Thursday, 11 September 2014


பெரம்பலூர், செப்.11:
பெரம்பலூர் அருகே நடந்த 2 விபத்துகளில் 17 பேர் காயமடைந்தனர்.
விருதுநகரில் இருந்து ஆயில் ஏற்றிய லாரி சென் னைக்கு நேற்றுமுன்தினம் இரவு சென்றுகொண்டிருந்தது. லாரியை விழுப்புரம் செண்டூரை சேர்ந்த முத்து வேல்(33) ஓட்டினார். நேற்று அதிகாலை 3மணி அளவில் திருச்சி& சென்னை நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே செங்குணம் பிரிவு ரோட்டில் வந்தபோது நாகர்கோவிலில் இருந்து சென் னைக்கு சென்ற ஆம்னி பஸ், லாரியின் பின்னால் மோதி யது. இதில் படுகாயமடைந்த லாரி டிரைவர் முத்துவேல் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். 50க்கும் மேற்பட்ட பயணி கள் காயமின்றி தப்பினர்.

மற்றொரு விபத்து 
இதேபோல் மதுரையிலிருந்து சென்னை சென்ற அரசு விரைவு பஸ் நேற்று அதிகாலை 5மணி அளவில் பெரம்பலூர் அருகே எளம்பலூர் தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் வந்தபோது திண்டுக்கல்லிருந்து சென்னை சென்ற லாரி மீது மோதியது. இதில் பஸ் டிரைவர் மதுரை மேலகவுண்டன்பட்டியை சேர்ந்த சதீஷ்(27), கண்டக்டர் வேலுச்சாமி(40), பயணிகள் மதுரை தவமணி, சென்னை சரஸ்வதி(64), விருதுநகரை சேர்ந்த கோபால், திருப்பதி, இருதயராஜா, சாந்தி உள்பட 16 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் அங்கு வந்து அவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். போலீசார் வழக்கு பதிந்து இருவிபத்து கள் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.


-thinakaran.

0 comments:

Post a Comment