சிந்தாதிரிபேட்டையில் உள்ள மாநில இந்து முன்னணி அலுவலகத்துக்கு நேற்று மதியம் ஒரு மர்ம கடிதம் வந்தது. அதை இந்து முன்னணி நிர்வாகிகள் படித்து பார்த்தனர்.
அதில் இந்து இயக்கம் மற்றும் தமிழக பாரதீய ஜனதா தலைவர்களை கொலை செய்யப் போவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இந்து முன்னணி நிர்வாகிகள் மனோகர், பரமேசுவரன், முருகேசன், இளங்கோவன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இன்று காலை சிந்தாதிரிபேட்டை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் இளங்கோ அதை பெற்றுக் கொண்டார். அதில் கூறிஇருப்பதாவது:–
"இஸ்லாத்தை இழிவு படுத்தியும் எங்கள் அன்பு மதத்தை கொச்சைப் படுத்தியும் பேசி, துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்து வருபவர்களை ‘குர்பானி’ இடுவோம். சென்னையில் பி.ஜே.பி.யில் ‘தீ’ என்றாலும் தஞ்சையில் ‘ம்’ என்றாலும், சிவகங்கையில் ‘ஜா’ என்றாலும், கோவையில் ‘ஸ்’ என்றாலும், திருச்சியில் ‘ர்’ என்றாலும், விருதுநகரில் ‘தீ’ என்றாலும் முன்னணியில் சென்னை ‘ன்’ என்றாலும், திருப்பூர், கோவையில் ‘ணி’ என்றாலும், நெல்லையில் ‘ஜா’ என்றாலும் அனைவரும் துன்பத்துக்கு ஆளாவர்கள்.
இப்படிக்கு இம்மாமலை சகோதரர்கள், மத்வா குழு" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அனுப்புவோர் விலாசம் பாலக்காடு, கேரளா என்று எழுதியுள்ளது.
இந்த மிரட்டல் கடிதத்தில் 9 பெயர்கள் குறிப்பிட்ட எழுத்துக்கள் மூலம் மறைமுகமாக சொல்லப்பட்டுள்ளது. சுரேஷ் குமார் கொலை ஏற்படுத்திய பரபரப்பு அடங்கும் முன்பு இந்த மர்ம கடிதம் வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பத்வா கடிதம். |
பத்திரிக்கைச் செய்தி |
மாலைமலர் |
0 comments:
Post a Comment