வ.களத்தூர்ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கடந்த சில நாட்களாக வாக்காளர் அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கும்பணி நடைபெற்றது. இன்றுமுதல் ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணி நடைபெற உள்ளது . வ.களத்தூர் கிராமமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும்,
இம்முகாமிற்கு பதிவு செய்யவரும் பொதுமக்கள் அனைவரும் 2011ம் ஆண்டு மக்கள்
தொகை கணக்கெடுப்பின் போது வழங்கப்பட்ட ஒப்புதல் சான்று அல்லது கிராம
நிர்வாக அலுவலர் சான்று மற்றும் அசல் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள
அட்டையுடன் பதிவு செய்ய வரவேண்டும்.
2011 ம்
ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது கிராமத்தில் குடியிருப்பு
இல்லாதவர்கள், கணக்கெடுப்பின் போது விடுபட்டவர்கள் மற்றும் புதியதாக
குடியேறியவர்கள், புதியதாக தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தில்
விபரங்களை பு+ர்த்தி செய்து தாக்கல் செய்திட வேண்டும். மேற்படி புதிய
கணக்கெடுப்பு படிவத்தினை தொடர்புடைய வாலிகண்டபுரம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில்
பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம்.
0 comments:
Post a Comment