருத்தல் கூடாது; புகைப்பிடித்தலும் கூடாது; குழந்தைகளுக்கு கட்டாயம் மதக் கல்வி போதிக்கவேண்டும்; அவர்களுக்கு தப்பித் தவறி கூட அறிவியல், கணிதம், இலக்கியப் பாடங்களை கற்பித்தல்கூடாது. டார்வினின் பரிணாமக் கொள்கையாவது, நியூட்டனின் புவியீர்ப்பு கொள்கையாவது, திருகுரான் முன்னர் அவைகள் அனைத்தும் குப்பைகள் என்பன போன்ற பல நல்ல திட்டங்களை ISIS வகுத்து, அதை தன் மக்களிடையே கட்டாயமாக்கி வருகிறது.
இவைகளைத் தவிர ISIS -ன் ஆட்சி பகுதிகளின் உள்ளேயும், வெளியேயும் களையெடுக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. ஷியா பிரிவு இஸ்லாமியர்கள், கிருத்தவர்கள், குர்து இன மக்கள், எஸ்தி இன மக்கள் என அனைவரும் பரலோகத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள். அவர்களுடைய சொத்துகள் சூறையாடப்பட்டு அபகரிக்கப்படுகின்றன. அவர்கள் வீட்டுப் பெண்கள் போராளிகளுக்கு சுழற்சி முறையில் விருந்தாக்கப்படுகிறார்கள்.
சுன்னி பிரிவைச் சேராதவர்களுக்கு ISIS வகுத்த மூன்று நிபந்தனைகள்,
1) மதம் மாறிவிடு, அல்லது
2) ஜிஸ்ஸியா (தலைவரி) செலுத்தி திம்மியாக இரு,அல்லது
3) செத்து மடிந்து விடு. trdrbb
ISIS -ன் கொடுமைகள் தாளாமல் பெருவாரியான மக்கள்
இவர்களது ஆளுகையை விட்டு தப்பிப் பிழைத்து அருகிலிருக்கும் நாடுகளில் தஞ்சம் புகுகிறார்கள். ஆனால் ISIS இவர்களை விடுவதாக இல்லை. எல்லையைத் தாண்டி, இவர்களைத் தொடர்ந்து, தொடர் அட்டூழியங்கள் புரிகின்றனர்.
உலக நாடுகளுக்கு இன்று ஐகுஐகு சவாலாக இருப்பதற்கு காரணம், அதனுடைய பணபலமும், உலகளவில் அதில் இணைந்து கொள்ளத் துடிக்கும் இஸ்லாமிய போராளிகளும் தான். ஒசாமா பின் லேடனின் அல் கொய்தாவிற்குப் பிறகு, அபு பக்கர் அல் பக்தாதியும், ISIS-ம் அமைதி மார்க்கத்தை தங்களுடைய பயங்கரவாதத்தால் பரப்பி, உலகில் மயான அமைதியை ஏற்படுத்துவார்கள் என்பதில் ஐயமில்லை.
- sp chokkalinkam
0 comments:
Post a Comment