சென்னை சிந்தாதிரிப்பேட்டையில்
அமைந்துள்ள இந்து முன்னணி அலுவலகத்திற்கு 15.09.2014 அன்று மீண்டும் ஒரு
மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இப்படி மிரட்டல் கடிதம் வருவது
வாடிக்கையாகிவிட்டது.
கடிதத்தில் இந்து மத பிரமுகர்களை தண்டிக்கப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும், அக்கடிதத்தில் பாகிஸ்தான் கொடியை வரைந்துள்ளனர்.
இதை வெறும் ஒரு மிரட்டல் கடிதம் தான்
என்று ஒதுக்கி விட முடியாது. ஏனென்றால் இப்படி மிரட்டல் கடிதம் வருவதும்
பின்னர் இந்து மதத் தலைவர்கள் தாக்கப்படுவதும், படுகொலை செய்யப்படுவதும்
தொடர்ந்து நடந்து வருகிறது. இது தமிழகம் ஜிகாதி பயங்கரவாத கூடாரமாக மாறி
வருவதையே காட்டுகிறது.
இந்த கடிதத்தின் அடிப்படையின் இந்து முன்னணியின் மாநகர செயலாளர் திரு. S.S. முருகேசன் அவர்கள் புகார் கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் கட்டுக்கடங்காமல்
தலைவிரித்தாடும் இஸ்லாமிய பயங்கரவாதத்தை இரும்பு கரம் கொண்டு
அடக்காவிட்டால் காஷ்மீராக தமிழ்நாடு மாறும் அவலம் ஏற்படும் என்பதை உணர்ந்து
காவல்துறையும் மத்திய, மாநில அரசுகளிம் விரைந்து நடவடிக்கை எடுக்கும்
என்று எதிர்பார்க்கிறோம்.
-நன்றி- வேத ஆராய்ச்சி நிலையம்.
0 comments:
Post a Comment