ஈராக்கில் தோன்றிய இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு உலக மக்களுக்கு ஓர் அச்சுறுத்தல் ஆகும். உலக அளவில் இஸ்லாமிய அரசின் தலைவராக காலிப்பை அறிவித்ததுடன், உலக வரைபடத்தில் எப்படியெல்லாம் இஸ்லாமிய அரசு அமையப்போகிறது என்பதை சுட்டிக்காட்டியுள்ளது. இதில் பாரத தேசமும் அடங்குகிறது. இஸ்லாமிய அரசை நிறுவ ஜிகாதி போரையும், பயங்கரவாத செயல்திட்டத்தையும் அவ்வியக்கம் அறிவித்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளை அடியோடு ஒழிக்க அமெரிக்கா அதிபர் அறிவித்துள்ளார். இதற்கு மேற்கத்திய நாடுகள் மற்றும் வளைகுடா நாடுகளும் ஒத்துழைக்க உள்ளன.
ஐ.எஸ்.ஐ.எஸ், பயங்கரவாத செயல்கள் எங்கோ நடக்கிறது என்பதல்ல, அவர்களால் மூளை சலவை செய்யப்பட்டவர்கள் சிலிப்பர் பயங்கரவாதிகள் உலகம் முழுவதும் தயார் செய்யபப்ட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டிலும் கூட இராமநாதபுரத்தில் 40 பேர் ஐ,எஸ்.ஐ.எஸ். உடையணிந்து, தொண்டியிலிருந்து புறப்பட்டுவிட்டது சூறாவளி என முகநூலில் புகைப்படம் வெளியிட்டதும், தமிழக காவல்துறை அவர்களை கைது செய்து பின்னர் உடனடியாக ஜாமினில் வெளியே விட்டுவிட்டார்கள்.
இதற்கு காவல்துறையினர் கூறிய காரணம் ஐ,எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புதான், ஆனால் அந்த அமைப்பு நமது நாட்டில் தடை செய்யவில்லையே என்றார்கள். ஐ,எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இணைந்து பயங்கரவாத செயலுக்கு தமிழ்நாட்டிலிருந்து நூற்றுக்கணக்கானவர்கள் ஈராக் சென்றுள்ளனர். சமீபத்தில் ஒரு பத்திரிகையில் நாகப்பட்டினத்திலிருந்து சென்றவனின் படம் வெளிவந்தது. அவன் சகோதரிக்கு தொலைபேசியில் பேசியபோது, தான் கடலூரில் பெற்ற பயிற்சி இங்கு பயங்கரவாத செயலுக்கு பெரிதும் பயன்படுகிறது என்று கூறியுள்ளான். அப்படியானால், தமிழகம் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு ஆள் சேர்க்கவும், பயிற்சி அளிக்கும் களமாக இருக்கிறது. இது ஆபத்தானது!
அதுபோல ஆந்திராவிலிருந்தும் ஐ.எஸ்.ஐ.எஸ்.க்காக மூளை சலவை செய்யப்பட்டவர்கள் பற்றிய செய்திகள் வந்திருக்கின்றன. இதனை முளையிலேயே ஒடுக்காவிட்டால், இஸ்லாமிய மதவாதத்தால் மூளை சலவை செய்யப்பட்ட ஸ்லீப்பர் பயங்கரவாதிகளால் நாட்டில் பெரிய அளவில் அசாம்பாவிதங்கள் நிகழ்த்தலாம் என எச்சரிக்கிறது இந்து முன்னணி!
தற்போது பிடிப்பட்டுள்ள அருண் செல்வாராஜும், முன்னர் பிடிப்பட்ட பயங்கரவாதிகள் சென்னை உட்பட தமிழகத்தின் முக்கிய பகுதிகளை குறிவைக்க தகவல்களை சேகரித்துள்ளதும், அதனை இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதருக்குத் தெரிவித்துள்ளதும் தெரிய வந்தது. இது குறித்து மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்நாட்டின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த இந்து முன்னணி வலியுறுத்துகிறது.
தமிழகத்தில் வளர்ந்து வரும் முஸ்லீம் பயங்கரவாதம், இடசாரி நக்ஸல், மாவோயிஸ்ட் பயங்கரவாதமும் பெருகியுள்ளது. இதற்கு கம்யூனிஸ்ட், முஸ்லீம் அமைப்புகளும், கட்சிகளும் துணைபோகின்றன, ஆதரவாக செயல்படுகின்றன. உளவுத் துறை இந்த குழுக்களை கண்காணித்து அரசுக்கு தகுந்த தகவல்களை திரட்டி அவற்றை முழுமையாக செயலழிக்க செய்ய வேண்டும்.
பயங்கரவாதத்தை முழுமையாக அகற்ற, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும். அனைத்து மாநில அரசுகளும் பயங்கரவாதிகளை, அதற்கு உதவி செய்பவர்களை கண்காணித்து கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)
0 comments:
Post a Comment