பெரம்பலூர், : பெரம்பலூரில் அரசு சார்பாக பாரம்பரிய உணவுத்திருவிழா இன்று(9ம்தேதி) முதல் 13ம்தேதி வரை நடைபெற உள்ளது என கலெக்டர் தரேஸ் அகமது தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது :
மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளார்ச்சித் திட்டத்தின்கீழ், சிறுதானிய உணவின் பயன்பாடு மற்றும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் பொருட்டு பாரம்பரிய உணவுத் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த திருவிழா இன்று (9ம் தேததி) முதல் வருகிற 13ம்தேதி வரை பெரம்பலூர் ஜேகே மஹாலிலும், 16ம்தேதி அரும்பாவூரிலும், 18ம்தேதி குன்னத்திலும் நடைபெற உள்ளது. பாரம்பரிய உண வுத் திருவிழாவில் உணவு கலாச்சாரம், இயற்கை விவ சாயம், வீட்டுத்தோட்டம், மரபுசார் வேளாண்மை, சுற்றுச் சூழல் குறித்து சிறப்புரையும் சிறுதானியங்களால் உணவு தயாரிப்பு பற்றிய செயல்முறை விளக்கமும் நடத்தப்படுகிறது.
மேலும் விவசாயத்துறை, தோட்டக்கலைத்துறை போன்ற துறைகளால் கண் காட்சி அமைக்கப்படுகிறது. பாரம்பரிய மண்பாண்டங்களில் செய்யப்பட்ட பொருட்கள், பனை பொருட் கள், மரசிற்பம் போன்ற அரங்குகளும் அமையவுள்ளன. மூலிகைத் தாவரம், இயற்கை மருதாணி இடுதல், உணவு முறைகள் குறித்த புத்தகக் கண்காட்சி ஆகியவை இந்த அரங்குகளில் இடம்பெறும்.
முதல் நாளான இன்று (9ம்தேதி) 1 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆரோக் கிய குழந்தை போட்டி, 2ம் நாளான நாளை (10ம்தேதி) பாரம்பரிய உடை போட்டி, 3ம் நாள்(11ம்தேதி) உணவு தயாரித்தல் செயல்முறை விளக்கப்போட்டி, 4ம்நாள் (12ம்தேதி) கல்லூரி மாணவர்களுக்கான சிறுதானிய உணவின் முக்கியத்துவம் குறித்து பேச்சுப் போட்டி, ஐந்தாம்நாள் (13ம்தேதி) குப்பை உணவு மற்றும் துரித உணவின் தீமைகள் குறித்தப் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் பங்கு பெற விரும்புவோர் 87543 16958, 9488804765 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
செய்தி-தினகரன், பட உதவி-வசந்த ஜீவா.
0 comments:
Post a Comment