Tuesday, 18 February 2014

பெரம்பலூர், : பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் பெரம்பலூரில் நாளை மறுதினம் (20ம் தேதி) நடைபெற உள்ளது.
 இதுகுறித்து கலெக்டர் தரேஸ் அஹமது வெளியிட்ட செய்திக்குறிப்பு:  பெரம்பலூரில் உள்ள கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் நாளை மறுதினம் (20ம் தேதி) காலை 10 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில் வேளாண் சம்பந்தமாக நீர்ப்பாசனம், இடுபொருள், வேளாண் இயந்திரம் மற்றும் வேளாண் மேம்பாட்டுத் திட்ட முறையீடுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனவே, பெரம்பலூர் மாவ ட்ட விவசாயிகள் அனை வரும் தவறாது இக்கூட்டத் தில் பங்கேற்பதுடன் தங்கள் பகுதியில் நிலவும் குறைபாடுகள் ஏதும் இருப்பின் அதுகுறித்து மனுவாக அளித்து தீர்வு காணலாம் என்றார்.

நன்றி-தினமணி

0 comments:

Post a Comment