துபாய்: அல்-குவைதா அமைப்பின் கிளையை இந்திய துணைக்கண்டத்திலும் ஏற்படுத்துவோம் என அந்த அமைப்பின் தலைவரான அய்மான் -அல்-ஜவாகிரி மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
மேற்கு ஆசிய நாடுகள் சிலவற்றில் ஆதிக்கம் செலுத்தி வரும், அல் குவைதா ஆதரவு பயங்கரவாதியான, அபுபக்கர் அல் பாக்தாதி தலைமையிலான, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், ஈராக்,சிரியா ஆகிய நாடுகளில் போரை துவக்கி நடத்தி வருகின்றனர்.
தங்களுக்கு எதிராக அமெரிக்கா விமான தாக்குதல் நடத்தி வருவதை எதிர்த்தும், பதிலடி கொடுக்க ஜேம்ஸ் போலே, ஸ்டீபன் சாட்லாப் ஆகிய இரண்டு அமெரிக்க பத்திரிகையாளர்களை கொடூரமாக தலையை துண்டித்து கொன்றதுடன் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்திய துணைக்கண்டத்தில் கிளை
அல்-குவைதா அமைப்பின் தலைவராக உள்ளவர் அய்மன் அல்- ஜவாகிரி. பின்லாடனின் வலது கரமான இவர். கடந்த 2011-ம் ஆண்டு பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசமாபின்லாடன் அமெரிக்க படைகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர், அந்த அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் ஜவாகிரி பேச்சின் வீடியோ வெளியானது. 55 நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோவில் ஜவாகிரி பேசியதாவது,
ஒடுக்கப்பட்டு, அநீதி இழைக்கப்பட்ட எங்கள் அமைப்பினை இந்திய துணைக்கண்டத்திலும் ஏற்படுத்துவோம். தவிர பர்மா, வங்கதேசம் ஆகிய நாடுகளிலும் , இந்தியாவில் அசாம், குஜராத் , காஷ்மீர் ஆகிய இடங்களிலும் கிளையை நிறுவுவோம். ஏற்கனவே பாகிஸ்தானில் உள்ள அல்குவைதா பிரிவிற்கு ஆசிம் உமர் தலைவராக உள்ளார்.
அதே போன்று இந்திய துணைக்கண்டத்தில் குவைதா -அல்-ஜிகாதி என்ற பெயரில் கிளையை ஏற்படுத்துவோம். இவ்வாறு அந்த வீடியோவில் ஜவாகிரி பேசியுள்ளார்.வீடியோ உண்மையானது தான்: அல்குவைதா வௌியிட்டுள்ள மிரட்டல் வீடியோவின் நம்பக்தன்மை குறித்து ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து உளவுத்துறை நடத்திய ஆய்வில், 55 நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோ ஆன்லைன் மூலம் வௌியிடப்பட்டுள்ளது என்றும், ஆப்கன் எல்லையில் இது படமாக்கப்பட்டுள்ளது என்றும், வீடியோ உண்மையானது தான் என்றும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உத்தரவிட்டுள்ளார்.முன்னதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ஐ.பி, மற்றும் ரா அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
நாடு முழுவதும் அலர்ட்: அல்குவைதா வீடியோ தொடர்பாக நாடு முழுவதும் உளவுத்துறை எ்ச்சரிக்கை ரிப்போர்ட் அனுப்பியுள்ளது. அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களும் அலர்ட்டாக இருக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
-தினமலர்.
0 comments:
Post a Comment