கோவை: லோட்டஸ் டிவியில் பத்மினி பிரகாஷ் (31) என்ற திருநங்கை, செய்தி வாசிப்பாளராக பணியமர்த்தப்பட்டுள்ளார். இதன்மூலம், இத்துறையில் பணிபுரியும் முதல் திருநங்கை என்ற பெருமையை பத்மினி பிரகாஷ் பெற்றுள்ளார்.
கோவையை சேர்ந்த திருநங்கை பத்மினி
பிரகாஷ். இவருக்கு தற்போது 31 வயதாகிறது. ஆணாக இருந்த இவர் பிகாம் முதலாம்
ஆண்டு படிக்கும் போது தனக்குள் ஏற்பட்ட மாற்றத்தை இவர் உணர்ந்துள்ளார்.
குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடியினால் கோவையை விட்டும் குடும்பத்தை விட்டும் பிரிந்து சென்ற அவர், நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் கோவைக்கு திரும்பினார்.
குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடியினால் கோவையை விட்டும் குடும்பத்தை விட்டும் பிரிந்து சென்ற அவர், நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் கோவைக்கு திரும்பினார்.
அழகான தோற்றம் காரணமாக திருநங்கைகளுக்கு இடையே நடைபெற்ற பல்வேறு அழகிப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.
தற்போது கோவையில் இருந்து செயல்படும்
லோட்டஸ் தொலைக்காட்சியின் செய்திவாசிப்பாளராக பணியாற்றுகிறார். ஆகஸ்ட்
15ஆம் நாள் சுதந்திரதினத்தன்று தனது முதல் செய்திவாசிப்பாளர் பணியை லோட்டஸ்
டிவியில் தொடங்கியுள்ளார் பத்மினி பிரகாஷ். தினசரி இரவு 7மணி செய்திகளை
வாசிக்கிறார் பத்மினி பிரகாஷ். செய்திவாசிப்பதோடு மட்டுமல்லாது தற்போது
டிவி சீரியல் ஒன்றிலும் பத்மினி பிரகாஷ் நடித்து வருகிறார்.
பத்மினி பிரகாஷ்க்கு திருநங்கைகள் மட்டுமல்லாது ஏராளமானோர் வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment