பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல்
கல்லூரியில், பிப். 26ம் தேதி நடைபெறும் 14-வது பட்டமளிப்பு விழாவில்,
தமிழக ஆளுநர் ரோசய்யா பங்கேற்க உள்ளார் என்றார் தனலட்சுமி சீனிவாசன் கல்வி
குழுமங்களின் தலைவர் அ. சீனிவாசன்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 14-வது பட்டமளிப்பு விழா பிப். 26ம் தேதி மாலை 5.10 மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இவ்விழாவில், தமிழக ஆளுநர் ரோசய்யா பங்கேற்று இளங்கலை, முதுகலை, ஆய்வியல் நிறைஞர்கள் உள்பட 1,151 மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசுகிறார்.
இதில், உயிர்வேதியியல் துறை மாணவி சத்யா பல்கலைக் கழக அளவில் முதலிடத்தையும், 62 மாணவிகள் பல்கலைக் கழக அளவில் தர வரிசைகள் பெற்றுள்ளனர். மேலும், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஷ் அஹமது பங்கேற்று வாழ்த்துரை வழங்க உள்ளார். விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்றார் அவர்.
பேட்டியின்போது, செயலர் பி. நீலராஜ், துணைத் தலைவர் சீ. கதிரவன், இயக்குநர்கள் பி. ராஜபூபதி, பி. மணி, நிர்வாக அலுவலர் ஆர். ராஜசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.
நன்றி-தினமணி.

RSS Feed
Twitter
Sunday, February 16, 2014
வ.களத்தூர் செய்தி

0 comments:
Post a Comment