பெரம்பலூர், : அயன்பேரையூர் வெள்ளாற்று புறம்போக்கு நிலத்தில் உள்ள மயானத்துக்கு பட்டா வழங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
பெரம்பலூர் கலெக்டர்(பொ) இராஜன்துரையிடம் வேப்பந்தட்டை தாலுகா அயன்பேரையூரை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனு அனுப்பினர். அதில் கூறியிருப்பதாவது:
வேப்பந்தட்டை தாலுகா அயன்பேரையூர் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் தெருவில் 2,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்காக இதுவரை மயான வசதி செய்துதரவில்லை. இப்பகுதியை சேர்ந்தவர்கள் இறந்தால் நீண்ட காலமாக வெள்ளாற்று புறம்போக்கில் உறவினர்களின் சடலங்களை புதைத்து வருகிறோம். அப்பகுதிக்கான பாதை வசதி கிடையாது. ஏற்கனவே பாதை வசதிக்காக அரசு தரப்பில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தனியார் நிலத்தில் நில உரிமையாளர் நீதிமன்ற தடையாணை பெற்று பயிரிட்டு வருகிறார்.
எனவே ஆற்று வெள்ளத்தில் சடலங்களை தூக்கி செல்லும் அவலநிலை ஏற்படாமல் இருக்க ஆற்றின் கரையோரம் தடுப்பணை கட்டி பாதை வசதி செய்துதர வேண்டும். வெள்ளாற்று புறம்போக்கு நிலத்தில் உள்ள எங்கள் மயானத்துக்கு பட்டா வழங்க வேண்டும். வெள்ளம் வரும் முன்பாக இதற்கான தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
-தினகரன்.
0 comments:
Post a Comment