Sunday, 8 June 2014


பெரம்பலூரில் மின்நுகர்வோர் குறை தீர்க்கும்கூட்டம் வரும் 10ம் தேதி நடக்கிறது என பெரம்பலூர் கோட்ட செயற் பொறியாளர் தேவராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது :
பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் தமிழ் நாடு மின்சார வாரியத்தின் மேற்பார்வைப் பொறியாளர் வளர்மதி தலைமையில் நடை பெறுகிறது. கூட்டம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பெரம்பலூர் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் 10ம் தேதி காலை 11மணி முதல் மதியம் 1 மணிவரை நடைபெறுகிறது. இதில் பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட மின்நுகர்வோர் தங்களுடைய குறைகளை நேரில் முறையிட்டு பயன் பெறலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார் v.kalathur seithi .

-தினகரன்.

0 comments:

Post a Comment