Thursday, 31 July 2014


பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய, 14 வயது சிறுவனை பெரம்பலூர் மாவட்ட அனைத்து மகளிர் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
குன்னம் அருகே உள்ள வேப்பூர் கிராமத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை அவரது பக்கத்துவீட்டை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவன் அண்மையில் பாலியல் வல்லுறவு செய்தாராம். இதில் அந்த சிறுமி கர்ப்பமடைந்தார்.
இதையறிந்த சிறுமியின் தாய் வெண்ணிலா, பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த ஆய்வாளர் ரஞ்சனா, மாணவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தார். மேலும் மாணவி குழந்தைகள் பாதுகாப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

-தினமணி.

0 comments:

Post a Comment