பெரம்பலூர், : கல்விக்கடன் வழங்கும் முகாமுக்கான விண்ணப்ப படிவங்ளை வங்கிக் கிளைகளில் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளின் உயர் கல்விக்காக கலெக்டர் அலுவலகத்தில் இம்மாதம் 26ம் தேதி முதற்கட்டமாக கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இம் முகாமில் 21 வங்கிகளைச் சேர்ந்த 68 வங்கிக் கிளைகள் கலந்துகொண்டு, பெரம்பலூர், வேப்பந்தட்டை வட்டாரங்கள் மற்றும் குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி பேரூராட்சி பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கடன் வழங்க உள்ளன.
இதற்கான விண்ணப்பங்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்டம், புதுவாழ்வுத் திட்டம், பெரம்பலூர், வேப்பந் தட்டை, வேப்பூர், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வழங்கப்பட்டு வரு கின்றன.
பெரம்பலூர், வேப்பந்தட்டை பகுதிகளில் செயல்பட்டு வரும் அனைத்து வங்கி கிளைகளிலும் விண்ணப்பங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய ஏதேனும் உதவி தேவைப்படுபவர்களுக்காக ஊராட்சிஒன்றிய அலுவலகங்களில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முகாம் குறித்த மேலும் விவரங்களுக்கு, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளரை 94422 71994 என்ற செல்போன் எண்ணிலும், முகாம் ஒருங்கிணைப்பாளரை 97885 32233 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் தரேஷ் அஹமது வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
-தினகரன்.
0 comments:
Post a Comment