Friday, 6 June 2014

ஈரோடு அருகில் சேலம்-கோவை மெயின் ரோட்டில் உள்ளது பெருந்துறை. பெருந்துறை சரித்திர பழமை வாய்ந்த ஊர். மதமாற்றம் என்பதை அங்கீகரிக்காத ஊர். மேட்டுபாங்கான பகுதியாதலால் இங்கு ஐம்பது வருடங்களுக்கு முன்பு வரை மானாவரி விவசாயமே. காய்ந்த காலங்களில் நாட்டு மாடு மேய்த்து, மழை காலங்களில் சோளம், வரகு, எள், போன்றவைகளை பயிர் பண்ணி, வருவோர்க்கு நாட்டு மாட்டு மோரும், சோள சோறும் இட்டு விரும்தோம்பலுக்கு பெயர் பெற்றவர்கள் இப்பகுதி மக்கள். இத்தாலூகாவின் சில பகுதிகளில் கீழ்பவானி வாய்க்கால் பாசனம் இடையில் வந்தது. கரும்பு, நெல், வாழை, மஞ்சள் என மக்கள் பயிர்களை மாற்றினர். மாட்டையும் மாற்றினர். நாட்டு மாடுகளுக்கு பதில் சீமை மாடுகளுக்குச் சென்றனர். பால் கறந்து ஊற்றி லாபமில்லாமல் பொருளாதார வீழ்ச்சி அடைந்து உடல் நலம் கெட்டு, மனநலம் கெட்டு போயினர்.

நாட்டு மாடுகளை பேணும் விவசாயி
madu
இப்படி வீழ்ந்த ஊர்களில் பெருந்துறை தாலூக்காவில் உள்ள நல்லாம்பட்டியும் ஒன்று. செந்தில் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற விவசாயி நாட்டு மாடுகளை காக்க எண்ணினார். சில வருடங்களாக இந்த எண்ணம் கொண்டுள்ள அவர், முன்பு தனது கைகாசை (ரூ. ஐந்து லட்சம்) வைத்து அந்தியூர் குருநாதசாமி கோயில் திருவிழாவில் நாட்டு மாடுகள் கொண்ட கண்காட்சியை நடத்தினார். பின்பு அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ற நாட்டு மாடுகளை வளர்க்க வேண்டும் என்று முடிவு செய்து கிர், தார்பார்க்கர், சிந்தி போன்ற வட நாட்டு மாடுகளை புறக்கணித்து தனது பகுதி நாட்டு மாடுகளான கொங்க மாடுகளை வாங்கி வளர்க்க ஆரம்பித்தார். முதலில் ஊரார் தூற்றினர். பைத்தியகாரன் என்றனர். (நல்ல வேலை கல்யாணமாகிவிட்டது. இல்லையேல், இவருக்கு யாரும் பெண் கொடுக்கமாட்டார்கள்). ஊரான் தூற்றல்களை சமாளித்து தற்போது பன்னிரண்டு கொங்க நாட்டு பசுக்கள், மூன்று நாட்டு காளைகள், ஏழு கன்றுக்குட்டிகள் என தனது தொண்டுபட்டியை (தொழுவம்) நாட்டு மாடுகளால் அலங்கரித்து வருகிறார்.

நாட்டு மாடுகளை கொண்டு மகத்தான வருமானம்
நாட்டு மாடுகளை வளர்ப்பதில் அவரது மனைவியும் மிகவும் சிரத்தை காட்டுகிறார்கள். நான்கு ஏக்கர் விவசாய நிலமும் அதில் பயிர்செய்தும், நாட்டு மாடுகளை வளர்த்தும் சுயஉழைப்பில் முன்னேற வேண்டும் என்று நினைத்தவருக்கு ஈரோட்டில் இயங்கி வரும் பஞ்சகவ்ய ஔஷதாலயம் மூலமாக நாட்டு மாடுகளை கொண்டு பால்பொருட்களை நம்பாமல் நல்ல லாபம் பெறமுடியும் என்பதை அறிந்துகொண்டார். மாட்டு மூத்திரத்தை காய்ச்சி அர்க்கம் எனும் ஆயுர்வேத மருந்து தயாரிக்கிறார். மேலும், மாட்டு சாணத்திலிருந்து விபூதி, சோப்பு, ஷாம்பூ போன்றவற்றை தயாரிக்க திட்டமிட்டார். மேலும், நாட்டு மாட்டு பாலை பேக் செய்து 1 லிட்டர் பாலை 65 ரூபாய்க்கு விற்று வருகிறார். மேலும், ஆயுர்வேத மருந்துக்கு அவசியமான மிகவும் அரிதான பாரம்பரிய முறையில் வீட்டில் செய்யப்படும் முறையில் நாட்டு மாட்டு நெய்யும் தயாரிக்கிறார். அவரது மனைவி துணையாக சுழன்று வேலை செய்கிறார். நாட்டு மாடுகளுக்கு கடந்த தைமாதம், முதல் தனது குலகுருவைக்கொண்டு பிரதி மாதம் கடைசி வெள்ளிகிழமை கோபூஜை நடத்தி வருகிறார். குலகுருவை மறந்த அவரும், உறவினர்களும் குருவை தரிசித்து ஆசிகளை பெறுவதோடு, கோ பூஜை புண்ணியத்தையும் அடைகின்றனர். அதோடில்லாமல், தான் மட்டும் நாட்டு மாடுகளை வளர்ப்பதோடில்லாமல் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை ஊக்கமளித்து நாட்டு மாட்டுகளை வாங்க செய்துள்ளார். தனது பொலிக்காளைகளைக் கொண்டு அம்மாடுகளுக்கு செயற்கை கருவூட்டல் இல்லாமல் இயற்கையாக சினை பிடிக்க உதவி வருகிறார்.

வங்கியின் உதவியை நாடுதல்
இந்த நாட்டு மாடுகளின் பொருட்கள் நல்ல வருமானம் கொடுப்பதாக இருந்தாலும், அரசு எந்த வித மானியமோ, கூட்டுறவு வங்கிகள் நேரடி நிதியுதவியோ அளிப்பதில்லை. அதனால், தனது நான்கு ஏக்கர் சொத்தை (ரூ. எண்பது லட்சம் மதிப்பு) அடமானம் வைத்து அவ்வூரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் லோன் வேண்டுமென்று விண்ணப்பம் செய்தார். ஒரு ஆடிட்டரைக் கொண்டு முப்பது லட்சம் ரூபாய்க்கு லோன் பிராஜெக்ட் ரிப்போர்ட் கொடுத்தார். இதனை கடந்த ஜனவரியில் பேங்க் ஆப் இந்தியா வங்கி மேலாளர் திரு.சந்தானராஜிடம் கொடுத்தார் (இவர் ஒரு கிறிஸ்துவர் என்பது குறிப்பிடத்தக்கது). நாட்டு மாட்டிலிருந்து அர்க்கம், ஷாம்பூ, சோப்பு, விபூதி, பால் முதலியவைகளால் நல்ல லாபம் பெற முடியும் என்று கூறி விண்ணப்பித்தார். சுமார் இருபது முறை இதை கொடு அதை கொடு என்று பேங்கில் தொந்தரவு செய்தும், பொறுமையாக அவர் கேட்டதை எல்லாம் கொடுத்த பிறகும் விவசாய லோன் ஏதுமில்லை என்று கூறிவிட்டாராம். பின் எதற்காக கிராமத்தில் வங்கியை வைத்துள்ளார்களாம்?

பின்வாசல் வழியே ஆப்ரகாமிய பாதிரிகள்
லோன் கேட்ட சில வாரங்களில் இரண்டு இளம்வயது பாதிரிகள் (நன்கு டக்-இன் செய்துகொண்டு) மார்ச் மாத கடைசியில் இந்த நாட்டு மாட்டு விவசாயியை சந்தித்து கோவையிலிருந்து வந்துள்ளதாக கூறியுள்ளார்கள். TN 74 ரெஜிஸ்திரேசன் கொண்ட யூனிகாரன் பைக்கில் வந்துள்ளனர். இந்த நாட்டு மாட்டு காளைகள் மூன்றையும் மூன்று லட்சம் ரூபாய்க்கு எங்களிடம் கொடுத்து விடுங்கள்.
உங்களுக்கு கிர், தார்ப்பார்க்கர் போன்ற வடநாட்டு மாட்டு ஊசிகளை இலவசமா தருகிறோம்; உங்கள் நாட்டு மாடுகளுக்கு இதனை இட்டு கலப்பின மாடுகளை உருவாக்குங்கள். இப்படி உருவாகும் கலப்பின மாடுகள் நன்கு பால் கறக்கும். இந்த கொங்க மாடுகள் எல்லாம் வேஸ்ட் என்று பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். இப்படி கூறியவுடன் அந்த விவசாயி உறுதியுடன் நாட்டு மாடுகளை வளர்ப்பதே என் லட்சியம் இவையெல்லாம் தேவையில்லாத ஒன்று என்று கூறி அவர்களை திருப்பியனுப்பியுள்ளார்.

இரண்டுமணி நேர மூளை சலவை
பின் இருபது நாட்கள் கழித்து ஏப்ரல் 17 ஆம் தேதி அந்த இரண்டு நபர்களும் மேலும் ஆறு பேருடன் வந்துள்ளார்கள். அன்று ஊரில் மாரியம்மன் பண்டிகையாதலால் வீட்டில் விவசாயியின் மனைவி மற்றும் பெரியோர்கள் யாருமில்லை. அந்த சமயத்தில் ரெஜிஸ்திரேசன் செய்யப்படாத மஹிந்திரா சைலோ காரில் ஐம்பது வயது மதிக்கத்தக்க பாதிரி ஒருவரும், முப்பது வயதில் இருவர், இருபது வயதில் மூன்று பேர் என ஒரு கும்பலாக வந்துள்ளனர். அனைவரும் நாகர்கோயில், மதுரை மற்றும் சென்னை பாஷைகளில் பேசியுள்ளனர். சுமார் இரண்டுமணி நேரம் மூளை சலவை செய்துள்ளனர். அவர்கள் கூறியவைகளாவது,
  • இந்த நாட்டு மாட்டை வைத்து நீங்கள் முன்னேற முடியாது,
  • உங்கள் காளை மாடுகளை எங்களிடம் விற்றுவிடுங்கள் மூன்று லட்சம் ரூபாய்க்கு வாங்கிக்கொள்கிறோம்.
  • கிர், தார்ப்பார்க்கர் போன்ற வடநாட்டு மாட்டு ஊசிகளை இலவசமா தருகிறோம்; உங்கள் நாட்டு மாடுகளுக்கு இதனை இட்டு கலப்பின மாடுகளை உருவாக்குங்கள்
  • அய்யர் (குலகுரு) போலி. யாகங்கள் செய்யறது ஒண்ணுக்கும் பயனில்லை. அவரை வைத்து கோ பூஜை பண்றது தப்பு,
  • ஏசுதான் மாட்டுக்கொட்டாயில் பிறந்தார். அவர்தான் நம்மை காக்க முடியும்,
  • இலவசமா போர்வெல் (ஆழ்துளை கிணறு) போட்டுத்தருகிறோம்.
  • இலவசமா உங்க வீட்டுக்கு ஜன்னல் அமைத்துத்தருகிறோம்,
  • வாரம் ஒருமுறை எங்கள் பாதர் வந்து ஜபம் செய்வார். அவர் வரும் நேரங்களில் கிடைக்கிற வருமானம் அனைத்தும் உங்களுக்குத்தான்,
  • உங்களது இடத்தில் இருபது சென்டில் எங்களுக்கு இடம் ரெஜிஸ்டர் செய்து வைக்க வேண்டும்,
  • உங்களது மாட்டு அர்க்கம், சோப்பு, ஷாம்பு போன்றவற்றை உலகம் பூரா மார்கெட்டிங் பண்ணித்தருகிறோம்,
  • உங்களுக்கு எவ்வளவு காசு வேண்டுமானாலும் தருகிறோம்.

இப்படியெல்லாம், ரெண்டுமணி நேரம் அந்த விவசாயியை வீட்டு மாட்டு கொட்டகையில் வைத்து பேசியுள்ளார்கள். விவசாயி போன் பேச அனுமதிக்கவில்லை. எட்டு பேரும் சுற்றி நின்று மிரட்டல் தொனியிலேயே பேசியுள்ளார்கள். விவசாயி செய்வதறியாது அவர்கள் கூறுவதை கேட்டுகொண்டு இருந்துள்ளார். இவ்வளவு நேரம் பேசிக்கொண்டுள்ளோம் ஒரு இளநி போட்டு தாங்க என்று கேட்டுள்ளனர். உடனே, விவசாயி என்னிடம் இளநி போட தென்னை மரமில்லை என்று பதிலளித்துள்ளார். உடனே, அவர்கள் உங்களிடம் இத்தனை ஏக்கர் இருக்கிறது. இத்தனை தென்னை மரங்கள் இருக்கிறது என்று சரியாக கணக்கு வைத்துக் கூறியுள்ளனர். விவசாயி தன்னைப்பற்றி இவர்கள் இவ்வளவு தெரிந்து வைத்துள்ளனரே என்று நினைத்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் நாங்கள் மீண்டும் வருவோம் என்று கூறி விட்டு சென்றுள்ளனர்.

பத்து நாட்கள் கழித்து பெருந்துறையிலிருந்து போன் செய்து நாங்கள் வீட்டிற்கு வருகிறோம் என்று கூறியுள்ளார்கள். விவசாயி அவர்களை வரச்சொல்லிவிட்டு முதல்முறை பேச்சுவார்த்தையின் போதே மிரட்டும் தொனியில் பேசிய அவர்களின் நடவடிக்கையை மனத்தில் கொண்டு அவர்களுடன் தனியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டாம் என்ற எண்ணத்தில் ஊர்மக்களை அழைத்து வைத்திருந்தார். இதற்கிடையில் மீண்டும் அவர்கள் போன் செய்து ““ஊர்மக்களை திரட்டி வைத்துள்ளாய். நீ திருந்த மாட்டாய். நீ எங்களிடம் திரும்பி வருவாய். எங்கள் உதவி உனக்கு தேவைப்படும்” என்று கூறி போனை கட் செய்துவிட்டனர்.

பாரம்பரியத்தையும், காளைகளையும் ஒழிக்க திட்டம்
மதமாற்றம் செய்வது கிறிஸ்தவர்களின் நோக்கமாக இருந்தாலும், கொங்க காளைகளை வாங்க மூன்று லட்சம் ரூபாய் பாதிரிகளுக்கு எங்கிருந்து வருகிறது? காளைகளை ஏன் வாங்க நினைக்கிறார்கள்? வாங்கிய மாடுகள் எங்கே போகிறது? ஏன் வடநாட்டு மாடுகளை கலப்பினமாக்க நினைக்கிறார்கள்? போன்றவை யோசிக்கவேண்டியவை. குலகுரு செய்யும் கோ பூஜையை தடுக்க நினைக்கின்றனர்.

குலகுரு, பசு, காளைகள் போன்றவைகள் நாட்டில் பெருகுவதை அவர்கள் விரும்பவில்லை. மேன்மேலும், கலப்பினங்களை வலியுறுத்துவதிலேயே வந்தவர்கள் குறியாக இருந்துள்ளார்கள். நாட்டு காளைகளை ஒழித்து கிராமத்தில் நாட்டு மாடுகள் இனவிருத்தி ஆகக்கூடாது என்பது அவர்களது எண்ணம். நாட்டு மாடுகளை வளரவிடகூடாது என்று கிறிஸ்தவர்கள் குறியாக இருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான ஜல்லிக்கட்டு தடை கூட இதனுடன் சம்பந்தப்பட்டிருக்கலாம். ஜல்லிக்கட்டு இருப்பதாலேயே நாட்டு காளைகளை இனவிருத்தி செய்து நல்ல முரட்டு காளைகளை உருவாக்க இளைஞர்கள் முயற்சிக்கின்றனர். இதனால், பொலிக்காளைகள் நாட்டில் இருப்பதால், நாட்டு காளைகள் இனவிருத்தி ஆகிக்கொண்டே இருக்கிறது. இதனை தடுக்க வேண்டுமெனில், நாட்டு காளைகளை பூண்டோடு அழிக்க வேண்டும். இருக்கவே இருக்கிறது புளூ கிராஸ் மற்றும் விலங்கு பாதுகாப்பு அமைப்புகள். அவைகளை வைத்து சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் போடுகிறார்கள். அதற்கு நிதியுதவி கூட பெறப்பட்டிருக்கலாம். ஜல்லிக்கட்டு தடை செய்யப்படும். காளைகள் அடிமாட்டிற்கு விற்கப்படும். நாட்டு காளைகள் பூண்டோடு அழியும். இதுதான் இந்த பின்வாசல் மாபியாக்களின் திட்டம். பசுக்களும், காளைகளும் தெய்வமாக ஜல்லிக்கட்டிலும், கோயிலிலும் கும்பிடப்படும் செயல் குறைந்தால்தான் மக்கள் தங்கள் கலாச்சாரத்தை விட்டு சந்தைகலாச்சாரத்திற்கு மாறுவார்கள் என்ற நோக்கமும் உள்ளே இருக்கலாம். நமது கலாச்சாரத்தை முற்றிலும் அழிக்கவேண்டும் என்று மிக நீண்டகாலமாக கிறிஸ்தவர்கள் சதி அதை பல வழிகளிலும் நிறைவேற்றி வருகிறார்கள். அரசாங்க துறைகளை உபயோகித்து கலப்பின ஊசிகளை இட்டு நமது நாட்டு பசு இனங்களை சீரழித்தனர். கலப்பின பயிர்களை உண்டாக்கி நமது பாரம்பரிய நெல் ரகங்களை அழித்தனர். முற்போக்கு கம்முனிச, திராவிட கும்பலை உருவாக்கி நமது மக்களின் மனத்தை கெடுத்து நமது குருமார்கள் மீது நாம் வைத்திருந்த மரியாதையை கெடுத்து குருமார்களை துவேசித்து ஒதுக்கி நம்மை முன்னோர் சாபங்களை பெற வைத்தனர். இப்படியாக பல்வேறு கோணங்களில் சதிவலை நம்மேல் பின்னப்பட்டுள்ளது. விழித்துக்கொள்ளுங்கள் பாரதவாசிகளே!

thanks to- vsrc 


வ.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிவரும் ரகுமான் அவர்களின் மகள் சபியா பானு கடந்த வருடம் வாகன விபத்தில் மரணமடைந்தார். அவரின் நினைவாக பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் கலையரங்கம் அமைக்க முடிவுசெய்து ரகுமான் அவர்களின் பங்களிப்புடன்,   கட்டுமானப்பணிகள் நடைபெற்றுவருவதாக அறிகிறோம்.

வ.களத்தூர் மதரீதியாக மிகவும் பதற்றமான ஊராகும். கடந்தவருடம் இந்து-முஸ்லிம்களிடையே மோதல்கள் ஏற்பட்டது நினைவிருக்கலாம். இன்றளவும் இந்துக்களின் பயன்பாட்டில் இருந்துவரும் இடம் தொடர்பாக தற்போதும்  பிரச்சினை இருந்துவருவது நாம் அறிந்த ஒன்று.

இந்த நிலையில் விபத்தில் மரணமடைந்த சபியா நினைவாக வ.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலையரங்கம் அமைக்கும் இடத்தில் ஒருசாராருக்கு சார்பாக மாவட்ட நிர்வாகம் நடந்து கொள்வதாக இந்துக்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது. அரசுக்கு சொந்தமான ஒரு பள்ளியில் மத நல்லிணக்கத்தை காக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடந்துகொள்ளவேண்டும் என்பதே வ.களத்தூர் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது...

பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளை பெற பொதுமக்கள் தனியார் நிறுவனங்களை நாட வேண்டாம் என வெளியுறவு அமைச்சகத்தின் பாஸ்போர்ட் மற்றும் விசா பிரிவு அறிவுறுத்தி உள்ளது.

இது குறித்து இப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

 புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தல், புதுப்பித்தல் உள்ளிட்ட பாஸ்போர்ட் தொர்பான அனைத்து சேவைகளும், www.passportindia.gov.in என்ற இணையதளம் மூலம் நாடு முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சில தனியார் இணையதளங்கள் மற்றும் பயண முகவர்கள், தாங்கள் பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளை வழங்க அரசின் அங்கீகாரம் பெற்றுள்ளதாக கூறி வருவதாக தெரிகிறது.
 வெளியுறவு அமைச்சகம் பாஸ்போர்ட் தொடர்பான பணிகளை மேற்கொள்ள தனியார் யாருக்கு அனுமதி அளிக்கவில்லை என்பதை பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். பாஸ்போர்ட் தொடர்பான பணிகளுக்கு தனியாரிடம் சென்று அதில் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட விóண்ணப்பதாரரே பொறுப்பாவார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது v.kalathur seithi .

டிஇடி தேர்வு எழுதியவர்களுக்கான புதிய வெயிட்டேஜ் முறையை அரசு வெளியிட்டதை அடுத்து, 58 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் பெறுவோர் தகுதி தேர்வு (டிஇடி) எழுத வேண்டும் என்று கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதைத் தொடர்ந்து 2011ல் தமிழகத்தில் டிஇடி தேர்வு நடத்தி அதில் 150க்கு 90 மதிப்பெண் பெறுவோர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு நடந்த டிஇடி தேர்வில் 27 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். பின்னர் எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண்கள் தளர்வு வழங்கி அரசு உத்தரவிட்டது. அதன்படி 46 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேற்கண்டவர்களுக்கு கடந்த மாதம் சான்று சரிபார்ப்பு நடத்தி முடிக்கப்பட்டது.

இந்நிலையில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், ‘‘பிளஸ் 2, டிடிஎட், டிஇஎட், பட்டப் படிப்பு, பி.எட், டிஇடி ஆகிய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களுக்கு தனித்தனியாக அறிவியல் பூர்வமாக வெயிட்டேஜ் வழங்க வேண்டும்’’ என்று நீதிமன்றம் தெரிவித்தது.நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஏற்கனவே வழங்கப்பட்ட வெயிட்டேஜ் மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டு, தற்போது புதிய வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 
இதன்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க மொத்தம் 100 மதிப்பெண் கணக்கிடப்படும். அதில் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்ணுக்கு 15, டிடிஎட், டிஇஎட் தேர்வு மதிப்பெண்ணுக்கு 25, டிஇடி தேர்வுக்கு 60 மதிப்பெண்கள் ஒதுக்கப்படுகிறது. அதேபோல பட்டதாரி ஆசிரியர்களுக்கு மொத்தம் 100 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படும். அதில் பிளஸ் 2 தேர்வுக்கு 10, பட்டப் படிப்புக்கு 15, பிஎட் தேர்வுக்கு 15, டிஇடி தேர்வுக்கு 60 என மதிப்பெண்கள் வழங்கப்படும். இதற்கான பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் தொடங்கியுள்ளது. தற்போது 73 ஆயிரம் பேர் புதிய வெயிட்டேஜ் முறையின் கீழ் மதிப்பெண் பெறுவார்கள்.

புதிய வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவது குறித்து பட்டதாரி சங்கங்கள் சார்பில் கூறப்படுவதாவது:

டிஇடி தேர்வில் 150 மதிப்பெண்ணுக்கு பொதுப் பிரிவினர் குறைந்த பட்சம் 90 மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும். 5 சதவீத தளர்வின்படி எஸ்சி எஸ்டி பிரிவினர் உள்ளிட்டவர்கள் குறைந்தபட்சம் 82 மதிப்பெண் பெற்றிருந்தால் தேர்ச்சி பெற்றவர்கள் ஆவர். 5 சதவீத தளர்வு பெற்றவர்கள், புதிய வெயிட்டேஜ் முறைப்படி 49.20 மதிப்பெண்கள் டிஇடி தேர்வில் பெறுகின்றனர். ஆனால் பிளஸ் 2, பட்டப்படிப்பு, பி.எட் உள்ளிட்ட படிப்புகளில் குறைந்த பட்சம் தலா 5 மதிப்பெண்கள் வீதம் பெற்றால் தான் அவர்கள் புதிய வெயிட்டேஜில் 100க்கு 64 புள்ளிகளாவது  பெறுவார்கள்.

மேலும், 90 மதிப்பெண்கள் பெற்ற பொதுப் பிரிவினர் (‘எஸ்’ சதவீதப்படி) 54 புள்ளிகள் பெறுவார்கள். மற்ற படிப்புகளில் குறைந்த பட்சம் தலா 5 மதிப்பெண்கள் பெற்றால்தான் அவர்கள் 100க்கு 69 புள்ளிகளை நெருங்குவார்கள். இதன்படி பார்த்தால் 5 சதவீத தளர்வில் தேர்ச்சி பெற்றவர்களும், பொதுப் பிரிவில் அதிக மதிப்பெண் பெற்றவர்களும் ஏறத்தாழ சம அளவு புள்ளிகளை பெறும் நிலை ஏற்படுகிறது. இதனால் 73 ஆயிரம் பேரும் தேர்ச்சி பெற்று பணி நியமனம் பெறும் தகுதி பெறுகிறார்கள். ஆனால், மொத்தம் உள்ள 15 ஆயிரம் பணியிடங்களை இன சுழற்சி முறையில் பிரித்து பணி நியமனம் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

அதனால் ரேங்க் பட்டியலில் இன சுழற்சி வாரியாக முதலில் வருவோருக்கே பணி நியமனம் கிடைக்கும். மீதம் உள்ள சுமார் 58 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் பணி கிடைக்க வாய்ப்பு இல்லை. பணி வாய்ப்பு இழந்தவர்கள் மறுமுறையும் தேர்வு எழுத வேண்டுமா அல்லது அவர்களுக்கு அடுத்து வரும் காலிப் பணியிடங்களில் நியமனம் வழங்கப்படுமா என்பதை ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்க வேண்டும்.
இவ்வாறு பட்டதாரிகள் சங்கங்கள் தெரிவித்துள்ளன v.kalathur seithi.

Thursday, 5 June 2014


பிரதமர் மோடி, அனைவரும் வெறுக்கும் தன்மையில் இருந்து தன்னை நவீனத்துவம் மற்றும் வளர்ச்சியின் அவதாரமாக மாற்றிக் கொண்டுள்ளார் என காங்கிரஸ் தலைவர் சசிதரூர் மோடியை வெகுவாக பாராட்டி உள்ளார். தி ஹஃப்பிங்டன் போஸ்ட் என்ற பத்திரிக்கையில் தான் எழுதிய கட்டுரையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மோடி பக்கம் சாயும் காங்கிரஸ் : அனைவரின் குற்றச்சாட்டுக்களுக்கும், வெறுப்புக்கும் ஆளான மோடி, தற்போது நவீனத்துவம் மற்றும் வளர்ச்சியின் அவதாரமாக திகழும் வகையில் தன்னை மாற்றி அமைத்துக் கொண்டுள்ளார். தனது முரட்டு தனமாக பிடிவாதத்தின் காரணமாக காங்கிரஸ் அவருடன் ஒத்துப் போக தவறிவிட்டது; இந்து மதவெறி கட்சி என்ற வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த பா.ஜ.,வை ஆட்சி அமைக்கும் தகுதி பெற்ற தன்மையுடைய கட்சி என்ற இடத்திற்கு கொண்டு சென்றவர் மோடி; பா.ஜ., வின் மொழியையும், தன்மையையும் மாற்றி அமைத்துள்ளார் மோடி; மோதல்கள், பிரச்னைகள் ஆகியவற்றின் அப்பாற்பட்ட பாதையில் மோடி பயணிக்க துவங்கி விட்டார்; இந்தியாவில் மதரீதியாக சிறுபான்மையினராக உள்ள மக்கள் தங்களுக்கு எதிரானவர்களை கண்டு கொள்வார்கள்; அவர்களின் விமர்சனங்களுடன் நட்பு வைத்துக் கொள்வர். இவ்வாறு சசிதரூர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

மோடி அரசுக்கு வரவேற்பு: நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சசிதரூர், நாங்கள் அரசிடம் இருந்து இணக்கமான நிலையை கோரியதற்கு அரசு வரவேற்பு தெரிவித்துள்ளது; நாங்கள் எதிர்க்கட்சி தரப்பில் இருப்பதால் அரசு ஒப்புதல் அளிக்கும் விவகாரங்களை கண்மூடித்தனமாகவும், பிடிவாத போக்குடனும் எதிர்க்க மாட்டோம்; தனக்கு ஓட்டளிக்காதவர்களாக இருந்தாலும் அனைத்து இந்தியர்களுக்கும் தான் பிரதமராக இருப்பேன் என பிரதமர் தெரிவித்துள்ளார்; இது போன்றதொரு வார்த்தைகள் அவரிடம் இருந்து வரும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை; அநேகமாக மோடி தனது 2ம் பகுதியில் இறங்கி உள்ளார்; ஆனால் மோடியின் முதல் பாகம் மீண்டும் திரும்புமானால், பிரிவினையை ஏற்படுத்துவது போன்று அவரோ அல்லது அவரது அரசோ செய்தால் அதனை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம் v.kalathur seithi .

-தினமலர்.

Sunday, 1 June 2014


 வ.களத்தூரில் குறைந்த மின்னழுத்தத்தால் கூடுதல் மின் இணைப்பு வழங்கமுடியாத சூழ்நிலை நிலவுகிறது. இதனால் விவசாயம் மற்றும் வீடுகளுக்கு புதிய மின் இணைப்பு பெறுவதில் நம் பகுதி மக்கள் பெரும் சிரமத்தை சந்திக்கவேண்டியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு வ.களத்தூர் பகுதியில் துணைமின் நிலையம் அமைக்க அரசு முடிவுசெய்துள்ளது.

துணை மின் நிலையம் அமைய உள்ள மற்ற இடங்கள்:

பெரம்பலூர் மாவட்டத்தில் குறைந்த மின்னழுத்தத்தால் ஏற்படும் மின்வெட்டுப் பிரச்னைகளுக்கு தீர்வுகாணவும், கூடுதல் மின்இணைப்புகள் வழங்கிடவும் ஏதுவாக பேரளி, எசனை, பென்னக்கோணம், வெண்மணி, அ.மேட்டூர், நன்னை, அசூர், கூட லூர், மேட்டுப்பாளையம், நெற்குணம், வ.களத்தூர், புதுக்குறிச்சி ஆகிய 12இடங்க ளில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் துணைமின்நிலையங்கள் அமைக்க அரசுஅனுமதி வழங்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பூர்வாங்கப்பணிகள் தொடங்கி நடைபெறவுள்ளது v .kalathur seithi .


       பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கல்லாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்ட கோரிக்கைமனுவில் பாண்டகாபாடி வரை தடுப்பணை கட்ட கொரிகைவிடுக்கப்பட்டுள்ளது. நம் வ.களத்தூர் கல்லாற்று பகுதிக்கு, நம் ஊரைச்சேர்ந்த மக்கள் மனு கொடுத்தால் மட்டுமே கல்லாற்றில் மீதம் மிஞ்சியிருக்கும் மணலை காக்க முடியும் என்பதோடு, கல்லாற்றை நம்பி போர்வெல் அமைத்திருக்கும் விவசாயிகள்  மற்றும் கல்லாறை நம்பி குடிநீர் போர்வெல் அமைத்திருக்கும் வ.களத்தூர் பஞ்சாயத்து நிர்வாகமும் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுத்தால்  மட்டுமே இனி வரும் காலங்களில் நம் கிராமத்தின் குடிநீர் தேவையைநிறைவேற்றமுடியும் v.kalathur seithi .

கோரிக்கை மனுவின் விபரம்...

இதுகுறித்து தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பூ. விசுவநாதன் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அகமதுவிடம் அளித்த மனு:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ள அரும்பாவூர், பூலாம்பாடி, தொண்டமாந்துறை, வெங்கலம், அன்னமங்கலம், எசனை, வெங்கனூர், பில்லாங்குளம் ஆகிய ஏரிகளில் வரத்து வாய்க்கால்கள் மற்றும் அருகிலுள்ள குளம், குட்டைகளை தூர்வாரி சீரமைக்க வேண்டும். மலையாளப்பட்டி சின்னமுட்டுலு பகுதியில், பச்சைமலையிலிருந்து உற்பத்தியாகி வரும் கல்லாற்றின் குறுக்கே வெண்பாவூர், கிருஷ்ணாபுரம், வெங்கலம், பாண்டகப்பாடி ஆகிய கிராமங்களில் தடுப்பணைகள் கட்ட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட பகுதிகளில் தடுப்பணைகள் கட்டினால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும், கிணறுகளில் நீரூற்று பெருகி விவசாயத்துக்கும் பெரிதும் உதவியாக இருக்கும்.
எனவே, மழைக்காலம் தொடங்குவதற்கு முன் கல்லாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Thursday, 29 May 2014


தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு புதிய அரசும் பொறுப்பேற்றாகி விட்டது. இந்நிலையில் காங்கிரஸின் தோல்விக்கு என்ன காரணம் என அலசுவதானால் அது அரைத்த மாவை மீண்டும் அரைப்பதாகத்தான் இருக்கும். அதே வேளையில் பல் வேறு கருத்துக்கள், கட்டுரைகள் வந்தபின்னரும் வாராத கருத்துக்கள் இருக்கின்றனவா என்று ஆராய்ந்தால் , ஆம் இருக்கின்றன என்றுதான் தெரிகிறது. இமாலய ஊழல்கள், வரலாறு காணாத உணவுப் பொருள்விலை, பெட்ரொல் விலை என்பன  உட்பட விலைவாசி உயர்வு, பணவீக்கம், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி,  உள்நாடு வியாபார விவசாய எதிர்ப்பு மசோதக்கள், சட்டங்கள், அமைச்சர் பெருமக்களின் அலட்சியப் போக்கு, அகங்கார வார்த்தைகள் என பல்வேறு விஷயங்கள் அலசப்பட்டாலும் அவற்றிற்கான அடிப்டையிலான நான்கு முக்கிய காரணங்களை யாரும் முன்வைத்ததாகத் தெரியவில்லை. கண்ணை மறைத்துவிட்ட அந்த நான்கு முக்கிய காரணங்களை கண் முன் நிறுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.
sonia-gandhi-slams-for-targeting-pm 

1. NAC எனப்பட்ட National Advisory Committee.. அரசு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக சோனொயாவின் தலைமையில் அரசாங்கம் அங்கீகரித்து உருவாகப்பட்ட அமைப்பு. எளிதில் சொல்வதானால் மன்மோகன் தனக்குத் தானே வைத்துக் கொண்ட ஆப்பு. இந்தக் கமிட்டியில் உள்ள எந்த உறுப்பினர்களும் நேரடியாக பொது மக்கள் தொடர்பு கொண்டவர்கள் இல்லை. பல மக்கள் விரோத மசோதாக்களுக்கு இவர்களே காரணம். இந்த கமிட்டியில் ஒருவரான டீஸ்தா டெதல்வார்ட் குஜராத் கலவரத்தில் மோடி மீது அதிக பொய் பிரச்சாரம் செய்து உச்ச நீதிமன்றத்தால் கண்டனத்துக்கு உள்ளானவர். பொய் காட்சி, பொய் சாட்சி உருவாக்கி அம்பலப்படுத்தபட்டவர். இதில் உள்ள ஜான் தயால் தான் மோடிக்கு அமெரிக்க விசா மறுப்பு வழங்க காரணமானவர்.  ” ” prevention of targetted communaல் violance bill ”  இவர்களால் உருவானதுதான். இவர்களின் அழிச்சாட்டியங்களையெல்லாம் தேர்ந்தெடுக்கப்பட்ட எம் பி களும்எம் எல் ஏக் களும் இதர கட்சித் தலைவர்களும் நியாயப்படுத்த வேண்டியதாயிற்று. சோனியாவின் அந்நிய தேச வேர்களும் இந்திய அறியாமையும் அவரை என்றுமே இந்த தேசத்தை நேசிப்பவராக மாற்றவில்லை.  எனவே, இந்த தேசத்தின் புராதனத்தையோ, மாண்பையோ அவர் என்றுமே புகழ்துரைத்ததில்லை. இந்த வெறுப்பே அவரை இத்தேசத்திற்கு எதிராக சிந்திக்க வைக்கஇவர்களுக்குக்  போதுமானதாக இருந்ததது. தேசத்தை புரிந்த அமைச்சர்கள் இருந்தாலும் கூட அவர்களும் தேர்ந்தெடுக்கப்படாத இந்த நிழல் அமைச்சரவையான என். ஏ.சி.க்குத்தான் அடிபணியும் நிலை.  ஆக, சோனியாவின் இந்த shadow cabinet தான் தோல்விக்கு முதல் காரணம்.

2. இரண்டாவது  முக்கிய காரணம் பொதுமக்களோடு சற்றும் தொடர்பில்லாத,  அவர்களது அத்தியாவசியத் தேவைகளை சற்றும்  புரிந்து கொள்ளாமல் அவர்களை அவமதித்து வந்த திட்டக் கமிஷன் துணைத் தலைவர் அலுவாலியா. கிராமப்புறத்தில் நாளொன்றுக்கு ரூபாய் 26ம் நகர் புறத்தில் ரூ 32 ம் சம்பாதித்தாலே போதும் அவர்கள் வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்கள் என இவர் அறிவிக்க…, ஆமாம் ஆமாம் ஒரு ரூபாய்க்கு முழுசாப்பாடு கிடைக்கிறது, 5 ரூபாய்க்கு கிடைக்கிறது, 12 ரூபாய்க்கு கிடைக்கிறது என்றெல்லாம் நியாயப்படுத்தினார்களே அப்போதே காங்கிரஸ் கட்சி மக்களிடம் இருந்து அந்நியப் படுத்தப்பட்டு விட்டது. கழிப்பறை இல்லாத நாடு என்று காங்கிரஸ் கட்சி அமைச்சர்களே ஓங்கிப் பிரச்சாரச் செய்துவந்த போது, சுமார் 70 லட்சம் செலவில் திட்ட கமிஷன் அலுவலுகத்திற்கு மட்டுமே என கழிப்பறை கட்டியதுதான் இவர் சாதனை.

3. மக்களோடு தொடர்பற்ற NAC, மக்களோடு தொடர்பற்ற திட்ட கமிஷன், என இந்த வரிசையில் மக்களோடு தொடர்பற்ற பிரதமர் மூன்றாவது, முக்கிய காரணம். எந்த நிலையிலும், பிரதமர் மன்மோகன்சிங் அதிகாரம் படைத்தவராக ஆகிவிடக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி பார்த்துக் கொண்டது. எனவே அவரையும் பொதுமக்களோடு தொடர்பற்றவாராகவே இருத்திவந்ததது. 2004 ல் அவர் பிரதமர் ஆக்கப்பட்ட சூழல் வேறாக இருந்தாலும் அதன் பின் வந்த காலங்களில் அவரோடு மக்கள் தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கலாம். 2009 பொது தேர்தலில் அவரைப் போட்டி இட வைத்திருக்கலாம். சோனியா அம்மையாரோ, அவரது என் ஏ சி யோ மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியின் அனைத்துத் தலைவர்களும் அவர் பலவீனமற்றவாராக இருப்பதையே விரும்பினர். தேசத்தைப் பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள ஊடகங்கள் வரை பலவீனாமான பிரதமைரைத் தான் விரும்பின.  அப்படியானால் தானே நீரா ராடியா முதல் பர்காதத் வரை அரசில் புரோக்கர் செய்ய முடியும். நன்றி உணர்வுள்ள பிரதமரும் ” இரண்டு பவர் செண்டர் ” தேவையில்ல…அது அவர்களாகவே இருக்கட்டும் ” என மனம் திறந்ததை அவரது முன்னாள் ஊடக ஆலோசகர் சஞ்சய் பாரு தனது accidental prime minister புத்தகத்தில் தெரிவித்துள்ளார். 2009 பொதுத் தேர்தலின் போது அத்வானி தனது பிரச்சாரத்தில் தொடர்ந்து மன்மோகன்சிங் தான் இதுவரை உள்ள பிரதமர்களில் மிகவும் பலவீனமானவர் எனக் கூறி வந்த போது அதை தனிநபர் விமர்சனமாகக் கருதி வாக்காளர்கள் பாஜகை நிராகரித்ததோடு அத்வானியையும் கண்டித்தனர். ஆனால் 2009 ற்குப் பிறகு சமூக ஊடகங்கள் பிரபலமான நிலையில் அத்வானி கூறிய உண்மை வெளிப்பட்டது. ஒரே ஒரு முறை அனைத்து பத்திரிகை ஆசிரியர்களையும் அவர் பேட்டிக்காக சந்தித்ததே மாபெரும்  செய்தி ஆயிற்று. தொடர்ந்து அது போல் சந்திப்பேன் என அவர் கூறினாலும் அதன்பின் அது போன்று ஒரு சந்திப்பு நடைப்பெறவே இல்லை. இதன் காரணாங்களா பலவீனமான, செயல்தன்மையற்ற, மக்களோடு தொடர்பற்ற பிரதமர் மீதான கோபம் இந்த அரசு வெளியேறப்பட மூன்றாவது, முக்கிய காரணம் ஆயிற்று.

4. கிராமப்புறங்களில் ஒரு பழமொழி உண்டு. ” சும்மா போற ஓணான எடுத்து மடில உட்டுட்டு குத்துதே..குடையுதேன சொன்ன மாதிரி ” என்பார்கள். சிறுபாண்மை ஓட்டுக்காக ” இந்த நாட்டின் இயற்கை வளங்களிம் முதல் உரிமை மதச் சிறுபாண்மையினருக்கே ” என்ற பிரதமர், ஹிந்துகளை பயங்கரவாதிகளாகக் காட்ட எண்ணி ஜோடிக்கப்பட்ட வழக்குகள் ( இன்று வரை அவற்றில் ஒன்று கூட நீருபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ), அமைச்சர் சிதம்பரத்தின் ” காவி பயங்கரவாதம் ” என்ற அரிய கண்டு பிடிப்பு, அந்நிய நாட்டு ஊடகங்களிடம் ” உலகு தழுவிய ஜிகாதிய பயங்கரவாதம் அல்ல, தேசமெங்கும் பரவியுள்ள பெரும்பாண்மை பயங்கரவாதமே இந்தியாவிற்கு ஆபத்து ” என ஜிகாதிகளுக்கு நற்சான்று வழங்கி ஹிந்துமக்களை பயங்கரவாதியாக சித்தரித்த ராகுல், எல்லாவற்றிற்கும் மேலாக ” இந்தத் தேர்தல் பாஜக வுக்கும் காங்கிரஸிக்குமான தேர்தல் அல்ல, ஆர் எஸ் எஸிக்கும் காங்கிரஸூக்குமான தேர்தல் எனக் கூறி ” இதோடு ஆர் எஸ் எஸ் ஒழிந்தது, ஹிந்து தேசியம் பேசுவோர் ஒழிந்தனர் ” எனப் பல்வேறு  நடவடிக்கைகளால்,  அன்றாட அரசியலிலும் தேர்தல் அரசியலிலும் தலையிடாத ஆர்..எஸ்.எஸ். இயக்கத்தை தேர்தல் களத்தில் இறக்கியது தோல்விக்கான நான்காவது பெரும் காரணம். அண்ணால் காந்தியும், ஏன் நேருவும் இந்திராவும் கூட தேசத்திற்கு அவசியம் தேவையான இயக்கம் என்று உணர்ந்து உரைக்கப்பட்ட ஆர் எஸ் எஸ் இயக்கத்தை ஒழிக்க நினைத்தவர்கள் ஒழிந்து போய் இருக்கிறார்கள். இதுதான் உண்மை.

நன்றி- http://www.tamilhindu.com 
நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் வகையில், முக்கியமான 10 திட்டங்கள் குறித்து பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார்

மோடியின் பத்து அம்ச திட்டம்....

01. அதிகாரத்துவத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துதல்
 02. புதுமையான யோசனைகளை வரவேற்பதுடன், அதிகாரிகள் சுதந்திரமாக பணியாற்ற அதிகாரம் அளித்தல்.
03. கல்வி, சுகாதாரம், குடிநீர், மின்சாரம் மற்றும் சாலைகள் தொடர்பான பிரச்னைகளுக்கு முன்னுரிமை.
04. அரசின் இணைய ஏலத்தில் வெளிப்படை தன்மையை ஊக்குவித்தல்.
05. அமைச்சகங்களுக்கிடையே ஏற்படும் பிரச்னைகளை களைய புதிய அமைப்பு.
06. அரசு நிர்வாகத்தில், மக்கள் தொடர்பான விஷயங்களுக்கு தனி அமைப்பு.
07. பொருளாதாரம் தொடர்பான பிரச்னைகளுக்கு முன்னுரிமை.
08. உள்கட்டமைப்பு மற்றும் முதலீடுகள் சீரமைக்க நடவடிக்கை.
09. சரியான கால இடைவெளியில் கொள்கைகளை அமல்படுத்த நடவடிக்கை. 10. அரசு கொள்கைகள், நிலைத்தன்மை மற்றும் நிலைநிறுத்தும் திறன் கொண்டதாக இருக்க ஏற்பாடு .
 vkalathur seithi .

Tuesday, 27 May 2014


மதிப்பெண் சான்றிதழ்களை லேமினேஷன் செய்ய வேண்டாம் என்று மாணவர்களை அரசுத் தேர்வுகள் இயக்குனர் தேவராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
அரசுத் தேர்வுகள் துறையால் வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களை மாணாக்கர்கள்  செய்வதாக தெரிய வருகிறது. லேமினேஷன் செய்யும்பொழுது சான்றிதழ்கள் பழுதடைய நேரிடுகிறது. மேலும் மதிப்பெண் சான்றிதழில் பிறந்த தேதி, பெயர் மாற்றம் திருத்தம் செய்ய நேரிடும் போது லேமினேஷன் செய்திருந்தால் திருத்தம் செய்ய கடினமாக உள்ளது. வெளிநாடு செல்லும் மாணாக்கர்களின் மதிப்பெண் சான்றிதழ்களின் பின்புறம் அரசு முத்திரை வைக்க லேமினேஷனிலிருந்து சான்றிதழை பிரிக்கும் போது சான்றிதழ் சிதைய நேரிடுகிறது. எனவே, மதிப்பெண் சான்றிதழ்களை மாணாக்கர்கள் லேமினேஷன் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
- என்று கூறியுள்ளார v.kalathur seithi.

Monday, 26 May 2014


மொபைல் போன் வாடிக்கையாளர்கள் விரைவான இணையதள சேவை பெறும் வகையில், குறைந்தபட்ச இணையதள வேகத்தை, தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) நிர்ணயிக்க உள்ளது.தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு, '2ஜி' மற்றும் '3ஜி' தொழில்நுட்பத்தில் இணையதள சேவைகளை வழங்கி வருகின்றன.

மேற்கண்ட பிரிவுகளில் வழங்கப்படும் இணையதள சேவை குறிப்பிட்ட வேகத்தில் இல்லை எனவும், தகவல்களை பதிவிறக்கம் செய்யும் வேகம் மிகவும் குறைவாக உள்ளதாகவும் மொபைல் போன் வாடிக்கையாளர்களிடமிருந்து 'டிராய் அமைப்பிற்கு அதிகளவில் புகார்கள் வந்தன.இது குறித்து, 'டிராய்' அமைப்பு விசாரணை மேற்கொண்டது. அதன் அடிப்படையில், தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்ச வேகத்தில் இணையதள சேவை வழங்குவது கட்டாயமாக்கப்பட உள்ளது v.kalathur seithi.

-thinamalar.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் ரூ. 50 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்தைத் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனக் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
வேப்பந்தட்டையில் வாடகைக் கட்டடத்தில் இயங்கிவரும் சார் பதிவாளர் அலுவலகத்தில், வேப்பந்தட்டை வட்டத்திற்குள்பட்ட அரும்பாவூர், பூலாம்பாடி பேரூராட்சிகள் உள்பட 29 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில் சுமார் 90-க்கும் மேற்பட்ட கிராமப் பொதுமக்களும், விவசாயிகளும் தங்களுக்கு தேவையான பட்டா, சிட்டா அடங்கல், மனைப்பட்டா பதிவு உள்ளிட்ட பல்வேறு வகையான ஆவணங்களுக்கு சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று வருகின்றனர்.
சார் பதிவாளர் அலுவலகத்திற்குச் சொந்தக் கட்டடம் கட்டித் தர வேண்டுமென எழுந்த கோரிக்கையைத் தொடர்ந்து, வேப்பந்தட்டையில் உள்ள உழவர் சந்தை அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு ரூ. 50 லட்சத்தில் 2 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய கட்டடம் கட்டும் பணி டிசம்பர் 2013-ல் நிறைவடைந்தது. ஆனால், கட்டி முடிக்கப்பட்டு 5 மாதங்கள் ஆன நிலையிலும் அது இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் இரவு நேரங்களில் மது அருந்துதல் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெறுகின்றன. மேலும், அங்குள்ள கண்ணாடிகளையும் சமூக விரோதிகள் உடைத்துள்ளனர்.
எனவே, வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் சார் பதிவாளர் அலுவலகத்தால் அரசுக்கு ஆண்டுதோறும் பல லட்சம் இழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க கட்டப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்தை திறக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்வதோடு, சமூக விரோதச் செயல்களை கட்டுப்படுத்த சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை v.kalathur seithi.

-thinamani.
இது இளைஞர்களின் காலம் என நன்றாக புரிந்துள்ள மோடி பதவியேற்ற சில நிமிடங்களில் மக்களின் குறைகள் மற்றும் ஆலோசனைகளை கூற ஒரு பிரத்தியோக இணையதளத்தை துவக்கியுள்ளார்..
 http://pmindia.nic.in/ 


இத்தளமானது ஏற்கனவே மோடி அவர்களால் உபயோகப்படுத்தப்பட்டு வரும் முகநூல் மற்றும் ட்விட்டர் இணையதளங்களையும் இதனுடன் இணைத்துள்ளார். பிரதமருடன் நேரடியாக தொடர்புகொள்ள எளிய ஒரு தொடர்பு சாதனம் ,பயன்படுத்திக்கொள்வோம்.

பாரதத்தின் புதிய பிரதமர் மோடி அவர்களுக்கு எமது மனமகிழ் வாழ்த்துக்கள்...


Friday, 23 May 2014


=============================
10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் 2 மற்றும் 3-வது இடங்களை பெற்று பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. இதில், பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி கே. அகல்யா 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றார். மாணவி கே. அகல்யா, பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள வடக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த காமராசு - யசோதா தம்பதிகளின் மகள் ஆவார். இவர், டாக்டர் ஆவதே தனது விருப்பம் என்றார்.
பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆர். பார்க்கவி 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாமிடம் பெற்றார்.
மாணவி ஆர். பார்க்கவி, லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் - வெண்ணிலா தம்பதிகளின் மகள் ஆவார். இவர் டாக்டர் ஆவதே தனது விருப்பம் என்றார்.
மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவிகள் கே. அகல்யா, ஆர். பார்க்கவி ஆகியோரை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம். சிவசுப்ரமணியம் இனிப்பு வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில், கல்வி நிறுவனங்களின் செயலர் எம். விவேகானந்தன், பள்ளித் தலைமை ஆசிரியர் கோமதி, உதவி தலைமை ஆசிரியர் கலைச்செல்வி மற்றும் மாணவிகளின் பெற்றோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர் v.kalathur seithi .


V.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் R.நிவேதா என்ற மாணவி 456 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், P.புவனேஸ்வரி என்ற மாணவி 451 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும் , R.ஸ்ரீ மரிஷ் என்ற மணவி 449 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

இவர்கள் பாட வாரியாக பெற்ற மதிப்பெண்கள்:

முதல் இடம் : நிவேதா
தமிழ் :95
ஆங்கிலம்:82
கணிதம் : 84
அறிவியல் : 99
சமூக அறிவியல் : 96
மொத்தம் : 456


இரண்டாம் இடம் : புவனேஸ்வரி
தமிழ் : 92
ஆங்கிலம்: 79
கணிதம் : 89
அறிவியல் : 93
சமூக அறிவியல் : 98
மொத்தம் : 451


முன்றாம் இடம் : ஸ்ரீமரிஷ்
தமிழ் : 94
ஆங்கிலம்: 75
கணிதம் : 90
அறிவியல் : 96
சமூக அறிவியல் : 94
மொத்தம் : 449

400 மதிப்பெண்களுக்கு மேல் 17 மாணவ மாணவிகள் பெற்றுள்ளனர்.

பள்ளியின் சராசரி தேர்ச்சி விகிதம் :84.5.

Tuesday, 20 May 2014

v.kalathur வ.களத்தூரில்  நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பெற்ற பெரும் வெற்றியை மக்களோடு மக்களாக கொண்டாடும் விதத்தில் அன்னதானம் வ.களத்தூர் மேட்டுச்சேரியில் பெரம்பலூர் நகர கழக செயலாளர் RTR என அழைக்க்கப்படும் RT ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.


இன்று காலை நடைபெற்ற அன்னதான விழாவில் 1500 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பசியாறினார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை வ.களத்தூர் ஊராட்சி கழக கிளைச்செயலாளர் S P ரவி (காவ்யா ரவி) அவர்கள் முன்னின்று செய்தார்கள். விழாவில் S . கண்ணுசாமி, வேப்பந்தட்டை ஒன்றிய அதிமுக கழக செயலாளர், கந்தசாமி , கழக கிளை செயலாளர், M . ஜெயச்சந்திரன் வ.களத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் மற்றும் அதிமுக தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்.



Sunday, 18 May 2014

 ஒரு வருடத்திற்கு முன்பு  பாஜக மற்றும் இந்து அமைப்பைச்சேர்ந்த தலைவர்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டபோது தமிழக முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் வரும் காவல்துறை இந்த படுகொலைகளை கந்துவட்டி, கள்ளக்காதல், முன்விரோதம் நில அபகரிப்பு என்ற கட்டுக்கதைகளை பரப்பிவிட்டு கிடைத்தவர்கள் மீது கேசைபோட்டு வழக்கை முடிக்க நினைத்தது. வேலூர் அரவித் ரெட்டி முதல் சேலம் ரமேஷ் ஜி வரை இதுதான் நடந்தது.

 நடந்துமுடித்தநாடாளுமன்ற தேர்தல் பிரச்சார நேரத்தில் ஆரம்பம் முதலே பாஜக மீது தாக்கி பேசாமல் இருந்த காரணம் இவர்களெல்லாம் எங்கு வெற்றிபெறப்போகிரர்கள்  நினைப்புதான்.. ஆனால் உளவுத்துறையின் அறிக்கையில் பாஜக கூட்டணி பெரும் வெற்றிபெறும் என்று கூறியதன் காரணமாக பாஜகவை தாக்கி பேச ஆரம்பித்தார். மேலும் TNJ அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறியபிறகு துலுக்கனின் ஒட்டு பறிபோய்விடும் என்று முஸ்லிம்களை சமாதானப்படுத்த மோடியை தாக்கி பேசுகிறார்.

இந்து அமைப்பைச்சேர்ந்த அனுதாபிகள் அதிமுக மற்றும் பாஜக வை  இரட்டைக்குழந்தைகள் போன்று பாவிக்க காரணம் பாஜக வின் குறிப்பாக பாஜக தலைவர்களின் அதிமுக பாசம்தான் காரணம் . அதனால்தான் பாஜகவை ஆதரிக்க முடியாத காலக்கட்டங்களில் அதிமுகவை ஆதரிக்கிறார்கள். 

ஆனால் இந்து சிந்தனைகொண்ட தமிழக மக்களை தேவைக்கு ஏற்றாற்போல் ஜெயலலிதா பயன்படுத்திகொள்கிறார், முஸ்லிம்களின்  7 சதவீத இடஒதுக்கீட்டிற்கு கடிதம் எழுதும் ஜே .. TNJ  கூட்டணிக்குத்தான் ஆசைப்பட்டாரே தவிர பாஜகவோடு கூட்டணியை எள்ளளவும் விரும்பவில்லை.  இந்து சிந்தனை கொண்டவர் என்ற முகத்தை வைத்துக்கொண்டு நம்மை ஏமாற்றுகிறார்.

தமிழக பாஜக என்று அதிமுக எதிர்ப்பு நிலை எடுக்கிறதோ அன்றுதான் வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைக்கும். இது தெரிந்தும் அதிமுக கூன்பாண்டிகளுக்கு இணையாக பாஜக தலைவர்கள் அதிமுக வெற்றிப்  புராணம் பாடுகிறார்கள். பாஜக கூட்டணி பல இடங்களில் தோற்க காரணமாக இருந்தது ஜெவின் பணபட்டுவாடா எனத்தெரிந்தும்  ராதாகிருஷ்ணன் ஜெவின் வெற்றிக்கு அவரின் நிவாக திறமை என்று பாராட்டுகிறார்.

மாநிலங்களைவையில் அதிமுக ஆதரவு தேவை என்பதற்காக பாஜக வின் தேசிய தலைமை ஜெவிற்கு அனுதாபம் காட்ட முனையலாம். ஆனால் தமிழகத்தில் பாஜக வளரவேண்டும் , 2016 சட்டசபைத்தேர்தலில் சிறந்த ஒரு வெற்றியைபெற, அதிமுக எதிர்ப்பு மனநிலையை எடுத்தாக வேண்டிய கட்டாய சூழ்நிலையை தமிழக பாஜக தலைவர்கள் தேசிய தலைமைக்கு உணர்த்தியே ஆகவேண்டும். 

ஆனால் நிலைமை வேறுவிதமாக உள்ளது..

///தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளர், முரளீதர ராவ் பேட்டி: 

லோக்சபா தேர்தலில், தமிழகத்தில், அ.தி.மு.க., அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், பா.ஜ.,வுடன் பல விஷயங்களில், அக்கட்சிக்கு ஒத்த சிந்தனையே உள்ளது. எனவே, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைப்பது குறித்து, பிந்தைய நாட்களில், கட்சி மேலிடம் முடிவு எடுக்கும்.////


தி.மு.க. மற்றும் அ.தி.மு. க.வுக்கு பல்லக்கு தூக்குவதுடன், ஜெ. வும் மோடியும் நண்பர்கள் என்று பொன். ராதாகிருஷ்ணனும், நாளை ஜெ. வுடன் பா.ஜ.க கூட்டணி சேரலாம் என்று முரளீதரராவும் சொல்கிறார்கள் என்றால், அந்த கட்சிகளுக்கு "பகுதி நேர ஊழியர்களாக(அடிமைகளாக)" செயல் படுகிறார்கள் என்றால் பா.ஜ.க. கட்சி தொண்டன் மட்டும் முழுநேர பா.ஜ.க. ஊழியனாக இருக்க வேண்டுமோ?

மோடி வேறு அனைவருக்கும் எதிரி என்பது போல், ஜெ. மற்றும் மோடியின் நட்பை பற்றி, தான் ஜெயித்த பிறகு மெச்சும் பொன். ராதாகிருஷ்ணன் தேர்தலுக்கு முன்னர் மெச்சிக் கொண்டிருக்க வேண்டியது தானே! அல்லது தேர்தலில் போட்டியிடாமல் அ.தி.மு.க. பிரச்சாரம் செய்தது போல் "ஜெ. க்கு போடும் ஓட்டு மோடிக்கு போடும் ஓட்டு" என்று கூன்பாண்டியாய் மாறி பிரச்சாரம் செய்திருக்க வேண்டியது தானே! இன்று பொன்.ராதாகிருஷ்ணன் மெச்சுவது போல் ஜெ. மோடி நட்பை பா.ஜ.க தொண்டன் மெச்சியிருந்தால் ராதாகிருஷ்ணன் வென்றிருப்பாரா?

கட்சித்தலைமை வேறு கட்சிகளுக்கு பல்லக்கு தூக்குவது போல் இங்குள்ள தொண்டர்கள் மாறிவிட்டால் பா.ஜ.க.விற்கு போஸ்டர் ஒட்டவும் ஆள் இல்லாமல் போய் விடும். இது எச்சரிக்கை!

மோடி மற்றும் ஜெ. நட்பை பாராட்டி புழங்காகிதம் ஆக பா.ஜ.க வின் தலைவராக இருக்க வேண்டிய அவசியமில்லை.


 மலைச்சாமிக்கு இருக்கும் மானம் ரோஷம் கூட பா.ஜ.க. தலைவர்களுக்கு இல்லாமல் போனதே! 


தமிழக பாஜக வை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்....


கட்டுரை உதவி-  சுந்தரபத்மன் தமிழ் எலக்ட்ரிக்கல் டெக்னீஷியன்.

Saturday, 17 May 2014


தமிழகத்தில் முக்கிய எதிர்கட்சியைப் போல ஆனது நோட்டா. மற்ற கட்சிகளை விட அதிக அளவில் வாக்குகளை பெற்று, நோட்டா அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்தியாவில் முதன்முறையாக 'நோட்டா' பொத்தான், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தான் அறிமுகமானது.
ஆனால் தேர்தல் ஆணையம் எதிர்பார்த்ததை விட அதிமான எண்ணிக்கையில் இந்திய மக்கள் நோட்டாவுக்கு தங்கள் வாக்குகளை வழங்கியுள்ளனர்.
வாக்குப்பதிவு இயந்திரத்தின் கடைசி பொத்தானாக, ’மேலே உள்ள யாரும் இல்லை’ (None Of The Above) என்பதே நோட்டாவாகும். புதிய வாக்காளர்கள், இளைய தலைமுறை, கட்சிகள் மீது பெரிய அளவில் அதிருப்தி கொண்டிருப்பவர்கள் ஆகியோர் வாக்களிக்காமல் இருப்பதை உணர்ந்த தேர்தல் ஆணையம், இந்த பட்டியலில் வரும் மக்களின் சில பகுதியினராவது நோட்டாவை பயன்படுத்துவார்கள் என்ற நோக்கத்தில் இதனை அறிமுகம் செய்தது.
ஆனால், தேர்தல் ஆணையம் மட்டுமல்ல, அனைத்து தரப்பினரையும் ஆச்சர்யம் அடையச் செய்யும் அளவுக்கு நாடெங்கிலும் நோட்டா பதிவாகியுள்ளது.
நாட்டில் ஏற்கனவே கட்சிகள் எண்ண முடியாத அளவில் இருக்கும்போது, இந்த பொத்தானுக்கு வேலை இல்லை என்று நினைத்தவர்கள் எல்லாம் வாயடைத்துள்ளனர். மாற்று கட்சி என்று கூறி கொண்டு, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகக் கூறிய கட்சிகளை எல்லாம் ஓரம் தள்ளிவிட்டு, பல வாக்காளர்கள் நோட்டாவை தேர்வு செய்துள்ளனர் v.kalathur seithi .

-தி இந்து.