கேரளாவில் சிபிஎம் கட்சியின் தலைவர்களில் ஒருவரின் மகன், சமீபத்தில்
ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தை நல்ல செய்தி
என்று பதிவு செய்திருந்ததால் பெருத்த சர்ச்சை எழுந்துள்ளது. சர்ச்சைக்குரிய பதிவு குறித்து அவருக்கு மிரட்டல் எழவே உடனடியாக பதிவை
அழித்துவிட்டார்.எனினும் ”ஸ்கீரின்சாட்” எடுக்கப்பட்டு இந்த பதிவு சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாக பரப்பபட்டுள்ளது.

கேரள மாநிலம் கண்ணனூர் மாவட்டம் கதிரூர் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் (வயது 27). என்ற ஆர்.எஸ். எஸ். இயக்க தொண்டர். மர்ம கும்பலால்
படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் கண்ணனூரில் படுகொலை
செய்யப்படும் 2-வது இந்து அமைப்பு தொண்டர் மனோஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், மனோஜ் கொல்லப்பட்டது குறித்து தனது பேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ள கேரள சிபிஎம் கட்சியின் தலைவர் பி.ஜெயராஜனின்
மகன் ஜெயின் ராஜ், “இந்த நல்ல செய்தியை கேட்பதற்காக நான் நீண்ட காலம் காத்திருந்தேன். மிகவும் உற்சாகமாக உணர்கிறேன்” என்று
தெரிவித்துள்ளார். இந்த பதிவு நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் இடப்பட்டுள்ளது. பதிவிட்ட சில நிமிடங்களிலேயே இதற்கு ஆயிரம் லைக்களுக்கு மேல் கிடைத்துள்ளது.
மேலும், கடந்த 14 வருடங்களுக்கு முன் தனது தந்தை ஒரு குழுவால் தாக்கப்பட்டார் என்றும் அதில் மனோஜும் ஒருவர் என தனது பதிவை
நியாயப்படுத்தும் வகையில் ஜெயின் மற்றொரு பதிவும் இட்டுள்ளார்.
ஜெயின் ராஜ்ஜின் மேற்கண்ட கருத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதையடுத்து ஜெயின் ராஜ் தனது பதிவை நீக்கிவிட்டார். எனினும் குறைந்த
நேரத்தில் இந்த பதிவு பேஸ்புக்கில் ஸ்கீரின் சாட் எடுக்கப்பட்டு மிகவும் பிரபலமாக்கப்பட்டுவிட்டது. ஜெயின் ராஜின் இந்த பதிவுக்கு பாரதீய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ”கொலை ஒன்றை பற்றி பேஸ்புக்கில் பதிவிடும் நபர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் அவரின் இந்த பதிவு கொலைக்கான திட்டத்தில் அவரது பங்களிப்பு இருப்பது போல் காட்டுகிறது. கொலைகாரர்களை பாராட்டுவது சகிக்க முடியாத செயல்” என்று பாரதீய ஜனதாவின் கேரள மாநில தலைவர் வி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
http://www.dailythanthi.com/News/India/2014/09/03144402/On-Facebook-Politicians-Son-Calls-Kerala-RSS-Activists.vpf
-

0 comments:
Post a Comment