Sunday, 13 July 2014


மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள போலீஸ் நிலைய வளாகத்தில், வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நேற்று முன்தினம் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதுகுறித்து விசாரித்து வந்த காவல்துறைக்கு தெரிய வந்த தகவல் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

மும்பையின் புறநகர் பகுதியான தானேவை சேர்ந்த இரு இளைஞர்கள் உள்பட 18 இந்தியர்கள், ஈராக்கில் தாக்குதல் நடத்திவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள் இயக்கத்தில் சேர்ந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

தானேவை சேர்ந்த இரு இளைஞர்களும் கடந்த ஒரு வருடத்திற்கு முன் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்து சிரியாவிலும், ஈராக்கிலும் நடைபெற்று வரும் தாக்குதலில் தொடர்பு கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது.

மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய தென் மாநிலங்களில் இருந்துதான் இவர்கள் 18 பேரும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களில் எவரேனும் இந்தியாவிற்கு திரும்பிவிட்டார்களா என்று எதுவும் தெரியவில்லை. ஆனால் தென் மாநிலங்களில் இருந்து இத்தகைய செயலில் ஈடுபடுவது உளவுத்துறையை கவலை கொள்ள செய்துள்ளது. வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் யாரும் கிளர்ச்சியாளர்களின் இயக்கத்தில் சேராதது உளவுத்துறைக்கு சற்று நிம்மதியை தந்துள்ளது v.kalathur seithi.

-malaimalar.

0 comments:

Post a Comment