Wednesday, 19 February 2014


DRO சுப்பிரமணியன்
பெரம்பலூர்: நடைபெற உள்ள லோக்சபா தேர்தலை முன்னிட்டு ஒரே இடத்தில் 3 ஆண்டு தொடர்ந்து பணியாற்றினால் ஜன., 31ம் தேதிக்குள் அவர்களை கூண்டோடு இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் கடந்த ஜன., 16ம் தேதி உத்தரவிட்டது.
ஆனால், தேர்தல் ஆணையத்தின் உத்தரவு பெரம்பலூர் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்து வந்தது. 3 ஆண்டுகள், அதற்கு மேல் ஒரே இடத்தில் தொடர்ந்து பணியாற்றும் அலுவலர்கள் அதிக அளவில் உள்ளனர்.
ஒரே இடத்தில் தொடர்ந்து மூன்றாண்டுகு மேல் பணியாற்றுவதால் ஆளுங்கட்சியினருடன் இவர்களுக்கு நல்ல நெருக்கம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இந்த அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்படாமல் பெரம்பலூர் லோக்சபா தேர்தலை நடத்தினால் ஆளுங்கட்சியினர் தேர்தல் விதிமுறைகள் மீறுவதை இந்த அலுவலர்கள் கண்டும்காணாமல் இருக்கும் நிலை ஏற்படும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகள், அதற்கு மேல் பணியாற்றும் அலுவலர்களையும், ஆளுங்கட்சி ஆதரவு அதிகாரிகளையும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்ற தேர்தல் ஆணைய உத்தரவுக்கு மதிப்பில்லை. அதிகாரிகள் இடமாற்றத்தில் மெத்தனம் என்ற தலைப்பில் கடந்த 10ம் தேதி காலைக்கதிர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து காலைக்கதிர் செய்தி எதிரொலியாக பெரம்பலூர் டி.ஆர்.ஓ., சுப்ரமணியன் கடலூர் மாவட்ட அரசு சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குநராகவும், பெரம்பலூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளராக பணியாற்றி வந்த உமாமகேஸ்வரி, வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சி திட்ட பொது மேலாளராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நன்றி-தினமலர்.

0 comments:

Post a Comment