Friday, 19 September 2014

மூலம்:  Reality Check India  வலைப்பதிவில் வெளியான  கட்டுரை Love Jihad is about airgapping two different legal regimes
தமிழில்: ச.திருமலை
கடவுள் படைத்த இந்த உலகில் லவ் ஜிஹாத் என்றால் என்ன?
எந்தவொரு முஸ்லீமும் எந்தவொரு முஸ்லீம் அல்லாதவருடன் ஈடுபடும் காதல் லவ் ஜிஹாத் என்று அழைக்கப் படுகிறது.
ஒரு ஹிந்துப் பெண்ணுக்கும் முஸ்லீம் பையனுக்கும் நிகழும் காதலை லவ் ஜிஹாத் என்று அழைப்பதற்குக் கீழ்க்கண்ட கூடுதல் அம்சங்களும் கருதப் படுகின்றன.
1) ஏமாற்றும் நோக்கம்
2) பெண் வழக்கமாக அதிகம் படித்தவளாகவோ அல்லது நகரப் பகுதியில் வளர்ந்த பெண்ணாகவோ இல்லாமல் இருத்தல்
3) காதலின் மூலமாக இஸ்லாமுக்கு மதம் மாற்றுதல்
மேற் சொன்ன காரணிகள் தவிர இதில் ஒரு சதித் திட்டம் இருப்பதாகவும் கருதப் படுகிறது. அதாவது மதத் தலைவர்களின் குழுக்கள் வேலை வெட்டி இல்லாமல் திரியும் இஸ்லாமிய இளைஞர்களுக்கு பணம், பயிற்சி மற்றும் பிற சலுகைகளை அளித்து சந்தேகம் கொள்ளாத அப்பாவி இந்துப் பெண்களைக் காதல் செய்து கவர்ந்து வருமாறு திட்டமிட்டுச் செய்கிறார்கள் என்பது. அப்படி காதல் செய்யப் படும் இந்து மற்றும் கிறிஸ்துவப் பெண்களை வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற வைப்பதே அந்த சதித் திட்டம் என்று குற்றம் சாட்டப் படுகிறது.
இரண்டு இணையான சட்டங்களும் திருமண ஒப்பந்தமும்:
இந்தியாவில் ஒரு தனித்துவமான தனிநபர் சட்டம் இருக்கிறது. அதன் படி முஸ்லீம்கள் ஷரியா சட்டத்தின் படியும் இந்துக்கள் இந்து திருமண சட்டப் படியும் தத்தம் திருமணங்களை பதிவு செய்து கொள்ளலாம். இது தவிர விசேஷ திருமண சட்டம் ஒன்றும் இருக்கிறது. அதாவது பதிவு திருமணம். அதன் படி எந்த இரு மதங்களிலும் மணமக்கள் திருமணம் செய்து கொண்டு பதிவு திருமணச் சட்டப்படி தங்கள் திருமணத்தைப் பதிவு செய்து கொள்வது. கேரள கிறிஸ்துவர்களும் கூட லவ் ஜிஹாதுக்கு தங்கள் பெண்களும் பாதிக்கப் படுவதாகப் புகார் கூறினாலும் கூட எளிமையான புரிதலுக்காக நான் கிறிஸ்துவ சீக்கிய மதங்களை இந்த உதாரணத்தில் இருந்து சற்று விலக்க்கிக் கொள்கிறேன்.
எந்தவிதமான சட்டப் படி திருமணத்தைப் பதிவு செய்திருந்தாலும் திருமணம் என்பது மணமக்களுக்கு இடையேயான ஒரு வித சட்டபூர்வமான ஒப்பந்தம் என்பதாகவே கருதப் படுகிறது. அது ஒன்றே அதை இருவர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதில் இருந்து வேறு படுத்துகிறது. மேலும் ஒரு திருமண ஒப்பந்தமானது கணவன் மனைவி இருவருக்கும் சில உரிமைகளையும் பாதுகாப்பையும் கடமைகளையும் வலியுறுத்துகிறது.
இந்து திருமணச் சட்டப் படி உரிமைகளும் கடமைகளும் அனேகமாக கணவன் மனைவி இருவருக்குமே பொதுவானவை. ஆனால் ஷரியா சட்டப் படி இருவருக்குமான விதிகள் பொதுவானவை அல்ல. ஷரியா சட்டப் படி ஒரு பெண்ணின் உரிமைகள் வெகுவாக குறைக்கப் படுகின்றன. மதசார்பின்மை என்னும் அரசு என்ற பெயரில் இஸ்லாமியர்களை சமரசப் படுத்தும் நோக்கத்தில் இந்த இரு வேறு விதமான திருமணச் சட்டங்கள் இந்தியாவில் நிலவுகின்றன. இந்தியாவின் முஸ்லீம்களைத் திருப்திப் படுத்த வேண்டிய இடியாப்பச் சிக்கலுக்காக இந்தியாவின் அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு இந்தியாவின் ஏனைய பிற சட்டங்கள் போலவே இதையும் சட்டமாக்கியுள்ளார்கள். ஆனால் எதுவுமே இலவசமாக வருவதில்லை. எல்லாவற்றிற்கும் உண்டான விளைவுகள் இருக்கவே செய்யும்.
islamic-to-torture-a-hindu-infidel-women
தடுமாறும் நீதி அமைப்புகள்:
இப்படி இரு வேறு விதமான திருமண சட்டங்கள் நிலவும் நிலையில், ஒரு சட்டத்தின் படி (ஷரியா) பெண்ணின் உரிமைகள் அதிரடியாகக் குறைக்கப் பட்டுள்ள நிலையில், பெண்கள் கட்டாயப் படுத்தி இஸ்லாமுக்கு மதம் மாறும் திருமணங்களின் விளைவுகளும் பிரச்சினைகளும் அதிகரிக்கின்றன. பெரும்பாலான லவ் ஜிஹாத் திருமணங்களில் இந்துப் பெண்களே அதிக அளவில் மதம் மாறி இஸ்லாமிய இளைஞர்களைத் திருமணம் செய்து கொள்வதை நீங்கள் அவதானித்திருக்கலாம். இந்து ஆணைத் திருமணம் செய்யும் ஒரு முஸ்லீம் பெண்ணுக்கு இந்துவாக மணம் மாறிக் கொண்டு இஸ்லாமை விட அதிக அளவிலான உரிமைகளைப் பெறும் வாய்ப்பு ஏட்டளவில் மட்டுமே இருக்கிறது.  அத்தகைய திருமணங்கள்  நடைமுறையில் அனேகமாக அதிகம் நடப்பதில்லை (ஒரு சில மிகக் குறைவான விதிவிலக்குகள் இருக்கலாம் – தமிழ் நடிகை குஷ்பு, தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் பாத்திமா பாபு போல).
ஆகவே லவ் ஜிஹாத் திருமணங்களில் பொதுவாக எப்பொழுதுமே இந்துப் பெண்ணே வலுக்கட்டாயமாக இஸ்லாமுக்கு மதம் மாற்றம் செய்யப் பட்டு, அவள் அதுநாள் வரையிலும் அனுபவித்து வந்த பல்வேறு உரிமைகள் பறிக்கப் படுவதே நடைமுறையில் நடக்கிறது. அந்தத் திருமணங்கள் விசேஷ பதிவுத் திருமணச் சட்டத்தின் படி பதிவு செய்யப் படுவதற்குப் பதிலாக ஷரியா சட்டப் படியே வலுக்கட்டாயமாக நடத்தப் படுகின்றன. அதன் படி மதம் மாறுவது கட்டாயமாகின்றது. அப்படி மதம் மாறாவிட்டால் ஷரியா சட்டப் படி அந்தத் திருமணம் செல்லுபடியாகாது. அந்தத் திருமணத்தை ஒரு இஸ்லாமிய மத குருமார் நடத்தித் தர மாட்டார். மணக்கள் இருவருமே இஸ்லாமியர்களாக இருந்தால் ஒழிய அது இஸ்லாமிய நிக்காஹாக கருதப் படாது. ஆகவே மணப் பெண் முதலில் மதம் மாறிய பின்னரே ஷரியா சட்டப் படியான திருமணம் நடைபெறுகிறது. இதையே பதிவு திருமணச் சட்டப் படி செய்திருந்தால் மணப் பெண் மதம் மாற வேண்டிய அவசியம் ஏற்படாது. ஆக இங்கு திருமணத்தின் முக்கிய நோக்கமே மதம் மாற்றுவது என்பதாகிறது. அதனாலேயே இது லவ் ஜிஹாத் என்று வழங்கப் படுகிறது.
எனது பார்வையில் இந்த பிரச்சினை:
ஒரு இந்துப் பெண் ஷரியா சட்டப் படி திருமணம் செய்து கொள்ளும் பொழுது அவள் தன் அடிப்படை உரிமைகளைத் தானே இழந்து விடுகிறாள். ஆக அவள் சம்மதத்துடனேயே திருமணம் செய்து கொண்டிருந்தாலும் கூட அது உண்மையாகவே விவரம் தெரிந்து செய்து கொண்ட திருமணமாகக் கருதப் படாது. அவளை அறியாமலேயே முழு விபரங்களும் தெரிந்து கொள்ளாமலேயே தன் அடிப்படை உரிமைகளை இந்த ஷரியா திருமணம் மூலமாக இழந்து விடுகிறாள் என்பதே உண்மை நிலவரம்.
விபரம் தெரிந்தும், ஷரியா திருமணத்தில் உள்ள விபரீதத்தை உணர்ந்தும், சம்மதிப்பது குறித்து:
love-jihad


ஷரியா திருமணம் செய்து கொள்ளும் இந்து பெண்கள் அனைவருமே வழக்கமாக தங்களுக்கான அடிப்படை உரிமைகள் என்ன என்பதை அறிந்து கொண்ட விபரமறிந்த பெண்களாக இருப்பதில்லை. தங்களது உரிமைகள் குறித்த விபரமின்மை, அறியாமையில் இருக்கும் பெண்களே இந்த ஷரியா திருமணத்தைச் செய்து கொள்கிறார்கள். என்னிடம் இது குறித்து எந்த ஆதாரமும் கிடையாது. இருந்தாலும் இப்படி ஷரியா சட்டப் படி திருமணம் செய்து கொள்ளும் இந்த இளம் இந்துப் பெண்கள் எல்லாம் இது முஸ்லீம்களின் முறைப்படி செய்யப் படும் ஒரு திருமணச் சடங்கு மட்டுமே மற்றபடி தங்கள் அடிப்படை உரிமைகள் எதையும் தாங்கள் இழப்பதில்லை என்று தாங்களாகவே விபரம் தெரியாமல் எண்ணிக் கொள்கிறார்கள் என்று யூகம் செய்கிறேன். அவர்கள் முதலில் உண்மை தெரியாமல் திருமணம் செய்ய ஒத்துக் கொள்கிறார்கள். அப்பொழுது அவளது காதலன் ஏற்கனவே திருமணமானவன் என்பதோ அல்லது இன்னொரு திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருப்பவன் என்பதோ அதில் ஷரியா சட்டப்படி எந்தத் தவறும் கிடையாது என்பதையோ இந்த விபரம் புரியாத அப்பாவி இளம் இந்துப் பெண்கள் உணர்வதில்லை. கர்ப்பமாதலோ அல்லது பிள்ளை பெற்றுக் கொள்வதோ பிரச்சினையை இன்னும் சிக்கல் ஆக்கவே செய்கிறது. ஏனென்றால் விவாகரத்துச் செய்வதோ அல்லது திருமண பந்தத்தில் இருந்து வெளியேறுவதோ இந்த ஷரியா சட்டப்படி அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இந்த வகையான பரிதாபகரமான திருமணங்கள் அனைத்திலும் இதுவே பொதுவான சரடாக, பொதுவான பிரச்சினையாக அமைகிறது. ஆகவே லவ் ஜிஹாத்தில் உள்ள முக்கியமான ஏமாற்று என்னவென்றால் பெண்கள் அவர்கள் அடிப்படை உரிமைகளை இழப்பார்கள் என்ற உண்மை தெரியாமல் ஷரியா திருமணம் செய்து கொள்வதே ஆகும்.
பரிந்துரை:
கலப்பு மதத் திருமணங்களைத் தடை செய்வது என்பது முட்டாள்த்தனமான ஒரு காரியமாக அமைந்து விடும். நான் அதை எந்தவிதத்திலும் மறைமுகமாகக் கூடப் பரிந்துரைக்க விரும்பவில்லை. ஆனால் ஷரியா திருமணம் செய்து கொள்ளும் இந்துப் பெண்கள் தங்கள் உரிமைகளை இழப்பது குறித்து சில பரிந்துரைகளைச் செய்ய விரும்புகிறேன்.
ஷரியா சட்டப் படி முஸ்லீமாக மதம் மாறி திருமணம் செய்து கொள்ளும் இந்துப் பெண்கள் அனைவருக்கும் தாங்கள் எந்தவிதமான உரிமைகளை இழக்கப் போகிறார்கள் என்பதை எடுத்துச் சொல்லி அதைப் படித்துப் பார்த்து கையொப்பம் இடச் செய்வதைக் கட்டாயமாக்க வேண்டும். இதன் மூலமாக குறைந்த பட்சம் அவர்களுக்கு தாங்கள் தங்களது அடிப்படை உரிமைகளை இழக்கப் போகிறார்கள் என்ற குறைந்த பட்ச விபரமாவது தெரிய வரும். அதன் பின்னர் திருமணம் செய்து கொள்வது அவர்களது உரிமை/விருப்பம்.
hindu_women_converting_to_islam


இந்த உரிமை இழப்புப் படிவம் சுருக்கமாகவும் தெளிவாகவும் இருத்தல் அவசியம். கிராமப்புறப் பெண்கள் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் இருக்க வேண்டும். கிராமப்புற இந்துப் பெண்கள் தாங்கள் இழக்கப் போகும் உரிமைகளை முழுப் புரிதலுடன் அறிந்து கொள்ளும் விதமாக இருக்க வேண்டும். உதாரணமாக,
அ) இந்தத் திருமணத்தின் மூலமாக உன் அடிப்படை உரிமைகளை இழப்பாய். அது உனக்குத் தெரியுமா? நீ நிச்சயமாக அவற்றை இழக்க விரும்புகிறாயா? ஆம்/இல்லை
ஆ) உன் கணவன் உன் சம்மந்தம் இன்றியே வேறு பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும் உரிமை இந்தச் சட்டம் அளிக்கிறது என்பதை நீ அறிவாயா? ஆம்/இல்லை
இ) நீ உன் கணவனை விவாகரத்துச் செய்யும் உரிமைகளை இந்தச் சட்டத்தின் படி திருமணம் செய்து கொண்டாய் இழப்பாய். இதை நீ ஏற்றுக் கொள்கிறாயா? ஆம்/இல்லை
என்பன போன்ற எளிய புரிதலைத் தரும் கேள்விகள் அந்த உரிமை இழப்பு ஒப்புதல் படிவத்தில் இருத்தல் வேண்டும்.
பல இந்துப் பெண்கள் முஸ்லீம் ஆண்களை மணந்து கொண்டு சந்தோஷமாகக் குடும்பம் நடத்துகிறார்கள். அவர்களது உரிமைகள் பற்றிய புரிதல்களுடன் திருமணம் செய்து அன்புடன் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்காக எழுதப் பட்டது அல்ல இந்தப் பதிவு.
ஒரு சில பெண்கள் ஷரியா திருமணத்திற்குப் பிறகும் சந்தோஷமாகவும் உரிமைகளை இழக்காமலும் வாழ்கிறார்கள் என்பதற்காக, ஏராளமான விபரம் அறியாத நகர்ப்புற மற்றும் கிராமத்துப் பெண்கள் விபரம் தெரியாமல் தங்கள் உரிமைகளை இழப்பதை நாம் அனுமதிக்க முடியாது. அவர்களுக்கு இந்தத் திருமணம் மூலமாக தாங்கள் என்ன இழக்கப் போகிறோம் என்ற விபரங்களைச் சொல்லியே ஆக வேண்டும் . தங்கள் வாழ்வில் எடுக்கப் போகும் முக்கியமான முடிவான திருமணத்தில் உள்ள பிரச்சினைகளை அவர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் விதத்தில் தகவல்கள் அளிக்கப் பட வேண்டும். அந்தத் தகவல்கள் பரவலாகவும் எளிமையாகவும் அனைத்து இந்துப் பெண்களும் தெரிந்து கொள்ளும் விதத்தில் பரப்பரப் பட வேண்டும்.
( Idea of India  குழுமத்திலிருந்து உங்களுக்காக வழங்கப் படும் இன்னொரு பதிவு இது). 
இவ பேரு ரூமி நாத். அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் பர்க்ஹோல தொகுதி.
இவள் ஹிந்து.  திருமணமானவள். கணவன் குழந்தை உண்டு. கடந்த வருடம் இஸ்லாமியன் ஜாக்கி ஜாகீர் என்பவனுடன் தொடர்பு முகநூல் மூலம் ஏற்பட்டு முதல் கணவன் விவாகரத்து பண்ணும் முன் கல்யாணம் செய்து கொண்டால் அந்த இஸ்லாமியனை.
இவர்களது கல்யாணத்துக்கு உறுதுணையாய் இருந்தது அஸ்ஸாம் அமைச்சர் சித்திக் அஹ்மத். இவள் இஸ்லாமிய மதத்துக்கு தன்னை மாற்றி கொண்டு தன பெயரை ராபியா சுல்தானா இட்டுகொண்டாள். பல எதிர்ப்புகள் இங்கே இருந்ததால் பங்களாதேஷ் சென்று விட்டாள்.
அந்த இஸ்லாமியன் இவள் மூலம் பல பண உதவியை பெற்று கொண்டு இவள் மூலமாக ஹிந்தி சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு இவள் அதற்கு உதவி இருக்கிறாள். பின்னர் அவன் இவளை துன்புறுத்த ஆரம்பித்தான் கொடூரமாக.  கடைசியில் 15 லட்சம் ஒரு கார் கேட்டு கொலை செய்ய முயற்சிக்கிறான்..
rumi_nath_love_jihad_victim
இப்பொழுது மீண்டும் இவள் அருணாச்சல் போலீசிடம் தஞ்சம் புகுந்து அவன் மீது குற்ரம் சுமத்தி அவன் ஜெயிலில் இருக்கிறான்.
அந்த இஸ்லாமியன் ஜாகிர் இதற்கு அவன் கூறிய பதில் அனைத்தும் குரான் படி தான் செய்தேன் என்றான். முடிவில் தெரிந்தது அங்கே நடந்தது லவ் ஜிஹாத்.
ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கே இந்த நிலைமை என்றால்..ஒரு சாதாரண குடும்பம் இன்று எண்ணற்ற பெண்கள் லவ் ஜிஹாத் வலையில் சிக்கி சீரழிந்து கொண்டு இருகிறார்கள்..இது அதிகாரபூர்வமான உண்மை..கட்டாய மதமாற்றம் மற்றும் பெண் விற்பனை அடிமைகளாக அனுப்ப படுகிறார்கள் இத மூலம்…காஷ்மீர் முதல் கன்னியாகுமரி முதல் இந்த அவலம் இருக்கிறது…இதை வெளிப்படையா சொல்ல தயக்கம் காட்டுகிறது அரசு..
இதை வெளிப்படையாக தேசிய அபாயமாக அறிவிக்க அரசும் ஊடகங்களும் முன் வரவேண்டும்..மத சார்பின்மைக்காக வாயை பொத்தி கொண்டு இருப்பது..இன்னும் பல பேர் வாழ்க்கைகள் துளைத்து விடும்…எத்தனை பேர் பாதிக்க பட்டு இருக்கிறார்கள் என்பதை வெளியே கொண்டு வரவேண்டும்..விழிப்புணர்வு கொடுக்கவேண்டும்.
- ரத்தினகுமார் வழக்கறிஞர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது

நன்றி-தமிழ் இந்து.

0 comments:

Post a Comment