பெரம்பலூர்:
சென்னையில் இருந்து நேற்று மாலை திருச்செந்தூருக்கு அரசு விரைவு பஸ் ஒன்று புறப்பட்டு வந்தது. இந்த பஸ்சின் டிரைவராக சேரன்தயா என்பவரும் கண்டக்டராக முத்தையா என்பவரும் இருந்தனர். பஸ் பெரம்பலூர்–துறைமங்கலம் மேம்பாலப் பகுதியில் இன்று அதிகாலை 2 மணி அளவில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே தவறான பாதையில் நெடுவாசலில் இருந்து கருங்கல் ஏற்றி வந்த லாரி மீது அரசு பஸ் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் பஸ்சுக்குள் இருந்த படியே அலறினர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்த மதுரையை சேர்ந்த சிவதினேஷ், இந்துமதி, சாந்தி, தூத்துக்குடியை சேர்ந்த அம்புரோஸ், ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜகோபால் உள்பட 6 பேரையும் மற்றும் லேசான காயம் அடைந்த 25 பேரையும் மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் லேசான காயங்களுடன் தப்பிய 25 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீட்டுக்கு திரும்பினர். மேலும் படுகாயம் அடைந்த 6 பேரும் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து தொடர்பாக லாரி டிரைவரான திருப்பத்தூரை சேர்ந்த தர்மராஜை (25) போலீசார் கைது செய்தனர் v.kalathur seithi .

0 comments:
Post a Comment