வ.களத்தூர்அருகே கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2.,700 க்கும் மேற்பட்ட கோழிகள் தீயில் கருகி பலியானது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை -வ.களத்தூர் சாலையில் உள்ள தொண்டப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர்(35). இவர் தொண்டப்பாடி& அனுக் கூர் சாலையிலுள்ள அவரது வயலில் கோழிப்பண்ணை அமைத்து அதில் ஆயிரக்கணக்கான கறிக்கோழிகளை யும், முட்டைக்கோழிகளை யும் வளர்த்து வந்தார்.இந்நிலையில் கோழி பண்ணை யை சுற்றி முட்புதர் மண்டி கிடந்ததால் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்து வந்தது. இதனால் நேற்று மதியம் இவரது கோழி பண்ணைக்கு அருகில் உள்ள முட்புதர்களை அகற்றிட அவற்றிற்கு தீ வைத்தனர்.
இந்த தீயில் இருந்து எதிர்பாராத விதமாக வந்த தீப்பொறி கோழிப்பண்ணைக்குள் விழுந்தது. இதில் கோழிப்பண்ணையில் தீ பற்றி மள மள வென பண்ணை முழுவதும் பரவி எரிந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஜெய்சங்கர் , பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதற்குள் தீ வேகமாக பரவி கோழிப்பண்ணையில் இருந்த சுமார் 2 ஆயிரத்து 700க்கும் மேற்பட்ட கோழிகள் தீயில் கருகி பலியானது.
இதனி டையே தீ விபத்து குறித்து தகவல் தெரிந்ததும் பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் ஜெகதீஷ் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். மே லும் இந்த விபத்து குறித்து வ.களத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
-தினமணி.
0 comments:
Post a Comment