Friday, 18 July 2014

மோடி பயண வழித்தடம்.

உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் வந்த அதே வான்வழியில் தான் பிரதமர் நரேந்திர மோடி பிரிக்ஸ் மாநாட்டை முடித்துவிட்டு பிரேசிலில் இருந்து திரும்பி வருவதாக இருந்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
திட்டமிட்டபடி வந்திருந்தால் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட 1 மணி நேரத்தில் மோடியின் விமானமும் உக்ரைன் ஃபிளைட் இன்ஃபர்மேஷன் ரீஜினில் பறந்திருக்கும் என கூறப்படுகிறது. எனினும் சாதுர்யமாக யோசித்து பைலட் பயணத் தடத்தை மாற்றியுள்ளார்.  பிரதமர் நரேந்திர மோடி சென்ற ஏர் இந்தியா-001 விமானம் பிராங்ஃப்ர்ட் நகரில் இருந்து க்ரீன்வீச் நேரப்படி 11.22 க்கு புறப்பட்டது.
உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தின் பின்னால் அதே வான்வழியில்தான் பிரதமர் நரேந்திர மோடி பயணித்த விமானமும் வந்துள்ளது. எம்.எச்.17 மலேசிய விமானம் ஏவுகணை தாக்குதலில் வீழ்த்தப்பட்டதை அறிந்ததும் பயணத்தடம் மாற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றனவ v.kalathur seithi .

-தினமணி.

0 comments:

Post a Comment