Friday, 19 September 2014

செப்டம்பர் மாதம் 3ந் தேதி, இந்தியாவில் ஜிஹாத் தாக்குதல் நடத்துவதற்காக, அல்-காயிதா அமைப்பினர் ஒரு புதிய அமைப்பை உருவாக்க போவதாக அல்-காயிதாவின் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி அறிவித்துள்ளார்.  தனது 55 நிமிட விடியோ காட்சியில், காய்தாட் அல் ஜிஹாத் என்ற பெயரில் ஓரு புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்த அமைப்பினர் முதலில் இந்தியாவில் உள்ள பயங்கரவாதக் குழுக்களையும், இஸ்லாமிய இளைஞர்களையும் ஒன்றுப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த பல ஆண்டுகளாகவே அல்-காயிதாவினர் இந்தியாவில் தங்களது செயல்பாடுகளை செவ்வனே செய்து வருகிறார்கள் என்பது உளவு துறையினருக்கு நன்றாக தெரியும்.  நேரடியாக களத்தில் இறங்க வில்லை என்பதை தவிர,. இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய பயங்கரவாத அமைப்பினருக்கும்  அல்-காயிதாவிற்கும் நெருங்கிய தொடர்ப்பு இருப்பதுடன், பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்தவர்கள் அல்-காயிதாவினர்,  பயங்கரவாத அமைப்புகளுக்கு அதிக அளவில் நிதி உதவி அளித்த அமைப்பு அல்-காயிதாவும் அதன்  தலைவரான ஒசமா பின்லேடன் என்பதும் உலகறிந்த உண்மையாகும்.
இந்நிலையில் அல்-காயிதா இம்மாதிரியான சி.டி.யை வெளியிட வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது.  உலக அளவில் ஒரு சக்தி வாய்ந்த பயங்கரவாத இயக்கமாகவும், இஸ்லாமியர்களுக்கு ஆதரவான இயக்கமாகவும் தன்னை வளர்த்துக் கொண்ட அல்-காயிதா, ஒசாம பின் லேடனுக்கு பின் சற்றே மங்கி வரும் சூழ்நிலை ஏற்பட்டது.  இத் தருனத்தில் ஈராக் மற்றும் சிரியாவில் ஒரு புதிய அமைப்பு ஏற்பட்டு, சிரியா அரசாங்கத்திற்கு பெரும் சவாலாக மாறியதும், உலகில் உள்ள பல்வேறு நாடுகளிலிருந்து இந்த அமைப்பிற்கு ஆட்கள் சேருவதும் அடிப்படையான காரணமாகும்.  கடந்த சில மாதங்களாகவே, இஸ்லாமியர்களின் கேடயமாக இருப்பதாக காட்டிக் கொள்ளும் ஐ.எஸ். ஐ.எஸ். ( இஸ்லாமிக் ஸ்டேட் இன் ஈராக் மற்றும் சிரியா )என்ற அமைப்பின் செயல்பாடுகளே, அல்-காயிதாவின் சி.டி வெளி வருவதற்கு காரணமாகும்.  அல்-காயிதா பலமாக இருந்த ஈராக், ஈரான், சிரியா மற்றும் அதை சுற்றியுள்ள இஸ்லாமிய நாடுகளில் ஐ.எஸ்.ஐ.எஸ்.யின் வளர்ச்சியின் காரணமாக, அல்-காயிதா தனது கால்களை தெற்கு ஆசியாவின் மீத பதிய துவங்கியது.
அல்-காயிதா வெளியிட்டுள்ள சி.டியில் தெற்கு ஆசியாவில் தங்களது கால்களை பதிய குறிப்பாக பர்மா(மியான்மர்), அஸ்ஸாம், பங்களா தேஷ், குஜராத், காஷ்மீர் போன்ற பகுதிகளில் தங்களது அமைப்பை துவங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. (the outfit would be working towards establishing bases in South Asia and would target places like Burma(Myanmar ),  Assam, Bangladesh, Gujarat and Kashmir) . இதன் மூலம் ஒரு உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது, அதாவது ஒசாமா பின்லேடன் மறைந்த பின்னரும், அல்-காயிதாவினர் தனது பயங்கரவாத தாக்குதல்களை நடத்த இருக்கிறது என்பதாகும்.  எவ்வாறு லஷ்கர்-இ-தொய்பா இந்தியாவில் பலமாக உள்ளதே, அதே போல் பங்களா தேஷ் நாட்டிலும் பலமாக உள்ளது.  லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி அமைப்பும் வலுவாக உள்ளது.  இந்த இரண்டு அமைப்புகளும் அல்-காயிதாவுடன் தொடர்பு கொண்ட அமைப்பாகும்.
மேலும் 2011-ம் வருடம் மே மாதம் ஒசமா பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர், இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிலும் நடந்த பயங்கரவாத தாக்குல்களில் அல்-காயிதாவின் பங்கு உள்ளது என அமெரிக்காவின் பென்டகான் தெரிவித்தது. தற்போது வெளியான  சி.டியில் உள்ள மற்றெரு முக்கியமான செய்தி, தாக்குதல் நடத்துவதற்கு தற்கொலை படையை நிறுவ வேண்டும் என்பதாகும்.  இதற்காக இந்தியாவில்  தடை செய்யப்பட்ட  இந்தியன் முஜாஹிதீன் மற்றும் சிமி யின் உறுப்பினர்களை இனம் கண்டு, அவர்கள் மூலமாக தற்கொலை படையை ஏற்படுத்த வேண்டும்.  இவ்வாறு உருவாக்கப்பட்ட தற்கொலை படையின் முதல் பணி காஷ்மீர் மாநிலத்தில் துவங்க வேண்டும்.  2015-ல் காஷ்மீர் சட்ட மன்ற தேர்த்ல் நடப்பதற்கு முன்பாகவே இந்த பணி நிறைவடைய வேண்டும் என்பது தான் அல்காயிதா போட்டுள்ள திட்டம் என உளவுத் துறையினர் தெரிவித்தார்கள் .  மேலும் அந்த சி.டியில் உள்ள வேறு ஒரு செய்தி, பர்மா, காஷ்மீர், பங்களா தேஷ், இஸ்லாமாபாத் ஆகிய பகுதிகளில் உள்ளவர்கள் நமது சகோதர்ர்கள், இவர்களை அல்-காயிதா மறக்கவில்லை, இவர்களும் அல்-காயிதாவை மறக்கவில்லை.  இதை போலவே இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களும் நமது சகோதர்ர்கள் என்பதை மறக்க கூடாது ”( ஆதாரம் 8.9.2014ந் தேதி ஏசியன் ஏஜ் என்ற பத்திரிக்கையில் வெளி வந்த தகவல்)
Tribal militias from Pakistan (in photo) are prime candidates for the Ghazwa-e-Hind  (Photo courtesy: dailymail.co.uk)
Tribal militias from Pakistan (in photo) are prime candidates for the Ghazwa-e-Hind (Photo courtesy: dailymail.co.uk)
இந்தியாவில் தங்களது அமைப்பான காய்தாட் அல் ஜிகாத் அமைப்பை ஏற்படுத்த 2013க்கு முன்பாக இருந்தே திட்டமிட்ட ரீதியில் காய்களை நகர்த்தியுள்ளது.  2013 ஜீன் மாதம் பேசிய பேச்சின் சி.டி. ஜீலை மாதம் 23ந் தேதி வெளியிடப்பட்டது.  அதில்  சிரியாவில் நடக்கும் புனித போருக்கு, இந்திய இஸ்லாமியர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என அல்-காயிதாவின் இரண்டாம் கட்ட தலைவரான மௌலான அசீம் உமர் என்பவர் கூறியதாக செய்தி வெளியாகியது.  இந்த சி.டியின் தலைப்பு ” உங்கள் பகுதியில் ஏன் இன்னும் சூறவளி ஏற்படவில்லை ” என்பதாகும்.  (Why there is no strom in your ocean?  )  இந்த அறிவிப்பின் காரணமாக மூன்று இஸ்லாமியர்கள் சிரியாவில் நடக்கும் புனித போருக்கு தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள்.  பெங்களுரில் பிறந்து சௌதியில் வாழும் கபீல் அகமது ( Kafeel Ahmed), வதோராவில் பிறந்து லன்டனில் வாழும் அபு மூசா அல் ஹிந்த், ( Abu Musa al- Hindi)சிமி இயக்கத்தை சார்ந்த மெக்கானிக்கல் என்ஜினியர் முகமது நியாஸ் அப்துல் ரஷீத்(Mohmmad Niaz Abdul Rashid) எனபவன்.  இவர்களை போல் இன்னும் பலர் அல்-காயிதா கொடுத்த அழைப்பு ஏற்ப சிரியாவில் நடக்கும் புனித போரில் கலந்து கொண்டாக கூறினாலும் முறையான தகவல்கள் கிடையாது.
இந்தியாவில் அல்-காயிதாவின் அமைப்பு துவங்கப்படவில்லை என்பது உண்மையாகும்.  ஆனால், அல்-காயிதாவினால் பயிற்சி பெற்றவர்கள் அதிக அளவில் உள்ளார்கள்.  இந்தியாவில் உள்ள இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான, லஷ்கர்-இ-தொய்பா, இந்தியன் முஜாஹிதீன், சிமி, ஜெய்-இ-முகமது போன்ற அமைப்புகளும், காஷ்மீர் மாநிலத்தில் இயங்குகின்ற பிரிவினைவாத அமைப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.  இதற்கு முக்கியமான காரணம், அல்-காயிதாவின் அடிப்படை கொள்கையாகும்.  அல்-காயிதா என்பது ஒரு பிரந்திய ராணுவமல்ல- இது ஒரு சர்வதேச ராணுவமாக இருக்க வேண்டும், என்ற அடிப்படை கொள்கையும், ஒவ்வொரு தேசத்திலும் நமக்கொரு தளம் இருக்க வேண்டும்.  அர்பணிப்பு உணர்வுள்ள இளைஞர்களைத் தேடிக் கண்டு பிடித்து முதலில் சித்தாந்தப் பயிற்சி அளிக்க வேண்டும்.  அதன் பின்னர் அவர்களுக்கு ராணுவப் பயிற்சி அளிக்க வேண்டும்.   என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அல்-காயிதாவினர் இயங்கினார்கள்.  இதன் காரணமாகவே உலகில் உள்ள பல வேறு நாடுகளில் செயல்பட்டு கொண்டு இருந்த இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி உதவி என்றும், ஆயுத பயிற்சி என்றும், வழங்கி தங்களது நெருக்கத்தை வெளிப்படுத்திக் கொண்டார்கள்.
இந்தியாவில் அல்-காயிதாவின் செயல்பாடுகள்
2008-ம் ஆண்டு ஜீன் மாதம் காஷ்மீரிலிருந்து வெளி வரும் கரண்ட் நியுஸ் சர்வீஸ்( Current News Service ) என்ற செய்தி பத்திரிக்கையில் அல்-காயிதாவின் இந்திய தலைமை பொறுப்பு வகிக்கும் அபு அப்துல் ரஹூமான் அல் அன்ஸாரி (Abu Abdul Rehman Al Ansari  ) என்பவன் கொடுத்த அறிக்கையை , அவனுக்கு பதிலாக,  அபு அபிரஹிம் அல் அஸிம் ( Abu Abrahim Al Asim )என்பவனின் உரை அடங்கிய ஒரு சி.டி. வெளியிடப்பட்டுள்ளது.  இந்த உரையை ஸ்ரீநகரில் உள்ள கௌவ் காடல் (Gaw Kadal )என்ற மசூதியில் வெளியிடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  அந்த சி.டியில் உள்ள வாசகம்,  அமெரிக்கா இந்தியாவில் அதிநவீன ஆயுதங்களை வழங்கி இஸ்லாமியர்களை அடக்க திட்டமிட்டுள்ளது.  இந்த உறவு இஸ்லாமியர்களுக்கு எதிரானது.   இதற்காக அமெரிக்க, இஸ்ரேல் மற்றும் மேற்கித்திய நாடுகளுடன் இந்தியா ஒரு புதிய உறவு துவங்க இருக்கிறது.  இந்த உறவின் காரணமாக காஷ்மீர் பகுதி பிரிக்கப்பட்டு, ஒரு பகுதியில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, இஸ்லாமியர்களை அடக்கவும், அல்லது அவர்களை கொன்று விடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதை எதிர்க்க அனைத்து இஸ்லாமியர்களும் ஒன்றுப்பட வேண்டும்.  இதற்காக இந்தியாவின் மீது புனித போர் தொடுக்கப்பட்டுள்ளது.  காஷ்மீர் தான் புனித போருக்கு நுழைவாயில்,என அந்த அறிக்கையில் குறிப்பாக வெளியிடப்பட்டுள்ள சி.டியில் குரல் பதியப் பட்டுள்ளது.
tolerant Islam - jihad-women

அல்-காயிதாவின் தலைமயிடத்திலிருந்து இந்தயாவில் இஸ்லாத்தின் துரோகிகள் என்ற பெயரில் 2008லே மீன்டும் வெளியிடப்பட்ட சி.டியில், ஹூரியத் கான்பிரன்ஸ் தலைவர்களான சயீத் அலி ஷா ஜிலானி, மீர்வாஸ் மௌலி உமர் ஃபரூக், அப்துல் கானி பட் மற்றும் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் உட்பட்டவர்கள் இஸ்லாத்தின் துரோகிகள் என்றும் குறிப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள் என்று ஜம்மு காஷ்மீர் முதலவராக் இருந்த குலாம் நபி ஆஸாத், பி.டி.பியின் தலைவர் முப்தி முகமது சயீத், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா.  இவர்களைப் போலவே பயங்கரவாத இயக்கத்தின் தலைவர்களான ஹிஜ்புல் முஜாஹிதின் அமைப்பின் சயீத் சலாஹூதின் எனவும்,  இவன் ஹூரியத்  கான்பிரன்ஸ் அமைப்பினரை காப்பாற்றும் காரியத்தில் ஈடுபடுவதால் இவனும் இஸ்லாத்தின் துரோகி என பட்டியிலிட்டு இவர்களுக்கு எதிராகவும் புனித போர் துவங்கப்படும் என விவரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆயுதங்கள், வெடி பொருட்கள் மற்றும் பயிற்சி அளிப்பது, பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ. என்பதும், பெருவாரியான பயங்கரவாத அமைப்பினருக்கு, பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் பகுதியில் பயிற்சி அளிக்கப்படுகிறது.   நேரடியாக கொடுக்கின்ற பயிற்சி என்பது ஐ.எஸ்.ஐ.யை தவிர  வேறு சில அமைப்புகள் மூலமாக கொடுக்கப்படுகிறது. .  பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. மூலமாக நேரிடியாக சில இடங்களில் பயங்கரவாதிகளுக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.   மறைமுகமாக கொடுக்கின்ற பயிற்சி,  இந்தியாவின் எல்லைப் பகுதிகளில்  அளிக்கப்படுகிறது.  அவ்வாறு பயிற்சி அளிக்கப்படும் இடங்கள்,  போக், வடக்கு பகுதியான ஜில்ஜிட், பலுஸ்தான் , நார்த் வெஸ்ட் ஃப்ரான்டியர் புராவின்ஸ் போன்ற பகுதிகளாகும்.  இவ்வாறு பயிற்சி அளிப்பதற்காகவே இஸ்லாமிய ஜிகாத் அமைப்புகள் பாகிஸ்தானில் செயல்படுகின்றன.  இந்த அமைப்புகளில் உள்ளவர்கள் அல்-காயிதாவினால் நன்கு  பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிட தக்கது.
1993லிருந்து பாகிஸ்தானால் உருவாக்கப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவில் செயல்படுகின்றன. இந்த அமைப்புகள் அனைத்தும்  அல்-காயிதாவிற்கு ஆதரவாகவே தங்களது தாக்குதல்களை நடத்தியிருக்கிறார்கள்.  1993ல் பாகிஸ்தான், அல்-காயிதாவிற்கு ஆதரவாகவும், அவர்களின் சிந்தனைக்கு ஏற்ப செயல்படுத்த ஹர்கத்-உல்-முஜாஹூதின், ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி, லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளை உருவாக்கி, அந்த அமைப்பினர் காஷ்மீர் பகுதியில் ஊடுருவ அனைத்து ஏற்பாடுகளையும் செய்தது.  இதன் காரணமாக இந்த அமைப்புகளை சார்ந்தவர்கள் இந்தியாவின் காஷ்மீர் உட்பட மற்ற பகுதிகளுக்கும் தங்களது செயல்பாடுகளை நடத்த இடம் பெயர்ந்தார்கள்.  .
islam-jihad-shia-sunni-castes

2001-ம் வருடம் செப்டம்பர் மாதம் 11ந் தேதிக்கு முன்பு பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி கொடுத்தவர்கள் ஆப்கான் எல்லையில் உள்ள சர்வதேச இஸ்லாமிய முன்னணி என்ற அமைப்பாகும். அல்-காயிதாவினால் உருவாக்கப்பட்ட சர்வ தேச இஸ்லாமிய முன்னணி   உலகில் பல்வேறு நாடுகளில் இயங்கும்  பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்ப்பு கொண்டவர்கள், அவர்களுக்கு பயிற்சி அளிப்பவர்கள்.   இந்தியாவில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் அனைத்தும் பாகிஸ்தானால் உருவாக்கப்பட்டவை, குறிப்பாக ஐ.எஸ்.ஐ மட்டுமே இந்த காரியங்களில் ஈடுபடுகிறது.  இவ்வாறு உருவாக்கப்பட்ட அமைப்புகளான லஷ்கர்-.-.தொய்பா, ஹர்கத்-உல்-முஜாஹூதின், ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி, ஜெய்-இ – முகமது, லஷ்கர்-இ-ஜான்வி ( Lashkar-e-Jhangvi  ) ஆகிய ஐந்து அமைப்புகளும் அல்-காயிதாவின் சர்வதேச இஸ்லாமிய முன்னணியின் ஓர் அங்கமாகும்.  மேலே குறிப்பிடப்பட்டுள்ள  ஐந்து அமைப்புகளில், ஷியா இஸ்லாமியர்களுக்கு எதிராக இருக்கும் அமைப்பான லஷ்கர்-இ-ஜான்வி என்பது மட்டும் பாகிஸ்தானில் இயங்குகிறது, மற்ற நான்கு அமைப்புகளும் இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய அமைப்பாகும்.
பாகிஸ்தான் அரசு அமெரிக்காவின் நிர்பந்த்த்திற்கு உட்பட்டு இந்த ஐந்து அமைப்புகளுக்கு  தடை விதித்தது.  .  இந்த தடையானது, பாகிஸ்தானால் கைப்பற்றப்பட்ட காஷ்மீர் பகுதி, பாகிஸ்தானின் வடக்கு பகுதி, மாலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதி களில் தடை கிடையாது.  விதிக்கப்ட்ட தடைகளில் ஹிஜ்புல் முஜாஹூதின் மற்றும் ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி என்ற இரண்டு பயங்கரவாத அமைப்புகளுக்கும் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ஏன்எனில்.  இந்த இரு அமைப்புகளும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயால் உருவாக்கப்பட்டது, அல்-காயிதாவிற்கு மிகவும் நெருக்கமான அமைப்பாகும்.
பாகிஸ்தானால் உருவாக்கப்பட்ட ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி, ஹிஜ்புல் முஜாஹூதின் என்ற இரண்டு அமைப்புகளும் இந்தியாவில் நடத்திய பயங்கரவாத தாக்குதல்களின் பின்னணியில் அல்-காயிதா எவ்வாறு செயல்பட்டது  என்பதை பார்க்க வேண்டும்.  மேலும் இந்த இரண்டு அமைப்புகளும் எந்ந எந்த அமைப்புகளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டன என்பதும், இதன் மூலம் வேறு சில அமைப்புகளும் துவங்கப்பட்டன, இவ்வாறு வேறு பெயர்களில் துவங்கப்பட்ட அமைப்பிற்கும் அல்-காயிதாவிற்கும் எவ்வாறு தொடர்ப்பு ஏற்பட்டது என்பதையும் கான வேண்டும்.
இந்தியன் முஜாஹிதீன் மீது தேசிய புலனாய்வு பிரிவின் தாக்கல் செய்த 300 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கையில், டெல்லி, மும்பை, ராஜஸ்தான், மகாராஷ்டரா மற்றும் கோவாவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயனிகளை தாக்கும் நோக்கத்தில், ராஜஸ்தானில் புதிதாக இஸ்லாமியர்களை சேர்க்கும் பொறுப்பை அல்-காயிதாவினர் யாசின் பட்கலுக்கு உத்திரவிட்டதாக தெரிவித்தார்கள்.  இந்த தகவல்கள் 2500 இன்டர்நெட் செய்தி பரிமாற்றங்களை  ஆய்வு செய்த்ததில் கிடைத்தாக குற்றப்பத்திரிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.  மேலும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினருக்கு ஆயுத பயிற்சி, தற்கொலை பயிற்சி கற்று தர அல்-காயிதாவினர் ஒப்புக் கொண்டதாகவும், இதற்காக ரியாஸ் பட்கல், ஆப்கான்-பாகிஸ்தான் எல்லைக்கு சென்று அல்-காயிதாவின் பொறுப்பாளர்களை சந்தித்த்தாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
1996-ல் பின் லேடன் விடுத்த ஜிகாத்தில், அமெரிக்காவின் மீது யுத்தம் துவங்குவதாக அறிவித்தவுடன், காஷ்மீரில் இஸ்லாமியர்கள் கொல்லப்படுகிறார்கள் இது மேற்கித்திய நாடுகளின் மீது புனித போர் தொடுக்க தக்க தருணம் என தெரிவித்துள்ளான்.( ஆதாரம் 23.8.2006ந் தேதி அல் க்யத் யட-அரபி என்ற இதழ்)  1996க்கு முன்பகவே இந்தியாவிற்கு வருகை தந்த கலீத் ஷேக் முகமது (அல்-காயிதாவின் கமான்டர்)என்பவன், இஸ்ரேலிய தூதரத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட வேண்டும் இதற்கு முறையான திட்டம் வகுக்க வெண்டும் என்ற கருத்தை வெளியிட்டான். 1990க்கு பின்னர் அல்-காயிதா மூலம் வெளியிடப்பட்ட பல்வேறு அறிக்கைகள், சி.டி.கள் அனைத்திலும், காஷ்மீர் மோதல் சம்பந்தமான கருத்தை தெரிவிக்க மறுக்கவில்லை.  ஆனாலும  கூட தனியாக அல்-காயிதா அமைப்பை ஏற்படுத்துவதற்கு பதிலாக, பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐயினால் உருவாக்கப்பட்ட பயங்கரவாத அமைப்புனருடன் இனைந்து  இந்தியாவில் தாக்குதல்களை நடத்தியது அல்-காயிதா அமைப்பாகும்.
2001 மற்றும் 2002-ல் நடந்த சில சம்பவங்கள் மூலமாகவும் அல்-காயிதா பங்கு பற்றிய செய்திகள் வெளிவர துவங்கின.  2001-ம் வருடம் ஜீன் மாதம் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன் நடத்த தாக்குதல் சம்பந்தமாக சூடான் நாட்டைச் சார்ந்த  அப் அல் ரவ் ஹெவாஸ் ( Abd al-Raouf Hawash) என்பவன் கைது செய்யப்பட்டான்.  இது அல்-காயிதா நேரிடையாக நடத்திய தாக்குதல்.  2002-ல் வெளிநாட்டு பயனிகளை கொல்வதற்கு ஹர்கத்-உல்-முஜாஹிதீனும், அல்காயிதாவும்  இனைந்து நடத்தியது.  2006-ல்  மத்திய அரசுக்கு உளவுத் துறையினர் அளித்த அறிக்கையில் விமானத்தை கடத்தியதிலும், தாஜ்மஹால் மீது தாக்குதல் நடத்துவதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்கள் அல்-காயிதாவினர்.
pakistan_jihad_fund

    2006-ம் வருடம் ஜீலை மாதம் 7ந் தேதி மும்பை குண்டு வெடிப்பு நிகழ்ந்தவுடன்,  அல்-காயிதாவின் பொறுப்பாளராக தன்னை அறிவித்துக் கொண்ட அபு அல் ஹதீத் என்பவன் ஸ்ரீநகரில் இஸ்லாமியர்களுக்கு விடுத்த செய்தி, இஸ்லாமியர்கள் சுதந்திரம் பெறவும், விடுதலை பெறவும் இந்தியாவுடன் யுத்தம் செய்ய வேண்டும் என்ற கூறினான்.  இந்த அறிவிப்பை செய்த போதே இந்தியாவில் அல்-காயிதாவின் ஒரு பிரிவு துவக்கப்படுவதாக்வும், அதன்  தலைவராக அபு அப்துல் ரகுமான் அல் அன்சாரி என்பவன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தான் ( ஆதாரம் The Tribune July 15 ) 2006-ல் திருச்சி விமான நிலையத்தை தகர்க்க 10 நபர்கள் கொண்ட அல்-காயிதாவின் ஊடுருவியுள்ளதாகவும் , இது போல் சென்னை, மதுரை, கோவை மற்றும் கேரளத்தில் இவ்வாறு அல்-காயிதாவினர் ஊடுருவியதாக எ.ப்.பி.ஐ. தகவல்கள் வெளியாகின.
உலகில் உள்ள இஸ்லாமிய நாடுகள், இநதியாவில் உள்ள பயங்கரவாத இயக்கங்களுக்கு, இஸ்லாமிய தொண்டு அமைப்புகள் மூலம் தாங்கள் பெறும் நிதியிலிருந்து குறிப்பிட்ட சதவீத நிதி வழங்கியது ஆய்வின் போது தெரியவந்தது.  துவக்க காலங்களில் தொண்டு நிறுவனங்கள் அளிக்கும் நிதியானது அல்கயிதா அமைப்பின் மூலமாகவே மற்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவியதாக  தெரிவிக்கிறார்கள்.  ஓசமா பின்லேடன் உயிருடன் இருந்த வரை, அவர் மூலமாகவே நிதியானது அனைத்து பயங்கரவாத அமைப்புகளுக்கு வழங்கப்பட்டு வந்துள்ளது.
        சென்ற ஆண்டு காஷ்மீர் மாநிலத்தில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பிற்கு வந்த ரூ10 கோடி பொறுமான போதை மருந்து பிடிக்கப்பட்டது.   JK02F-0217 என்ற பதிவு பெற்ற சரக்கு லாரி இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதியான சலமாபாத் மற்றும் அமன்சேது என்ற இடத்தில் நடத்திய சோதனையில் பிடிப்பட்டது.  இந்த லாரியின் ஓட்டுநர் அப்துல் அஹத் கனி (Abdul Ahad Ganie   ) என்பவனிடம் நடத்திய விசாரனையில் போதை பொருள்கள் எங்கிருந்து அனுப்பட்டது, எந்த பயங்கரவாத இயக்கத்திற்கு இதில் தொடர்ப்பு இருக்கின்றது  என்ற விவரங்கள் தெரியவந்தன  இந்தியன் முஜாஹிதீன் அமைப்பிற்கு அல்-காயிதா மூலம் நிதி கிடைக்கிறது என்பதற்கு இதுவே சான்றாகும்.
நஸிர் அலி அல்-காயிதா இயக்கத்தை சார்ந்தவன்,  ஜீப் டிரைவர், ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பி வடக்கு பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்தவர்களில் இவனும் ஒருவன்.  என்னுடன் மூன்று அரபு பயங்கரவாதிகளுடன் காஷ்மீர் பகுதியில் ஊடுருவியதாக தெரிவித்தான். கடந்த சில மாதங்களாகவே நூற்றுக் கணக்கான அல்-காயிதாவினர் காஷ்மீரில் ஊடுருவியதாகவும் தெரிவித்தான். இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள மோதலை பயன்படுத்திக் கொண்டு, காஷ்மீர் மாநிலத்தை பிரிக்க வேண்டும் என்பதற்காகவே, அல்-காயிதாவினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுவதற்காகவே காஷ்மீரில் ஊடுருவினார்கள் என்ற தகவலும் வெளி வரத் தொடங்கியது.  .இதற்கு முன்பகவே, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உதவியுடன் பாகிஸ்தான் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதியில் அல்-காயிதாவினர் தஞ்சம் புகுந்த்தாகவும், பின்னர் தக்க சமயத்தில் காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவினார்கள் என்றும் தெரிவித்தான்.  ( ஆதாரம் CS Monitor  2002   )
 ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி ( Harkat-ul-jihad-al-islami)
ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி என்ற அமைப்பு அல்காயிதாவின் ஒரு அங்கம்.  அல்-காயிதா உருவாக்கிய சர்வதேச இஸ்லாமிய முன்னணியின் ஒரு பிரிவாகும்.  இந்த அமைப்பினர் 1991லிருந்து காஷ்மீரில் தங்களது ஊடுருவலை துவக்கி சிற்சில தாக்குதல்களை  நடத்த தொடங்கினார்கள். இந்த அமைப்பின் தலைவராக இருந்தவன் இலியாஸ் காஷ்மீரி என்பவன்.  இவன் அல்-காயிதாவின் கமாண்டர்.  2002 நிலவரப்படி இந்திய ராணுவத்துடன் மோதியதில் 650 ஹூஜி அமைப்பினர் கொல்லப்பட்டுள்ளார்கள்.  இதில் பாகிஸ்தான் எல்லையில் உள்ள பஞ்சாப், சிந்து ஆப்கானிஸ்தான், பலுசிஸ்தான் பகுதிகளை சார்ந்தவர்களும் உண்டு.  நவம்பர் 11ந் தேதி தாக்குதலுக்கு பின்னர் பங்களா தேஷ் அமைப்புனருடன் இணைந்து பல தாக்குதல்களை நடத்தியுள்ளார்கள்.  இவர்களின் தாக்குதலுக்கு பின்னால் அல்-காயிதாவின் கமாண்டர் இலியாஸ் காஷ்மீரியின் பங்கும் உள்ளது.
இந்தியாவில் நடந்த தாக்குதல்களில் அல்-காயிதாவின் நேரடி தொடர்பு கிடையாது என பல வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருந்தாலும்,  வேறு வழிகளில் அல்-காயிதாவின் தொடர்பு உள்ளது என்பதை இவர்கள் மறுப்பதில்லை.  22.1.2002ந் தேதி கெல்கத்தாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது நடத்திய தாக்குதல், 21.10.2005ந் தேதி ஹைதராபாத் நகரில் சிறப்பு விசாரனை குழுவின் காவல் அலுவலகத்தின் மீது நடத்திய தாக்குதலும், 2007 பிப்ரவரி மாதம் சம்ஜெதா எக்ஸ்பிரஸ் ரயில் மீது நடத்திய குண்டு வெடி தாக்குதலும், ஹைதராபாத் நகரில் லும்பினி எனுமிடத்தில் 25.5.2007-ல் நடந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்திலும், ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி அமைப்பின் பங்கு உண்டு.  இதன் மூலம் இந்த குண்டு வெடிப்பின் காரணமாக கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் படி இலியாஸ் காஷ்மீரின் பங்கு உள்ளது என்பது நன்கு தெரிந்த்து.  ஆகவே இந்தியாவில் நடந்த பல தாக்குதல்களில் அல்-காயிதாவின் தொடர்ப்பு இருப்பது தெரிய வருகிறது.
jihadi-training

       ஆனால் இந்தியாவில் நடந்த தாக்குதல்களில் ஈடுபட்டுள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கும், அல்-காயிதாவிற்கும் தொடர்ப்பு இருக்கின்றது என்பது  புனாவில் உள்ள ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பிற்கு பின்னர் முழு உண்மையும் வெளியே தெரிய வந்தது.
ஒரு புறம் லஷ்கர்-இ-தொய்பா என்றாலும், மறு புறம் இந்தியன் முஜாஹிதீன் அல்-காயிதாவுடன் நெருங்கிய தொடர்ப்பு வைத்திருந்தார்கள்.  இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் பொறுப்பாளரான அசத்துல்லா அக்தர் ( Asadullah Akhtar alias Haddi  )என்கின்ற ஹத்தி நீதி மன்றத்தில் கிரிமினல் குற்றவியல் சட்டம் 164 வது பிரிவின் படி கொடுத்த வாக்குமூலத்தில், இந்தியன் முஜாஹிதீன் அல்-காயிதாவுடன் எல்லா வழிகளிலும் இனைந்து இருந்தது என்றும், அல்-காயிதா மூலமாகவே ஆயுத பயிற்சி, தற்கொலை பயிற்சி எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்தான்.  2012 டிசம்பர் மாதம் யாசின் பட்கலுடன் ஆன்லைனில் சாட் செய்த போது,  ஹைதராபாத் நகரில் நடத்த வேண்டிய தாக்குதல் சம்பந்தமாக விவாதித்தாகவும் தெரிவித்தான்.
இந்தியாவில் இந்தியன் முஜாஹிதீன்  அமைப்பினர் நடத்திய தாக்குதல்களுக்கு அல்-காயிதா உதவிகளை செய்தது.   தேசிய புலனாய்வு அமைப்பினர் இடைமறித்து கேட்ட உரையாடலில், ரியஸ் கூறும் போது,தற்போது அல்-காயிதாவின் பாதுகாப்பில் இருப்பதாக தெரிவித்தான்.   இஸ்ரேலியர்களை தாக்குவது என்பது தலையாய கடமை என்பதை அல்-காயிதா தெரிவித்த தகவல் என்றும் தெரிவித்தான்.  இதனிடையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்கள் காங்கிரஸ் தலைவர்களை தாக்கியது பற்றி அல்-காயிதாவினர் மகிழ்சி தெரிவித்தாகவும் அந்த உரையாடலில் உள்ளது. ( ஆதராம் 24.2.2014ந் தேதி டைலி  மெயல் பத்திரிக்கை)
அஸ்ஸாமில் உள்ள ஆபத்து
லஷகர்-இ-தொய்பாவினால், அஸ்ஸாம் மாநிலத்தில் மிகப் பெரிய ஆபத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  இதற்கு முக்கியமான காரணம், அல்-காயிதா வெளியிட்ட சி.டியில் குறிப்பிட்டுள்ளது போல், அஸ்ஸாமில் லஷ்கர் அமைப்பினர் வலுவாக உள்ளார்கள்.  அஸ்ஸாம் மாநிலத்தின் எல்லைப் பகுதியான பங்களா தேஷ் நாட்டில் உள்ள கோக்ஸ் பஜார் பகுதியில் லஷ்கர் அமைப்பினருக்கு மூன்று பயிற்சி மையங்கள் அமைத்து கொடுத்தவர்கள் அல்-காயிதாவினர்.  இந்த பயிற்சி முகாம்களில் இளைஞர்களுக்கு ஜிகாத் பயிற்சி அளிக்கப்படுகிறது.  இங்கு பயிற்சி பெறும் இஸ்லாமியர்கள் ரோகின்யா இனத்தைச் சார்ந்தவர்கள்.  இவர்களுடன் அஸ்ஸாம் பகுதியில் உள்ள ரோகின்யா இஸ்லாமிய இளைஞர்களும் பயிற்சி பெறுகிறார்க்ள.  2012-ல் போடே பிரதேச பகுதி மாவட்டங்களில்  நடந்த குறைந்த அழுத்தம் கொண்ட குண்டு வெடிப்பு சம்பவங்களில், போடே தீவிரவாதிகளின் செயலாக இருக்கும் என புலனாய்வு துறையினர் கருத்து தெரிவித்தார்கள்.  முழுமையான விசாரனையின் போதுதான், அல்-காயிதாவினால் பயிற்சி பெற்ற சிமி அமைப்பினரின் செயல் என தெரியவந்த்து.
அஸ்ஸாமில் நடைபெறும் பயங்கரவாத செயல்களில் உல்பாவின் பங்கு முக்கியமானது.  அஸ்ஸாம் மாநிலத்தை தனி நாடாக மாற்ற வேண்டும் என்பதற்காக பல போராட்டங்களையும், பயங்கரவாத தாக்குதல்களையும் நடத்திய இயக்கம் உல்பா என்பதாகும்.  உல்பா அமைப்பின் பல்வேறு மட்ட தலைவர்கள் பயிற்சி பெற்ற இடம் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானின் எல்லைப் பகுதிகளாகும்.   இவர்களுக்கு பயிற்சி கொடுத்தவர்கள் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ யும், அல்-காயிதாவும். உல்பாவின் தலைவன் பரூவா 1992 முதல் அடிக்கடி காரச்சிக்கு சென்று வருபவர்,.  1996-ல் பரூவா காரச்சியில் ஒசாமா பின்லேடனை சந்தித்து பேசியுள்ளார். இந்த பேச்சில் அஸ்ஸாம் தனி நாடாக மாற்ற அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்த்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   மேலும் சர்வதேச இஸ்லாமிய முன்னணியின் சகோதர அமைப்பான இன்டர்நேஷனல் ஜிகாத் கவுன்சில், தாரிக்-உல்-ஜிகாத், ஹர்கத்-உல்-ஜிகாதி-அல்-இஸ்லாமி அமைப்புகளின் உதவியும், பயிற்சியும் பெற்ற அமைப்பு உல்பாவாகும்.
ஆகவே அல்-காயிதா வெளியிட்ட சி.டியில் குறிப்பிட்டுள்ளப்படி, அஸ்ஸாம் மாநிலத்தின் மீது இவர்களுக்கு ஒரு கண் எப்போதும் உண்டு என்பதும், ஏற்கனவே பங்களா தேஷ் நாட்டிலிருந்து லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள்  அஸ்ஸாமில் ஊடுருவியிருப்பதும், இவர்களுக்கு அல்-காயிதா அமைப்பை ஏற்படுத்த எவ்வித தடங்களும் ஏற்படாது.  பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ உல்பா பயங்கரவாதிகளுக்கு வெளிநாடு செல்ல போலியான பாஸ்போர்டுகளை ஏற்பாடு செய்து தந்தது.
எனவே அல்-காயிதா இந்தியாவில் தனது கால்களை பதிய துவங்கியது, தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்கள் மீன்டும் தங்களை தயார்படுத்திக் கொள்ள ஏதுவாகும்.  ஆட்சியில் மோடி அரசு துவக்கத்திலேயே இதை வேறோடு பிடுங்கி எறிய வேண்டும்.

நன்றி-தமிழ் இந்து.

0 comments:

Post a Comment