Sunday, 13 July 2014

நம் கல்லாற்றின் குறுக்கே தொண்டமாந்துறை கிராமம் அருகிலுள்ள விசுவக்குடியில் 19 கோடி ரூபாயில் புதிய ஏரி அமைக்கும்பணி முடிவடையும் தருவாயில் உள்ளது.
 30.675 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவு கொண்ட இந்த நீர்த்தேக்கம் 615 மீட்டர் நீளமும் 11.5 மீட்டர் உயரமும் கொண்ட விசுவக்குடி நீர்த்தேக்கத்தினால் தொண்டமாந்துறை , வெங்கலம் மற்றும் வேப்பந்தட்டை பகுதி விவசாயிகள் பயன்பெற உள்ளனர்.
 நம் வ.களத்தூர் பகுதியின் குடிநீர் ஆதாரமும் , ஆற்றுப்பாசன விவசாயமும் கல்லாற்றின் நீரையே நம்பி உள்ள நிலையில் விசுவக்குடி நீர்த்தேக்கத்தின் கட்டுமானத்தினால்  எந்த அளவு பாதிப்படையும் என்பதை வரும் காலம்தான் கூறவேண்டும்.

பட உதவி- மாதேஸ்வரன் ராஜ்.

0 comments:

Post a Comment