Tuesday, 9 September 2014


சாதி இரண்டொழிய வேறில்லை என்ற சொன்ன ஒளவை பிறந்த மண்ணில் தீண்டாமையும் சாதி மோதலும் தலைவிரித்தாட அரசியல் கட்சிகளும் கிருஸ்துவ மிஷனரிகளும்,இஸ்லாமிய சக்திகளும் திட்டமிட்டு சதி செய்து வருகின்றன. தென் தமிழ்நாட்டில் அதிலும் குறிப்பாக இராமநாதபுர மாவட்டத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜை மற்றும் இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் போன்ற நிகழ்வுகள் கலவரங்களுக்காவே நடத்தப்படுவது போல் ஆகிவிட்டது. இந்தக் கலவரங்களை மையமாக வைத்துத் தீண்டாமையும் சாதி மோதல்களும் இந்து மதத்தின் Trade mark ஆக அந்நிய சக்திகளாலும் அறிவுஜீவிகளாலும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
download
arson 779215g
இந்த ஆண்டு 11-09.2014 அன்று இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் அனுசரிக்கப்பட இருக்கிறது. இதை மையமாக வைத்துச் சாதி கலவரம் ஏற்படுத்தத் திட்டம் தீட்டப்பட்டு அதன் ஒத்திகையும் நடந்தேறியுள்ளது.சில நாட்களுக்கு முன் இராமநாதபுரம், பேராவூர் இந்திரா நகர் பகுதியிலுள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலையை சிலர் அசிங்கப்படுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து அந்தப் பகுதியுலுள்ள தேவர் இனத்தைச் சார்ந்தவர்கள் இந்த குற்றத்திற்கு ஹரிஜன சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தான் காரணம் என்று கிளர்ந்தெழுந்துள்ளனர். தீர விசாரித்துப் பார்த்ததில் ஹரிஜன சமுதாயத்தைச் சேர்ந்தவர்களோ ஹரிஜன அமைப்புகளோ சம்பந்தப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
immanuvel sekaran2
இது தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில் இதேப் பகுதியைச் சார்ந்த இஷாத் அகமத், காபில், நரேந்திரன், ராஜ்குமார் என்ற நால்வரை கைது செய்துள்ளனர். இந்த நான்கு பேரும் சமீபத்தில் ஹரிஜன சமுதாயத்தில் இருந்து முஸ்லீமாக மதம்மாறியவர்கள். முன்பு கிறிஸ்தவ மிஷனரிகள் சாதிக் கலவரத்தை ஏற்படுத்தி எப்படி குட்டையைக் குழப்பி மீன் பிடித்தனரோ அது போலவே இஸ்லாமியர்களும் இந்தப் பாதகச் செயலை செய்யத் தொடங்கிவிட்டனர்.
இன்னும் இமானுவேல் சேகரன் நினைவு நாளுக்கு மூன்று நாட்கள் உள்ள நிலையில் இது போன்ற கலவரத்தைத் தூண்டும் சதிச் செயலில் முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் சில பிரிவினைவாத அமைப்புகளும் ஈடுபடும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு இரண்டு சமுதாய மக்களும் விழிப்புடன் செயல்படவேண்டும்.
pasumpon thevar 902011590076286889
தன் சொத்தில் ஒரு பங்கை ஹரிஜன சகோதரர்களுக்குக் கொடுத்த முத்துராமலிங்கத் தேவரின் சமநோக்கு எண்ணத்தையும் எவ்வளவோ தீண்டாமைக் கொடுமைகளைத் தாண்டி இன்றும் இந்துக்களுக்காக வாழ்ந்து கொண்டு நம் பண்பாட்டைக் காக்கும் ஹரிஜன சகோதரர்களின் சமுதாய பிடிப்பிற்கு தலைவணங்கி இந்த ஆண்டு இரண்டு நிகழ்வுகளும் எந்தக் கலவரமும் இன்றி நடந்தேற இரு சமுதாயத் தலைவர்களும் பொறுப்பெடுக்கவேண்டும். பிரிவினையை ஏற்படுத்தி மதமாற்றி பண்பாட்டை அழிக்கும் நாசகாரச் சக்திகளை இனம் கண்டு அவற்றை ஒடுக்கும் பணியை அனைத்து சாதித் தலைவர்களும் அரசும் மேற்கொண்டு அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழ வழிவகைச் செய்யவேண்டும்.

0 comments:

Post a Comment