இந்து முன்னணி தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி
திருவிழாவை பொது விழாவாக சீரும் சிறப்புமாக நடத்தி வருகிறது. இந்து சமுதாய
ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு, பண்பாடு, கலாச்சாரம் பற்றிய நம்பிக்கையை இதன்
மூலம் ஏற்படுத்தி வருகிறது. ஆன்மீக விழிப்புணர்வு மூலம் தேசிய எழுச்சியை
ஏற்படுத்தி வரும் விநாயகர் சதுர்த்தி விழாத் திருவிழாவானது, இன்று
தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் மக்கள் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு திருச்சியில் புதிதாக வைக்கப்படதென 30 விநாயகர்களை காவல்துறை எடுத்துச் சென்று திருமண மண்டபத்தில் வைத்திருந்தது, பெரும் போராட்டம், உண்ணாவிரதம் என இந்து முன்னணியினரும் பொதுமக்களும் வீதிக்கு வந்தபின் காவல்துறை இறங்கி வந்தது.
திருநெல்வேலியில் விசர்ஜன ஊர்வலத்தில் காவல்துறை அதிகாரிகளின் சிலரின் தூண்டுதலால் தடியடி, பலப்பிரயோகம் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர். அறுபதிற்கும் மேற்பட்டோர் மீது பொய் வழக்குகளை காவல்துறை பதிவு செய்துள்ளது. இது அப்பட்டமான மனித உரிமை மீறல். காயமடைந்தோர், கைது செய்யப்பட்டோரை இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் டாக்டர் அரசுராஜா, மாநிலத் துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார் ஆகியோர் சென்று பார்க்க மருத்துவமனை வந்தபோது, காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இது மனிதாபிமானமற்ற செயல்.
சென்னையில் பாடி சுரேஷ் கொலையின் போதும் காவல்துறை இப்படித்தான் நடந்துகொண்டது. பொறுப்பற்றதனத்தாலோ, உள்நோக்கத்தோடு செயல்படுவதாலோ சில காவல்துறை அதிகாரிகள் இதுபோன்ற விஷமத்தனத்தில் ஈடுபடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் யார் என அறிந்து, அது யாராக இருந்தாலும் அவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து முன்னணியினர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை தமிழக அரசு நீக்க உத்தரவிட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
சமூகத்தில் பதட்டத்தை ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் காவல்துறை அதிகாரிகளை அரசு கண்காணிக்க வேண்டும். வேற்று மதத்தினர் ஆர்ப்பாட்டங்கள், அரசியல்வாதிகளின் போராட்டங்களின் போது நடக்கும் அராஜகங்களை கைகட்டி வேடிக்கைப் பார்க்கும் காவல்துறை அதிகாரிகள், இந்துக்களின் விழாக்களில் அமைதியாக செல்லும் மக்கள் மீது தங்களது பலத்தையும், அடக்குமுறைகளையும் ஏவுவது தமிழகத்தின் கண்ணியத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தும் செயல் என்பதை தமிழக முதல்வர் உணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசு காவல்துறையின் அதிகார துஷ்பிரயோகத்தையும், காவல்துறையில் உள்ள சில அதிகாரிகளின் உள்நோக்கத்தையும் புரிந்து நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)

0 comments:
Post a Comment