பெரம்பலூர் நகரில் கலெக்டர் தரேஸ் அஹமது உத்தரவின்பேரில் பிரதான சாலைகளில் போக்கு வரத்துக்கு இடையூறாகவும், சாலைவிரிவாக்கத்திற்காக தடையாக உள்ள ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட்டு வரு கிறது. இதில் ஒரு கட்டமாக பெரம்பலூர் ரோவர் நூற் றாண்டு வளைவு முதல் எளம்பலூர் சாலை இணைப்பு வரை புதிதாக அமைக்கப் பட்டுள்ள இருவழிச்சாலையில் ஏறத்தாழ 60 குடிசைகள் முழுமையான ஆக்கிர மிப்பில் உள்ளதும், பல கட்டிடங்கள் வீடுகளின் சுற்றுச்சுவர்கள் ஆக்கிரமித்து கட்டப் பட்டிருந் ததும் நில அளவைத்துறையினர் நிலஅளவை செய்தபோது கண்டறியப்பட்டது.
நோட்டீசு
இதனைத்தொடர்ந்து ஆக் கிரமிப்பில் உள்ள கட்டி டங்கள், சுற்றுச் சுவர்களை தாங்களாகவே அகற்றிக் கொள்ளுமாறு வருவாய்த் துறையினர் சம்பந்தப்பட்ட வர்களுக்கு நோட்டீசு அனுப் பினர். ஆக்கிரமிப்பில் உள்ள கட்டிடப்பகுதிகளில் கடந்த சில தினம் முன்பு அடை யாளம் இடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை உதவி கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் தாசில்தார் முத்தையன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சீனிவாசன், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) தாண்டவமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் போலீஸ் துணை சூப்பிரண்டு சுருளியாண்டி, போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் தலைமையிலான பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 2 பொக்ளின் எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டது.
கடும் எதிர்ப்பு
முத்துநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே கட்டிட உரிமையா ளர்கள் தங்களது கட்டிடம் நில பதிவேட்டில் உள்ளதின் படி(எப்.எம்.பி. ) பொது இடம் விடப்பட்டு, பட்டா இடத்திலேயே கட்டிட சுற் றுச்சுவர் கட்டப்பட்டுள் ளது என்று கடும் எதிர்ப்பு தெரி வித்து வருவாய்த்துறை அதி காரிகளை முற்றுகை யிட்ட னர்.இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கால அவகாசம்
மேலும் ரோவர் சாலையில் உள்ள குடிசைவாசிகள் தங் களது குடிசை வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 50–க்கும் மேற்பட்ட பெண்கள் அதிகாரிகளை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இத னைத்தொடர்ந்து ஆக்கிர மிப்பில் உள்ளவர்கள் தாங்க ளாகவே வீடு உடமை களை அகற்றிக் கொள்ளுமாறு கால அவகாசம் கொடுக்கப் பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணி அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைக்கப் பட்டது.
உதவி கலெக்டர் பேட்டி
இதனைத்தொடர்ந்து உதவி கலெக்டர் மதுசூதன் ரெட்டி நிருபர்களிடம் கூறும் போது, ரோவர் இருவழிச் சாலையில் 108 கட்டிடங்கள் ஆக்கிரமிப்பில் இருந்தன.
இவற்றில் 64 வீடுகள் முழுமையான ஆக்கிரமிப்பில் உள்ளன. மீதம் உள்ளவற்றில் கட்டிட சுற்றுச்சுவர் மட்டும் ஆக்கிரமிப்பில் இருந்தது அகற்றப்பட்டுள்ளது. 64 வீடுகளில் 34 வீடுகளில் குடியிருப்போர் தங்களுக்கு வேறு இடத்தில் சொந்தமாக கட்டிடம் வைத்துள்ளனர். அவர்களுக்கு ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளை அகற்றிக் கொள்ள ஒருவாரமும், வீடு இல்லாத 30 பேருக்கு ஆக்கிர மிப்பை அகற்றிட 2 வார கால அவகாசமும் கொடுக்கப் பட்டுள்ளது. வீடுஇல்லாத வர்களுக்கு எளம்பலூர் எம்.ஜி.ஆர். நகரில் வீட்டுமனை வழங்கவும், பசுமை வீடு கட்டிக் கொடுக்கவும் வரு வாய்த்துறை மூலம் நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித் தார்.
நன்றி- படஉதவி- வசந்த ஜீவா.
0 comments:
Post a Comment