பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குரூப் 2 தேர்விற்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை (பிப். 12) தொடங்குகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தரேஸ் அகமது திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 2,229 உதவியாளர் பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளன. இந்தப் பயிற்சி வகுப்பானது புதன்கிழமை (பிப். 12) காலை 10 முதல், அனைத்து நாள்களிலும் தேர்வு முடியும் வரை நடைபெற உள்ளது. இதில், பட்டப் படிப்பு முடித்த அனைவரும் பங்கேற்கலாம்.
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்காக நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பில் பங்கேற்ற 150 நபர்களுக்கும் மேலாக வெற்றி பெற்று, பல்வேறு துறைகளில் அரசு பணியாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர். பயிற்சி வகுப்பானது அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வில் வெற்றி பெற்ற அரசு பணியாளர்களை பயிற்றுநர்களாக கொண்டு நடத்தப்படுகிறது. பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விரும்புவோர் 9842196910 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
நன்றி-தினமணி
0 comments:
Post a Comment