ஒரு காலத்தில் நம் வ.களத்தூரில் வீட்டைக் கட்ட மணலை தலையில் சுமந்து , மாட்டு வண்டியில் கொண்டுவந்து வீட்டைகட்டினோம் . பிறகு டிராக்டரில் மணல் அடித்து வீட்டை கட்டினோம். ஆனால் மண் வளம் பாதிப்பதாக கூறி கல்லாற்றில் மணல் அள்ள தடை விதித்தது தமிழக அரசு. சரி டிராக்டரில் அள்ளவில்லை, மாட்டு வண்டியிலாவது மணல் அள்ளிக்கொள்ளலாம் என்றால் அதற்கும் வழி இல்லை. ஆனால் இன்று நம் ஆற்றுமணலை ஏலத்தில் எடுத்து எவன் எவனோ பணம் சம்பாதிக்க நாம் மணல் அள்ளினால் குற்றமாம்.
விவசாயம் பொய்த்துவிட்ட இந்த காலக்கட்டத்தில் நூறு இருநூறுக்கு மணல் அள்ளி அதன்மூலம் குடும்பத்தை ஓட்டலாம் என்றால் அதற்கும் வழியில்லை. எவன் எவனோ நம் சொத்தான கல்லாற்று மணலை கொள்ளையடித்துப்போக நாம் வேடிக்கை பார்த்து நிற்கிறோம். கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் கதையாக இருக்கிறது. நம் வாழ்வில் ஒரு அங்கமாக ஆகிப்போன கல்லற்று மணலைகொண்டு வீடு கட்டுவது என்பது இனிமேல் கனவுதானோ...நம் கல்லாறு மணலை நாம் அள்ளுவது திருட்டாம்...வெள்ளையன் ஆண்ட காலத்தில் ஒரு பாட்டு உண்டு
" ஊரன் ஊரான் தோட்டத்தில ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்கா... காசுக்கு ரெண்டு விக்கச்சொல்லி காகிதம் போட்டானாம் வெள்ளைக்காரன்..."என்ற நாட்டுப்புற பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
வண்டி பறிமுதல் செய்யப்பட்டவர்கள் நம் வ.களத்தூரைச் சேர்ந்த ரமேஷ்(29), சுப்ரமணி(40), நல்லதம்பி(39), மாரிமுத்து(38), தனபால்(39), ராமையா(40), முத்துசாமி(41), முத்துசாமி(42) ஆகியோர்.
தினகரன் செய்தி-

0 comments:
Post a Comment