பாராளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களின்போது அனைத்து வாக்காளர்களுக்கும் பூத்சிலிப் எனப்படும் வாக்காளர் அடையாளச்சீட்டு வழங்கப்பட்டது போல உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறும் இடங்களில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய பூத்சிலிப்கள் எனப்படும் வாக்காளர் அடையாளச்சீட்டுகள் வீடுதோறும் நாளை முதல் வழங்கப்படவுள்ளன.
பெரம்பலூர்,: உள்ளாட்சி அமைப்புகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட 26 பதவியிடங்களில் 17பதவியிடங்களுக்கு போட்டியின்றித்தேர்வு செய்யப்பட்டனர். எஞ்சிய 9 பதவியிடங் களுக்கு 18ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. களத்தில் 23 பேர் உள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள உள்ளாட்சி அமைப்புகளில் 2014 ஜூன் 30ம்தேதி வரை ஏற்பட்டுள்ள 26 காலிப்பதவியிடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டு வேட்புமனுக்கள் கடந்த ஆக.28 முதல் செப். 4ம்தேதிவரை பெறப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்களில் 2 இடங்கள், ஊராட்சி தலைவர்களில் 3 இடங்கள், கிராமஊராட்சி வார்டு உறுப்பினர்களில் 20 இடங்கள், பேரூராட்சி வார்டு உறுப்பினர்களில் ஒரு இடம் என மொத்தம் 26 காலிப் பதவியிடங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டன. ஒன்றியக்குழுஉறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தலில், பெரம்பலூர் ஒன்றியத்தில் 12வது வார்டுஉறுப்பினர் பதவியிடத்திற்கு 3பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். 3மனுக்களும் ஏற்கப்பட்ட நிலையில் நேற்று ஐஜேகே வேட்பாளரான வேலூர் கார்த்திக் தனது மனுவை வாபஸ் பெற்றதை தொடர்ந்து, தற்போது அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் விஏஓ தம்பிரான்பட்டி அண்ணாதுரை(59), பிஜேபி கட்சியைச்சேர்ந்த ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ரங்கநாதபுரம் வசந்தகுமார் (40)ஆகிய இருவரும் களத்தில் உள்ளனர்.
வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 16வதுவார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கு 4 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். 4மனுக்களும் ஏற்கப்பட்ட நிலையில், நேற்று 2மனுக்கள் வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, தற்போது அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கண்ணகிகுணசேகரன், ஐஜேகே கட்சியைச்சேர்ந்த மலையம்மாள் ஆகிய இருவரும் களத்தில் உள்ளனர். ஊராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில், வேப்பூர்ஒன்றியம் பெரியவெண்மணி ஊராட்சித்தலைவர் பதவியிடத்திற்கு மனுதாக்கல் செய்திருந்த 6பேரில் 4மனுக்கள் வாபஸ் பெறப்பட்டதால் இருவர் களத்திலுள்ளனர்.
ஆலத்தூர் ஒன்றியம் கண்ணப்பாடி ஊராட்சித்தலைவர் பதவியிடத்திற்கு மனுதாக்கல் செய்திருந்த 2பேரில் யாரும் வாபஸ் பெறாததால் இருவரும் களத்திலுள்ளனர். ஆலத்தூர் ஒன்றியம் நொச்சிக்குளம் ஊராட்சித்தலைவர் பதவியிடத்திற்கு மனுதாக்கல் செய்திருந்த 8பேரில் 4மனுக்கள் வாபஸ் பெறப்பட்டதால் 4பேர் களத்திலுள்ளனர்.
பேரூராட்சி வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் பூலாம்பாடி பேரூராட்சியில் 15 வது வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கு மனுதாக்கல் செய்திருந்த 2பேரில் ஐஜே கே சார்பாக மனுதாக்கல் செய்திருந்த கஜினிமுகமது என்பவரது மனு தள்ளுபடி செய் யப்பட்டதால், அதிமுக வேட்பாளரான முன்னாள் கவுன்சிலர் அப்துல்சலாம் போட்டி யின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதே போல கிராம ஊராட்சி வார்டுஉறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தலில் மாவட்ட அளவில் காலியாக அறிவிக்கப்பட்ட 20வார்டு உறுப்பினர் பதவியிடங்களில் 16 பேர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள பொம்மனப்பாடி ஊராட்சி 8வதுவார்டு உறுப்பினர் பதவிக்கு 3பேரும், கல்பாடி ஊராட்சி 8வதுவார்டு உறுப்பினர் பதவிக்கு 4பேரும், பெரிய வெண்மணி ஊராட்சி 8வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2பேரும், சிறுமத்தூர்ஊராட்சி 7வதுவார்டு உறுப்பினர் பதவிக்கு 2பேரும் களத்திலுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து காலியாகவுள்ள 2 ஒன்றியகவுன்சிலர், 3ஊராட்சிமன்றத் தலைவர்கள், 4வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 9பதவிக்கு 23 பேர் களத்திலுள்ளனர். இந்த 9பதவிக்கும் வாக்குச்சீட்டு அடிப்படையில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஒன்றியகவுன்சிலர், ஊராட்சிமன்றத் தலைவர், வார்டு உறுப்பினர் ஆகிய 3பதவியிடங்களை அடையாளப்படுத்தும் விதமாக 3வண்ணங்களில் வாக்குச்சீட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பெரியவெண்மணி கிராமத்தில் உள்ள 8வதுவார்டு வாக்காளர்கள் மட்டும் தலைவர், வார்டுஉறுப்பினர் ஆகிய 2 பதவிக்காக இருமுறை வாக்களிக்க உள்ளனர்.
-தினகரன்.
0 comments:
Post a Comment