Thursday, 20 February 2014

கே.வெங்கடேசு (வலது ஓரமாக)
தமிழ்நாடு அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான மென்பொருள் போட்டிகளில் வ.களத்தூர் கிராமத்தை சேர்ந்த கே.வெங்கடேசு வென்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு நமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம் . FACEBOOK ல்அவருக்கு உங்களின் வாழ்த்துக்களை தெரிவிக்க  https://www.facebook.com/vengatesh.surya

 தினமணியில் செய்தி

 பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை, அறிவியல் கல்லூரியின், கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மாணவர்கள் கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற மென்பொருள் போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றனர்.
கே.வெங்கடேசு

திருச்சி மாவட்டம், சிறுகனூர் எம்.ஏ.எம் பொறியியல் கல்லூரியில், 54 கல்லூரிகள் பங்கேற்ற மென்பொருள் போட்டிகள் அண்மையில் நடைபெற்றது. இதில், தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை, அறிவியல் கல்லூரி கணினி துறை மாணவர்கள் ஆர். அய்யப்பன், எ. சிவகிரி, கே. அரவிந்த், கே. வெங்கடேசு, பி. ராஜ்குமார், எம். பாலகிருஷ்ணன், என். பிரபா, ஆர். அனிதா, ஆர். ஆனந்தி, தகவல் தொழில்நுட்பத் துறை மாணவர்கள் ஆர். பிரவீன், எஸ். தீபிகா, எம். ரமேஷ், எஸ். திவ்யா ஆகியோர் பங்கேற்று அட்ஜிப் கேம்ஸ் போட்டிகளில் முதல் பரிசு, வினாடி வினா போட்டியில் இரண்டாம் பரிசு, டீம் வொர்க் போட்டியில் மூன்றாம் பரிசுகளைப் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
இந்த போட்டிகளில் பங்கேற்று சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளையும், பயிற்சி ஆசிரியர்களையும், கல்லூரி தாளாளர் கே. வரதராஜன், கல்லூரி முதல்வர் வே. அயோத்தி, துணை முதல்வர் கோ. ரவி, கல்லூரி முதன்மையர் ஏ. சேவியர் அமலதாஸ் ஆகியோர் புதன்கிழமை பாராட்டி பரிசு வழங்கினர்.

நன்றி-தினமணி.

 

0 comments:

Post a Comment