Monday, 14 July 2014


 வண்ணாரம் பூண்டி  கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 35). கூலி தொழிலாளியான இவர் தற்போது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
நேற்று தனியாக இருந்த அதே பகுதியை சேர்ந்த 7–ம் வகுப்பு மாணவி மீனா (வயது12, பெயர் மாற்றப்பட்டுள்ளது) வின் வீட்டுக்குள் புகுந்த செல்வம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். பின்னர் தண்ணீர் எடுக்க சென்ற அந்த மாணவியின் பின்னால் சென்ற முருகன் அந்த மாணவியை கட்டிப் பிடித்து பலாத்காரம் செய்ய முயன்றுள்ளர்.
இதுகுறித்து சிறுமியின் தந்தை வ.களத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீ சார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி சுரேஷ் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
நீதிபதி அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார்.

-மாலைமலர்.

0 comments:

Post a Comment