Sunday, 13 July 2014


பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே மகளிடம் தவறாக நடக்க முயன்றவரை, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியர் தரேஸ் அஹமது வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
ஆலத்தூர் ஒன்றியத்தில் உள்ள தேனூர் கல்லாங்குத்து தெருவைச் சேர்ந்தவர் ராஜகோபால் (42). தனியார் பேருந்து ஓட்டுநராக இருந்தார்.
இவர் தனது 15 வயது மகளிடம் அடிக்கடி தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதேபோல், கடந்த மாதம் 23-ம் தேதி தூங்கிக் கொண்டிருந்த மகளிடம் தவறாக நடக்க முயன்றாராம் ராஜகோபால்.
இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ஜோஸியா ராஜன் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ரஞ்சனா வழக்குப் பதிந்து ராஜகோபாலை கைது செய்தார்.
பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், ராஜகோபாலை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்த்ரா பரிந்துரை செய்ததன் அடிப்படையில், அவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார் v.kalathur seithi .

-தினமணி.

0 comments:

Post a Comment