பெரம்பலூரில் கைது செய்யப்படும் RSS தொண்டர்கள்.. |
சென்னையில் 8000 பேர் கைது செய்யப்பட்டனர், தமிழகம் முழுவதும் 36 இடங்களில் 40,000க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தமிழக அரசின் ஜனநாயக விரோதப் போக்கைக் காட்டுகிறது. நீதிமன்றம் அனுமதிக்க வலியுறுத்தியும், நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை பின்பற்ற காவல்துறை மறுத்துள்ளது. இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கையை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
ஜனநாயக உரிமையை தமிழக அரசு துச்சமென மதித்துள்ளது மட்டுமல்ல, நீதிமன்றத்தை அவமதித்துள்ளது. தடை செய்ய எந்த மூகாந்திரமும் இல்லாத நிலையில் தமிழக அரசும், காவல்துறையும் நடந்துகொண்ட விதம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
மக்களின் கடைசி நம்பிக்கையாக விளங்கும் நீதிமன்றம், இந்தப் பிரச்னையை தானாக முன்வந்து எடுத்து, தமிழக அரசின் செயல்பாடு குறித்த தகவல்களைத் திரட்டி சட்டத்தின் மாட்சியமையை மெய்ப்பிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)
0 comments:
Post a Comment