பெரம்பலூர் அருகே கன்றுக்குட்டியுடன் பசுவைத் திருடிய வாலிபரை பொதுமக்கள் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
பெரம்பலூர் மாவட் டம், எளம்பலூர் அடுத்த உப்போடை பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் தனக்குச் சொந்தமான 4 பசு மாடுகள், 2 கன்றுக்குட்டிகள் ஆகியவற்றை வீட்டுக்கு பின்பக்கம் கட்டி வைத்திருந்தார். நேற்று அதிகாலை 2.30 மணியள வில் எழுந்து வந்து பார்த்த போது, பசு மாடு ஒன்றையும், கன்றுக்குட்டியையும் காணவில்லை. இதனால் பதறிய அவர் சுற்றுப்பகுதியில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனிடையே பெரம்பலூர் அடுத்த செல்வபுரம் பகுதியில் உள்ள ரோவர் இன்ஜினியரிங் கல்லூரி பின்புறம் ஒருவர், பசு மற் றும் கன்றுடன் அதிகாலை 3 மணியளவில் நடந்து சென்ற கொண்டிருந்தார். அப்போது பசு தொடர்ந்து கத்தியது சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்த சிலர் எழுந்து வந்து அவரை விசாரித்தனர். அப்போது அவர் எளம்பலூரை சேர்ந்த ராமசாமி என்பவரிடம் அவற்றை விலைக்கு வாங் கித் வருவதாகக் கூறி னார். இருந்த போதும், அவ ரது பேச்சு முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், இதுகுறித்து எளம்ப லூரை சேர்ந்தவர்களுக்கு போன் செய்து கேட்ட போது, ராமசாமி என்ற பெயரில் யாரும் இல்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து, பசுவை யும், கன்றுக்குட்டியுடன் வந்த அந்நபரை பொதுமக் கள் "முறையாக" விசாரித்த போது, அவர் சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள வடக்குமரை கிராமத்தை சேர்ந்த முருகன் (32) என்பதும், பசுவையும், கன்றுக்குட்டியையும் அவர் திருடி வந்ததும் தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவரை கட்டி வைத்து சரமாரியாக தர்மஅடி கொடுத்தனர்.
பின்னர், அவர்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த பெரம்பலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து, அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீசார் விசா ரணை நடத்தி வருகின்ற னர்.
இதுகுறித்து கேள்விப்பட்ட மாட்டின் உரிமையாளர் ஆறுமுகமும் காவல் நிலையம் சென்று மாடு, கன்றுக்குட்டியை மீட்டு சென்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பட உதவி-வசந்த ஜீவா , தினமணி செய்தி.
0 comments:
Post a Comment