பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய 16–வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு இன்று (வியாழக் கிழமை) இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தின் 16 வது வார்டு அதாவது இனாம் அகரம், திருவாலந்துறை, அயன்பேரையூர் ஊராட்சி பகுதிகளை உள்ளடக்கிய ஒன்றிய கவுன்சிலராக பதவி வகித்த சின்னம்மாள் கடந்த ஆண்டு உடல் நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து இந்த பதவிக்கு இடைத்தேர்தல் இன்று ( வியாழக்கிழமை ) நடக்கிறது.
இதில் அ.தி.மு.க சார்பில் கண்ணகிகுணசேகரன் இரட்டை இலை சின்னத்திலும், தேசிய ஜனநாயக கூட்டனியில் ஐ.ஜே.கே சார்பில் மலையம்மாள் தென்னை மரம் சின்னத்திலும் நேரடியாக போட்டியிடுகிறார்கள். இதனால் இரு கட்சியினரும் கடந்த சில நாட்களாக வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து தீவிரமாக வாக்கு சேகரித்தனர்.
நேற்று (செவ்வாய் கிழமை) மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஐ.ஜே.கே வேட்பாளர் மலையம்மாளுக்கு ஆதரவு கேட்டு தே.மு.தி.க மாவட்ட செயலாளர் துரை.காமராஜ், ஒன்றிய செயலாளர் சிவா.ஐயப்பன், ஐ.ஜே.கே மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் அன்புதுரை, மாவட்ட செயலாளர் அசோகன் மற்றும் திரளானோர் கலந்து கொண்டு தீவிரமாக வாக்கு சேகரித்தனர்.
-தினமணி,
0 comments:
Post a Comment