சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி அளித்தும் கட்டுப்பாடு என்ற பெயரில் பல நிபந்தனைகளை விதித்து பெரம்பலூரில் நடக்கவிருந்த rss ன் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு தடை விதித்ததோடு மட்டுமல்லாமல் 350 றக்கும் மேற்பட்ட RSS ன் தொண்டர்களை கைது செய்தது பெரம்பலூர் காவல்துறை.
காவல்துறை விதிக்கும் கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொள்கிறோம் என்று கையெழுத்துப்போட நிர்பந்தித்தது மட்டுமல்லாமல், அவ்வாறு கையெழுத்து போடவில்லை என்றால் பெரம்பலூர் மாவட்ட RSSன் முக்கிய பொறுப்பாளர்களை கைது செய்வோம் என மிரட்டியதாக கூறப்பட்ட நிலையில் ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
பெரம்பலூர், துறையூர் மற்றும் அரியலூர் பகுதிகளைச்சேர்ந்த RSS தொண்டர்களின் அணிவகுப்பு ஊர்வலம் பெரம்பலூர் பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகம் முன்பு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. சரியாக மாலை 5 மணிக்கு ஊர்வலம் தொடங்கும் என கூறப்பட்ட நிலையில் 3 மணி முதற்கொண்டே தொண்டர்கள் அணிவகுக்கத்தொடங்கினர்.
மாலை 5 மணிவரை காவல்துறை அணிவகுப்புக்கு அனுமதி அளிக்காத நிலையில் கைது செய்யப்படுவோம் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியது. நாம் எதிர்பார்த்தது போலவே ஆரம்பத்தில் இரண்டு காவல்துறை வாகனங்கள் மட்டுமே இருந்த நிலையில் தொண்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க மேலும் மூன்று வண்டிகளை கொண்டுவந்த நிறுத்தினர்.
பெரம்பலூர் கிருஷ்ணா தியேட்டர் அருகே RSS ன் சீருடை அணிந்த தொண்டர்கள் அணிவகுத்து நின்ற காட்சி பெரம்பலுருக்கு புதிது என்றே சொல்லும் அளவுக்கு மக்களின் கருத்து இருந்தது. பிரார்த்தனா பாடப்பட்ட பிறகு ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை... மீறி ஊர்வலம் சென்றால் கைது செய்யப்படுவீர்கள்...... என காவல் துறை அதிகார்கள் கூறியதால் வேறு வழியின்றி காவல்தறையின் தடையை மீறி ஊர்வலம் செல்ல தீர்மானிக்கப்பட்டு RSS தொண்டர்கள் அணிவகுத்து செல்லத்தொடங்கினர்.
எல்லோரும் கைது செய்யப்படுகிறீர்கள்....... எனக்கூறிய காவல்துறை அதிகாரிகள் தொண்டர்களை போலிஸ் வண்டியில் ஏறச்சொன்னனர். வரிசையாக ஒவ்வொரு வாகனமாக பெரம்பலூர் பாலக்கரை அருகே உள்ள சின்னமணி ராஜேஸ்வரி திருமண மண்டபம் நோக்கி கொண்டு செல்லப்பட தொண்டர்கள் சுமார் 2 மணி நேரம் அங்கேயே தங்கவைக்கப்பட்டனர். மேலும் 5 முக்கிய பொறுப்பாளர்கள் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டது,
இரண்டு மணி நேரம் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்ட ஸ்வயம் சேவகர்கள் மறுபடியும் காவல்துறை வாகனத்திலேயே பாஜக அலுவலகம் அருகே இறக்கிவிடப்பட்டனர்.
பள்ளி மாணவர்கள் முதல் முப்படைந்த வயதானவர்கள் வரை அணிவகுப்பில் கலந்துகொள்ள வந்தது பெரம்பலூர் மக்களுக்கு பஒரு புதிய அனுபவம் என்றே கூறவேண்டும்.
0 comments:
Post a Comment