Saturday, 2 August 2014


பெரம்பலூர், : செங்குணம் கிராமத்தில் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் நேற்று நடந்தது.
பெரம்பலூர் மாவட் டம் செங்குணத்தில் கிராமத்தில் உள்ள மகாமாரியம்மன் கோயிலில் ஆடிபெருந்திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் திருத்தேர் விழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்தாண்டுக்கான தேர்திருவிழா கடந்த 17ம்தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. கடந்த 24ம்தேதி காப்பு கட்டுதல், 25ம்தேதி அன்னவாகனத்திலும், 26ம்தேதி புஷ்பவாகனத்திலும், 27ம்தேதி சிம்ம வாகனத்திலும், 28ம்தேதி பூப்பல்லக்கிலும், 29ம் தேதி மயில்வாகனம் என பல்வேறு வாகனங்களில் அலங்காரத்துடன் தினமும் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். 30ம்தேதி பால்குடம் எடுத்தல், அக்னிசட்டி ஏந்துதல், அலகுகுத்துதல், தீ மிதித்தல்  நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. காலை 10மணியளவில் திருத்தேர் வடம்பிடித்து இழுக் கப்பட்டு வீதியுலா வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண் டனர்.
மாலையில் தேர்நிலைக்கு வந்ததடைந்தது. இரவு நாடகம் நடைபெற்றது. விழாஏற்பாடுகளை ஊராட்சிமன்றத் தலைவர் தன்ராஜ் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

- தினகரன்.

0 comments:

Post a Comment