படம் - வசந்த ஜீவா |
டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்காக நடத்தப்படும் போட்டித்தேர்வு 2015 ஜனவரி 10ம்தேதி தமிழக அளவில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வில் பங்கேற்கத் தேவையான விண் ணப்பங்கள், பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர் அலுவலகத்தில் வரும் 10ம் தேதி தொடங்கி, 26ம் தேதி வரை, அலுவலக நேரங்களில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விநியோகிக்கப்பட உள்ளது. இதற்காக விண்ணப்பிக்க விரும்புவோர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ லர் அலுவலகத்திற்கு வந்து, ரூ.50 கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
இதனைத் தொடர்ந்து விண்ணப்பதாரர்களில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இனத்தவர் உள்ளிட்ட அனைத்துப் பிரிவினர்களும் ரூ500க்கும், ஆதிதிராவிடர் இனத்தவர் ரூ.250 க்கும் டிடி எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து வருகிற 26ம் தேதி மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும். இதில் ஆதி திராவிடர் இனத்தவர் மட் டும் விண்ணப்பங்களைப் பெற வரும்போது, தங்களது சாதிச் சான்றிதழின் நகலை எடுத்துவர வேண்டும்.
இந்தத் தேர்வில் எம்எஸ்சி, எம்சிஏ, எம்ஏ, எம்காம் படித்து, பிஎட் பட்டம் பெற் றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவர், எனத்தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு டிஆர்பி மூலமாக விநியோகித்திட 4,400 விண்ணப்பங்கள் முதல்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. .
0 comments:
Post a Comment