பெரம்பலூர், : பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் 40பேர் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடக்கும் தேசியஅளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் பங்கேற்க உள்ளனர்.1963ம்ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் நகரில் தேசிய அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. அதன்பிறகு தேசிய அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில் 50ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது, அதே நாக்பூர் நகரில் தேசிய அளவி லான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் மத்திய அரசால் நடத்தப்படுகிறது.
இந்தக் கண்காட்சியில் பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து நெல், பருத்தி, கரும்பு, மக்காச்சோளம், மஞ்சள், மரவள்ளி, பயிர்வகைகள், கீரைவகைகள் உள்ளிட்டவற்றில் திறம்பட சாகுபடி செய்துவரும் விவசாயிகள், ஒன்றியத்திற்கு 10பேர்என மாவட்டஅள வில் 40பேர் தேர்வுசெய்யப்பட்டு, தேசிய அளவிலான கண்காட்சி மற்றும் கருத்தரங் கில் பங்கேற்க வேளாண்மைத்துறை அலுவலர் துணையுடன் அனுப்பி வைக்கப்பட்டுள் ளனர்.
இதில் பெரம்பலூர் வட்டாரத்திலிருந்து கோனேரிப்பாளையம் பெருமாள், அம் மாப்பாளையம் புருஷோத்தமன், துரைராஜ், கீழக்கரை செந்தில்குமார், செங்குனம் முத்தமிழ்செல்வன், எசனை செல்வக்குமார், களரம்பட்டி சுந்தரராஜ், குரும்பலூர் செல் வக்குமார், பெரம்பலூர் ஹரிஹரசுதன், துறைமங்கலம் தேவராஜ், சத்திரமனை செல்வ ராஜ், புதுநடுவலூர் சின்னத்தம்பி ஆகியோரென 4வட்டாரங்களில் இருந்து 40பேர்தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நாக்பூர் நகரில் அமைக்கப்பட்டுள்ள தேசிய அளவிலான வேளாண் கண்காட்சியில் கலந்துகொண்டு, சாகுபடிக்கான வழிமுறைகள், வேளாண் மற்றும் அறிவியல் தொழில் நுட்பங்கள், நவீன யுக்திகள், அரசாங்கத்தால் வழங்கப்படும் நிதியுதவிகள், உற்பத்திப் பொருளை தரம்பிரிப்பது, விற்பனை செய்வது உள்ளிட்ட சாகுபடி யுக்திகளை நேரில் கண்டறிந்தும், கேட்டறிந்தும், குறிப்பெடுத்தும் வரவுள்ளனர். இவர்க ளுக்கான போக்குவரத்து செலவுகளை வேளாண்மைத்துறையே மேற்கொண்டு வழங்கி யுள்ளது.
பயிற்சியில் கலந்துகொண்ட விவசாயிகளைக் கொண்டு, வட்டாரம் வாரியாக அனைத்து விவசாயிகளுக்கும் தாங்கள் கேட்டறிந்த, கண்டறிந்த வடஇந்திய, தென் னிந்திய சாகுபடித் தொழில் நுட்பங்களை விளக்கிக்கூற ஏற்பாடு செய்யப்படுமென வேளாண்மைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
நன்றி-தினகரன்.
0 comments:
Post a Comment