களைகளை கட்டுப்படுத்தும் புதிய தொழில் நுட்பம் விவசாயிகளுக்கு கிடைக்க
ஆவண செய்ய வேண்டுமென வலியுறுத்தி, பெரம்பலூர் மற்றும் வேப்பந்தட்டை
வட்டத்தை சேர்ந்த பருத்தி விவசாயிகள் பெரம்பலர் தொகுதி சட்டப்பேரவை
உறுப்பினர் இரா. தமிழ்ச்செல்வனிடம், அண்மையில் கோரிக்கை மனு அளித்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் அளித்த மனுவில்:
கடந்த 35 ஆண்டுகளாக பருத்தி விவசாயம் செய்து வருகிறோம். இதில், 2002ம் ஆண்டிலிருந்து பி.டி பருத்தி பயிரிட்டு வருகிறோம். தற்போது பருத்தியில் 2 முறை களை எடுக்க ரூ. 7,000 முதல் ரூ. 8,000 வரை செலவாகிறது. களை எடுப்பதற்கு விவசாய கூலி ஆள்கள் கிடைக்காமல் களைகள் அதிகரிப்பால், மகசூல் இழப்பு ஏற்பட்டு சிரமப்பட்டு வருகிறோம். பி.டி பருத்தியில் களைகளை கட்டுப்படுத்த புதிய தொழில் நுட்பம் உள்ளதாக, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக அலுவலர்கள் மற்றும் விவசாய அறிஞர்கள் மூலம் அறிந்தோம். இந்த தொழில் நுட்பம் கொண்ட குறிப்பிட்ட களை கொல்லியை பருத்தி வயலில் தெளிக்கும்போது, பருத்திக்கு எவ்வித பாதிப்புமின்றி அனைத்து விதமான களைகளும் அழிந்து, கூடுதல் மகசூல் கிடைப்பது தெரியவந்துள்ளது.
எனவே, வேளாண் வல்லுனர்களையும், தமிழக வேளாண்மை துறை தொழில் நுட்பத்தை வழங்கும் நிறுவனங்களையும் கலந்தாலோசித்து, இதுபோன்ற புதிய வேளாண் தொழில் நுட்பங்களை விவசாயிகளுக்கு வழங்க ஆவண செய்து பருத்தி விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வழிவகை செய்ய வேண்டும்.
நன்றி-தினமணி.

0 comments:
Post a Comment