Saturday, 2 August 2014


பெரம்பலூர்,:  பெரம்பலூரில் ஆடிமாத 3வது வெள்ளியை முன்னிட்டு பல்வேறு கோயில்களில் திருவிளக்கு பூஜைகள் நடைபெற்றது.
பெரம்பலூர் பூசாரித்தெருவிலுள்ள ரேணுகாம் மாள் கோயிலில் நேற்று மா லை ஆடிமாத 3வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, வீட்டிலுள்ளோர் ஆயுள்விருத்தி, ஆரோக்கியம் அதிகரிக்க செய்தல், சகல ஐஸ்வர்யங்களை வேண்டுதல், கல்விவிருத்தி மற்றும் உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கும்பகோணம் குருக்கள் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு பூஜையில் 108திருவிளக்குகள் ஏற்றிவைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இந்துசமய அறநிலையத்துறை ஆய்வாளர் அருணகிரி, நிர்வாக அறங்காவலர் வழக்கறிஞர் பாபு, பிரியதர்ஷினி சரவணன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஏராளமான பக்தர் கள் கலந்துகொண்டனர்.இதேபோல பெரம்பலூர் அங்காளம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நேற்று மாலை நடந்தது. பெரம்பலூர் குருக்கள் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற சிறப்புபூஜையில் 108திருவிளக்குகள் ஏற்றிவைத்து வழிபாடு நடத்தப்பட்டது.
அகமுடையார் நலச்சங்கம் சார்பில் நடந்த இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மழைக்காகவும், உலக நன்மைக்காகவும் வழிபாடு செய் தனர். மேலும் பெரம்பலூர் பழைய நகராட்சி அலுவலகம் தென்புறத்திலுள்ள அய்யப்ப சுவாமி திருக்கோயிலில் நடந்த திருவிளக்கு பூஜையில் 250 திருவிளக்குகள் ஏற்றி வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. வாசவி கண்ணிகா பரமேஸ்வரி கோயிலில் நடந்த திருவிளக்கு பூஜையில் 108விளக்குகள் ஏற்றிவைத்து சிறப்புவழிபாடு நடத்தப்பட்டது.நிகழ்ச்சியில் பெரம்பலூர் நகரப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.


-தினகரன்.

0 comments:

Post a Comment