பாக்தாத்: ஈராக்கில் மற்றொரு அமெரிக்க பத்திரிகையாளர் ஐ.எஸ்.பயங்கரவாதிகளால் தலை துண்டித்து கொடூரமாக கொல்லப்பட்டார். வீடியோவில் இக்காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்காசிய நாடுகளில் ஒன்றான சிரியாவில், அமெரிக்க பத்திரிகையாளர், ஜேம்ஸ் போலே என்பவர், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்படும், 'வீடியோ' வெளியிடப்பட்டுள்ளது. படுகொலை செய்யப்படும் முன், அந்த அமெரிக்க பத்திரிகையாளர், மேற்காசியாவில் அமெரிக்காவின் செயல்பாட்டை கடுமையாக கண்டித்துள்ளார்.
சிறைபிடிப்பு :
சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் பல நகரங்களை கைப்பற்றி, அந்த பகுதியை, இஸ்லாமிய நாடாக அறிவித்துள்ள, அல் குவைதா பயங்கர வாத அமைப்பிலிருந்து பிரிந்த, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், சிரியா மற்றும் ஈராக் அரசு படைகளுக்கு எதிராக, கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கடந்த 2012 நவம்பரில், சிரியாவுக்கு செய்தி சேகரிக்கச் சென்ற,அமெரிக்க, 'பிரிலேன்ஸ்' பத்திரிகையாளர், ஜேம்ஸ் போலே என்பவரை, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் சிறை பிடித்தனர். இவர் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி கொடூரமாக தலை துண்டித்து கொல்லப்பட்டார். இது இணைய தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பத்திரிகையாளர், பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்படும் காட்சிகள், இணையதளங்களில் வெளியாகியுள்ளன. 'அமெரிக்காவுக்கு ஒரு செய்தி' என்ற தலைப்பில், அந்த படுகொலை வீடியோ வெளியானது. அதிபர் ஒபாமா கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவன் ஸ்டோலோப் (31) என்ற பிரிலேன்ஸ் பத்திரிகையாளர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துருக்கி,சிரியா எல்லையில் செய்தி சேகரிக்க சென்ற போது ஐ.எஸ்.பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்டார். நேற்று இணையதளத்தில் அந்த பத்திரிகையாளர் தலை துண்டிக்கப்பட்டுகொல்லப்படும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் அமெரிக்காவில் கிரிமினல் குற்றவாளிகளுக்கு அணிவிக்கப்படும் ஆரஞ்ச் கலர் சீருடை அணிவிக்கப்பட்டு கேமிரா முன் நிறுத்தப்பட்டு ஜேம்ஸ் போலே கொல்லப்பட்டது போன்றே இவரும் கொடூரமாக கொல்லப்பட்டது போன்றே இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
-தினமலர்.
0 comments:
Post a Comment